‘விஜய் டிவி’ முதல் ‘சன் டிவி’ வரை – சீரியல்களின் டாப் கமெண்ட்ஸ்!

0
'விஜய் டிவி' முதல் 'சன் டிவி' வரை - சீரியல்களின் டாப் கமெண்ட்ஸ்!
'விஜய் டிவி' முதல் 'சன் டிவி' வரை - சீரியல்களின் டாப் கமெண்ட்ஸ்!
‘விஜய் டிவி’ முதல் ‘சன் டிவி’ வரை – சீரியல்களின் டாப் கமெண்ட்ஸ்!

தமிழ் சின்னத்திரையில், பல்வேறு சீரியல்கள் ஒளிபரப்பப்பட்டாலும் குறிப்பிட்ட சீரியல்களுக்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு உண்டு. இந்நிலையில் அந்த சீரியல்களில் இன்றைய எபிசோட் குறித்த ப்ரோமோக்கள் வெளியான நிலையில், அதில் ரசிகர்கள் தங்களது எதிர்பார்ப்பை தொடர்ந்து கமெண்ட் செய்து வருகின்றனர். அதில் டாப் கமெண்ட்ஸ் பற்றி இந்த பதிவில் பார்க்கலாம்.

டாப் கமெண்ட்ஸ்:

தமிழ் சின்னத்திரையில், விஜய் டிவி, ஜீ தமிழ், சன் டிவி என தொலைக்காட்சி நிறுவனங்கள் போட்டி போட்டுக் கொண்டு சீரியல்களை ஒளிபரப்பி வருகின்றன. அவை அனைத்துமே மக்களுக்கு பிடித்தமானதாக இருக்கிறதா? என கேட்டால் இல்லை என்று தான் சொல்ல வேண்டும். குறிப்பிட்ட சீரியல்கள் மக்களின் அன்றாட வாழ்க்கையில் முக்கிய பங்கு வகிக்கிறது. இந்நிலையில். அந்த சீரியல்களில் நடைபெறும் இன்றைய எபிசோடுகள் குறித்த ப்ரோமோ வீடியோ ரசிகர்களிடம் தினசரி எதிர்பார்ப்பாக இருக்கிறது. அதில் ரசிகர்கள் செய்யும் கமெண்ட்கள் பற்றி இந்த பதிவில் பார்க்கலாம்.

பாண்டியன் ஸ்டோர்ஸ்

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில், அம்மா இறந்தது கூட தெரியாமல் இருக்கும் கண்ணன், இளைய பையனை விட்டு அம்மாவிற்கு இறுதி சடங்குகள் நடைபெறுகிறது. இந்நிலையில் இது குறித்த ப்ரோமோ வெளியான நிலையில், இதை பார்த்த ரசிகர் ஒருவர் கண்ணன் கதாபாத்திரத்தின் மீது பழிபோட போகிறீர்கள் என தெரிவித்துள்ளார்.

“பாரதி கண்ணம்மா” பிரபலம் அகிலன் அடுத்தடுத்து 3 படங்களில் கமிட் – ரசிகர்கள் வாழ்த்து!

மற்றொருவர் இந்த கண்ணன் கதாபாத்திரத்தை நடிகர் பரத் நடித்த எம் மகன் திரைப்படத்தில் இருக்கும் வடிவேலு போல ஆக்கி விட்டீர்கள் என கமெண்ட் செய்து கலாய்த்து வருகின்றனர்.

பாரதி கண்ணம்மா

பாரதி கண்ணம்மா சீரியலில், லட்சுமி கூறும் ஒற்றை வார்த்தை சீரியலில் முக்கியமான திருப்பு முனையை ஏற்படுத்தும் என்று ரசிகர்களின் மத்தியில் அதிக எதிர்பார்ப்பை தூண்டியுள்ளது.

பாக்கியலக்ஷ்மி

பாக்கியலக்ஷ்மி சீரியலில் பாக்கியாவின் சமையலை அனைவரும் பாராட்டி வருகின்றனர். மேலும் ஜெனியும் தற்போது மாசமாக இருக்கிறார். சிறு வயதில் தாத்தா ஆகிவிட்டதால் சோகமான கோபி குறித்த ப்ரோமோ ஒன்று வெளியானது.

குக் வித் கோமாளி ‘சிவாங்கி’ Anchor ஆக அவதாரம் – அதுவும் இந்த ஷோவிலா? ரசிகர்கள் ஷாக்!

அதை பார்த்த ரசிகர்கள், பாக்கியலட்சுமி என்ற கதாபாத்திரத்தை பலரும் புகழ்ந்து வருகின்றனர். செழியனுக்கு தக்க பதிலடி கொடுப்பதாக கூறி வருகின்றனர். இப்போது தான் சரியான மாமியாராக நடந்து கொள்கிறீர்கள் என்றும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

ராஜா ராணி 2

ராஜா ராணி 2 சீரியலில் சந்தியா செல்லும் பேருந்து விபத்தில் சிக்கியதால் சந்தியாவை காணாமல் சரவணன் தவிக்கும் ப்ரோமோ ஒன்று வெளியானது, இதை பார்த்த ரசிகர்கள் ஒருவர், ‘இருக்கும்போது எந்நேரமும் கரித்து கொட்டிவிட்டு இல்லாதபோது அவரை நினைத்து அழுவது’ என்பதே தமிழ் சினிமாவின் எழுதப்படாத தலையெழுத்து என்று தெரிவித்துள்ளார். சந்தியாவிற்கு சாதாகமாக பல ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

ரோஜா

ரோஜா சீரியலில், செண்பகம் ரோஜா தான் தன்னுடைய மகள் என்ற உண்மையை சொல்வாரா என்பது பற்றிய ப்ரோமோ ஒன்று வெளியானது. இந்த ப்ரோமோவை பார்த்த ரசிகர் ஒருவர், சீரியல் விறுவிறுப்பாக சென்று கொண்டிருந்த கதையில், இயக்குனர் காட்டும் அலட்சியம், நன்றாக சென்ற கதையை ஏன் இவ்வாறு இழுக்கிறார்கள்? என்று ரசிகர்கள் பலரும் தங்களின் ஆதங்கத்தை கொட்டி வருகின்றனர். இரண்டு வாரமாக கதாநாயகன் மயக்கத்திலேயே இருப்பார் என்றும் கதாநாயகி இன்றைய எபிசோடில் அழுவது போலவும் நாளை எபிசோடில் கதறி அழுவது போலவும் ஜவ்வாக இழுத்து வருகிறார்கள் என கமெண்ட்ஸ் போட்டு வருகின்றனர்.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!