விஜய் டிவி “பாண்டியன் ஸ்டோர்ஸ்” முதல் சன் டிவி “ரோஜா” வரை – ப்ரோமோக்களில் டாப் கமெண்ட்ஸ்!!

0
விஜய் டிவி
விஜய் டிவி "பாண்டியன் ஸ்டோர்ஸ்" முதல் சன் டிவி "ரோஜா" வரை - ப்ரோமோக்களில் டாப் கமெண்ட்ஸ்!!
விஜய் டிவி “பாண்டியன் ஸ்டோர்ஸ்” முதல் சன் டிவி “ரோஜா” வரை – ப்ரோமோக்களில் டாப் கமெண்ட்ஸ்!!

தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் டாப் சீரியல்களின் இன்றைய எபிசோட் குறித்த ப்ரோமோ வெளியான நிலையில், அதில் ரசிகர்கள் வெளியிட்ட கமெண்டுகள் பற்றி இந்த பதிவில் காணலாம்.

டாப் கமெண்ட்ஸ்:

தமிழ் தொலைக்காட்சிகளில் பல்வேறு சீரியல்கள் இருந்தாலும் மக்கள் மனதை கவர்ந்த ஒரு சில சீரியல்களே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. என்ன தான் 30 நிமிட கதையுடன் சீரியல்கள் ஒளிபரப்பானாலும். இன்றைய எபிசோட் பற்றிய 30 வினாடி ப்ரோமோவிற்கு ரசிகர்கள் அதிகம். மேலும் அந்த ப்ரோமோக்களில் ரசிகர்கள் செய்யும் கமெண்ட்கள் ரசிக்கும் தன்மையுடன் உள்ளது.

பாண்டியன ஸ்டோர்ஸ்

பாண்டியன ஸ்டோர்ஸ் சீரியலில் கடைசியாக அம்மா முகத்தை கூட பார்க்காத கண்ணன் மொட்டை அடித்து அம்மாவிற்கு இறுதி காரியத்தை செய்கிறார். இது பார்த்து மூர்த்தி அதிர்ச்சியில் இருக்கிறார். இது குறித்த ப்ரோமோ வெளியான நிலையில்,இந்த ப்ரோமோவை பார்த்த ரசிகர் ஒருவர் கண்ணன் தப்ப உணர்ந்துவிட்டான் இனிமேலாவது அவனை வீட்டுக்கு அழைச்சிட்டு போங்க என்று கூறியுள்ளார்.

‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ லட்சுமி அம்மாவிற்கு குவியும் பாராட்டுகள் – ஜீவா இன்ஸ்டா பதிவு!

மற்றொரு ரசிகர் நீங்க யாருமே அம்மாவுக்கு மொட்டை அடிக்கல ஆனா கண்ணன் மொட்டை அடிச்சிருக்கான் இப்பவாது புரிஞ்சிக்கோங்க என்று கூறியுள்ளனர். மேலும் ரசிகர்கள் பலரும் கண்ணனின் நடிப்பு குறித்து பாராட்டும் வகையில் கருத்துக்களை பதிவிட்டுள்ளனர்.

பாரதி கண்ணம்மா

பாரதி கண்ணம்மா சீரியலில், பாரதி திருந்தியது போல காட்டப்பட்ட நிலையில், தற்போது அது நடிப்பு என சொல்லி ப்ரோமோ ஒன்று வெளியாகி உள்ளது. இந்த ப்ரோமோவை பார்த்த ரசிகர் ஒருவர் பாரதிக்கு பைத்தியம் முத்திப்போச்சு என்று கூறியள்ளார். மற்றொரு ரசிகர் இதெல்லாம் ரொம்ப ஓவர் என்று கூறியுள்ளார். மேலும் ரசிகர்கள் பலரும் பாரதியை பைத்தியம் என்றே பதிவிட்டுள்ளனர்.

பாரதி கண்ணம்மாவை பின்னுக்கு தள்ளி பாண்டியன் ஸ்டோர்ஸ் முதலிடம் – TRP ரேட்டிங் வெளியீடு!

