‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ முதல் ‘பாரதி கண்ணம்மா’ வரை – ரசிகர்களின் டாப் கமெண்ட்கள்!

0
'பாண்டியன் ஸ்டோர்ஸ்' முதல் 'பாரதி கண்ணம்மா' வரை - ரசிகர்களின் டாப் கமெண்ட்கள்!
'பாண்டியன் ஸ்டோர்ஸ்' முதல் 'பாரதி கண்ணம்மா' வரை - ரசிகர்களின் டாப் கமெண்ட்கள்!
‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ முதல் ‘பாரதி கண்ணம்மா’ வரை – ரசிகர்களின் டாப் கமெண்ட்கள்!

தமிழ் சின்னத்திரையில் பிரபலமான சீரியல்களில் இன்றைய எபிசோட்கள் குறித்த ப்ரோமோ வெளியான நிலையில் அது பற்றி ரசிகர்கள் பதிவிட்ட கமெண்ட்கள் ரசிக்கும் தன்மையுடன் இருக்கிறது. ஒவ்வொரு சீரியலுக்கும் ரசிக்க வைத்த கமெண்ட்கள் பற்றி இந்த பதிவில் காணலாம்.

சீரியல் ரசிகர்கள்:

வெள்ளித்திரை படங்களை போல சின்னத்திரை சீரியல்களுக்கு தனி ரசிகர் பட்டாளமே உள்ளது. இதனால் பல தொலைக்காட்சி நிறுவனங்கள் போட்டி போட்டுகொண்டு புதிய சீரியல்களையும், ஏற்கனவே ஓடிக் கொண்டிருக்கும் சீரியல்களில் எதிர்பார்க்காத பல ட்விஸ்ட்களையும் கொண்டு வந்துள்ளன. எத்தனை சீரியல்கள் ஒளிபரப்பானாலும் வார இறுதியில் வெளியாகும் டிஆர்பி ரேட்ங்கில் முதல் 5 இடங்களை பெறும் சீரியல்களே அதிக கவனம் பெறுகின்றன. அந்தந்த சீரியல் எபிசோட்களை விட தினமும் நடைபெற உள்ள டிவிஸ்ட்கள் குறித்த ப்ரோமோ தான் மக்களிடம் வரவேற்பை பெற்றுள்ளது. அதில் ரசிகர்கள் செய்யும் கமெண்ட்களும் காமெடி கலந்தது போல உள்ளது.

பாண்டியன் ஸ்டோர்ஸ்

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் தற்போது சூரியவம்சம் கதை போல சென்று கொண்டிருக்கிறது. கண்ணனும், ஐஸ்வர்யாவும் தனியாக வீடு எடுத்து தங்கி உள்ளனர். இந்த ப்ரோமோவை பார்த்த ரசிகர் சூர்ய வம்சம் ஆரம்பம் என்று கூறியுள்ளார். மற்றொரு ரசிகர் இதுக்கு கண்ணன் வீட்டுல சேர்த்து இருக்கலாம் டா என கூறியுள்ளார். மேலும் ஒரு ரசிகர் ஹலோ டைரக்டர் சார் கதிர் கலெக்டர் ஆகுற கதை எப்போ வரும் என கேட்டுள்ளார். தனம் அனுப்பி வைத்த பொருட்களையெல்லாம் வைத்து கண்ணன் ஸ்டோர்ஸ் ஆரம்பிச்சா நல்லா இருக்கும் என ஒரு ரசிகர் கூறியுள்ளார். அப்போ என் பேச்சுக்கு மரியாதை இல்லை இந்த வீட்டுல நடத்துங்க டா என மூர்த்தி நினைப்பது போல ஒருவர் பதிவிட்டுள்ளார்.

பாக்கியலட்சுமி

பாக்கியலட்சுமி சீரியலில் கோபி ராதிகாவிடம் பாவம் போல பேசி நடிக்கும் ப்ரோமோ வெளியாகி உள்ளது. இந்த ப்ரோமோவை பார்த்த ரசிகர் ஒருவர் இத மாதிரி ஆள பாத்ததே இல்ல சாமி என்று பதிவிட்டுள்ளார். மற்றொரு ரசிகர், டைரக்டர் சார் தயவு செய்து நல்ல ஸ்கிரிப்டா எடுங்க என்று கூறியுள்ளார். மேலும் ரசிகர்கள் பலரும் குடும்ப பெண்கள் பலரின் வாழ்க்கை இப்படித்தான் என்பது போல பல கமெண்ட்கள் வெளியாகி உள்ளது.

மூன்றாவது முறை திருமணம் செய்து கொண்ட பிரகாஷ் ராஜ் – வைரலாகும் புகைப்படங்கள்!

பாரதி கண்ணம்மா

பாரதி கண்ணம்மா சீரியலில் லட்சுமி கண்ணம்மாவின் அப்பாவை தாத்தா என்று அழைக்கும் ப்ரோமோ வெளியாகி உள்ளது. இந்த ப்ரமோவை பார்த்த ரசிகர் ஒருவர் ஏதோ இப்பவாது ஒரு நல்ல சீன் போட்டீங்கள்ளே என்று பதிவிட்டுள்ளார். மற்றொரு ரசிகர் அவ்ளோதான் இதற்கு மேல் வெறும் அழுகாட்சி தானா என்று கமெண்ட் செய்துள்ளார்.

TN Job “FB  Group” Join Now

ராஜா ராணி 2

ராஜா ராணி 2 சீரியலில், பார்வதியை மாட்டிவிட அர்ச்சனா செய்யும் திட்டங்கள் குறித்த ப்ரோமோ வெளியாகி உள்ளது. இந்த ப்ரோமோவை பார்த்த ரசிகர் ஒருவர் எல்லா குடும்பத்துலயும் இப்படி ஒரு கேரக்டர் சுத்திக்கிட்டு தான் இருக்கு என்று கூறியுள்ளார். மற்றொரு ரசிகர் ஒருத்தருக்கு கெட்ட பேர் வாங்கி கொடுக்க என்னெல்லாம் பண்றாங்க பாருங்க என்று பதிவிட்டுள்ளார். மேலும் ஒரு ரசிகர் எல்லா சீரியலும் ஒரே மாதிரிதா இருக்கு இதுல என்ன புதுமை கதைய மாத்துங்க டைரக்டர் சார் என பதிவிட்டுள்ளார்.

நாம் இருவர் நமக்கு இருவர்

நாம் இருவர் நமக்கு இருவர் சீரியலில், இரட்டை வேடத்தில் ஹீரோ வருவது போல காட்சிகள் ஒளிபரப்பாக உள்ளதாக ப்ரோமோ வெளியாகி உள்ளது. இந்த ப்ரோமோவை பார்த்த ரசிகர் ஒருவர் இந்த சீரியல் ஹிட் ஆனதுக்கு காரணமே செந்தில் அண்ணனின் அற்புதமான நடிப்பு தான் என கூறியுள்ளார். மற்றொரு ரசிகர் இருவர் நமக்கு இருவர், சீக்கிரம் இருவரும் ஒன்னு சேரனும் அம்மா பாசம் சீக்கிரம் கிடைக்கணும் என பதிவிட்டுள்ளார். நான் பார்க்கும் ஒரே ஒரு நாடகம் இது மட்டும்தான் என பதிவிட்டுள்ளார்.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!