அதில் ஒரு ரசிகர் இந்த நாடகம் பெயர் பாரதி கண்ணம்மா இல்ல ஜவ்வு மிட்டாய் என கூறியுள்ளார். இந்த சீரிலுக்கு கிளைமாக்ஸ் எல்லாம் வேண்டாம்…நாங்க அதெல்லாம் கேக்கல, தயவுசெய்து இப்பவே ஸ்டாப் பண்ணிடுங்க என்று கூறியுள்ளார். மற்றொரு ரசிகர் இவர் டாக்டர் பாரதி இல்லை சைகோ பாரதி என்று கூறியுள்ளார்.

பாக்கியலட்சுமி

பாக்கியலட்சுமி சீரியலில், பாக்கியா சமையல் ஆர்டர்களை கொடுத்துவிட்டு தாமதமாக வீட்டிற்கு வருகிறார். அவர் ஜெனி செழியன் பிரச்சனைகளை கண்டுகொள்ளவில்லை என திட்டு வாங்குவது போல ப்ரோமோ வெளியான நிலையில் இந்த ப்ரோமோவை பார்த்த ரசிகர் ஒருவர், வீட்ல எப்போதான் திட்டு இல்ல.. எல்லா நாளும் திட்டு மழைதான் என ஒரு ரசிகர் கூறியுள்ளார். மற்றொரு ரசிகர் எல்லா பிரச்சனைக்கும் காரணம் பாக்யா தான் என்று அந்த குடும்பத்தில் இருக்கும் எல்லாருக்கும் நினைப்பு என்று பதிவிட்டுள்ளார். மற்றொரு ரசிகர் நீங்க எடுத்து சமையல் பண்ணுங்க நல்லாதான் பண்ணுவீங்க ஏன்னா நீங்கதானே சீரியல் நாயகி என ஒரு ரசிகர் கூறியுள்ளார். மேலும் ரசிகர்கள் பலரும் சீரியல ஒவ்வொருத்தரும் ஒரு ட்ராக்ல போறாங்க என்றே பதிவிட்டுள்ளனர்.

ராஜா ராணி 2

ராஜா ராணி 2 சீரியலில்,சரவணன் செய்த தப்பிற்கு அம்மாவிடம் மன்னிப்பு கேட்ட நிலையில் அவர் மன்னித்து சரவணனிற்கு சாப்பாடு ஊட்டி விடுகிறார். இது குறித்த ப்ரோமோ வெளியான நிலையில், இந்த ப்ரோமோவை பார்த்த ரசிகர் ஒருவர் ரொம்ப நாளைக்கு அப்புறம் மகிழ்ச்சியான சீன் போட்டு இருக்காங்க பரவாயில்லை நல்லாருக்கு என்று கூறியுள்ளார். மற்றொரு ரசிகர் இப்போ நல்லாதான் இருக்கும் அடுத்த ரெண்டு நாள்ல பெரிய பிரச்சனை வெடிக்கும் பாருங்க என்று கூறியுள்ளார். மேலும் ரசிகர்கள் பலரும் நல்ல சீன் என்றும், அடுத்து என்ன பூகங்கம் வரப்போகுதோ என்றும் கூறியுள்ளனர்.

ரோஜா

ரோஜா சீரியலில், அர்ஜுனிற்கு போன் செய்து பூஜை சாக போவதாக சொல்கிறார். இது குறித்த ப்ரோமோ வெளியான நிலையில், இந்த ப்ரோமோவை பார்த்த ரசிகர் ஒருவர் செண்பகம் ரோஜாவும் சந்தோஷம் மாக இருப்பதை பார்த்து பொறாமை படும் அனு என பதிவிட்டுள்ளார். மற்றொரு ரசிகர் பூஜா நாளைய எபிசேட்டுக்கு வருவதை பார்க்க ஆவலுடன் எதிர்பார்க்கிறோம் என்று கூறியுள்ளனர். மேலும் ரசிகர்கள் பலரும் ரோஜா செண்பகம் இருவரும் இணைந்தது குறித்து மகிழ்ச்சியையே பதிவிட்டுள்ளனர்.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!