விஜய் டிவி “பாண்டியன் ஸ்டோர்ஸ்” முதல் “ரோஜா” சீரியல் வரை – ரசிகர்கள் டாப் கமெண்ட்ஸ்!

0
விஜய் டிவி
விஜய் டிவி "பாண்டியன் ஸ்டோர்ஸ்" முதல் "ரோஜா" சீரியல் வரை - ரசிகர்கள் டாப் கமெண்ட்ஸ்!
விஜய் டிவி “பாண்டியன் ஸ்டோர்ஸ்” முதல் “ரோஜா” சீரியல் வரை – ரசிகர்கள் டாப் கமெண்ட்ஸ்!

தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் டாப் சீரியல்களின் இன்றைய எபிசோட் குறித்த ப்ரோமோ வெளியான நிலையில், அதில் ரசிகர்கள் பதிவிட்ட டாப் கமெண்ட்டுகள் பற்றி இந்த பதிவில் காணலாம்.

டாப் கமெண்ட்ஸ்:

தமிழ் தொலைக்காட்சிகளில் பல்வேறு சீரியல்கள் இருந்தாலும் மக்கள் மனதை கவர்ந்த ஒரு சில சீரியல்களே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. தினமும் காலை முதல் மாலை வரை 30 நிமிட எபிசோடுகள் என சீரியல்கள் ஒளிபரப்பானாலும் இன்றைய எபிசோட் பற்றிய 30 வினாடி ப்ரோமோவிற்கு ரசிகர்கள் அதிகம். மேலும் அந்த ப்ரோமோக்களில் ரசிகர்கள் செய்யும் கமெண்ட்கள் ரசிக்கும் தன்மையுடன் உள்ளது.

பாண்டியன் ஸ்டோர்ஸ்

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் லட்சுமி அம்மா இறந்து விட்டதாக டாக்டர் சொல்லும் ப்ரோமோ ஒன்று வெளியாகி உள்ளது. இந்த ப்ரோமோவை பார்த்த ரசிகர்கள், அனைவரும் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளதாகவே பதிவிட்டுள்ளனர். அதில் ஒரு ரசிகர் இப்போ எல்லா பழியையும் தூக்கி கண்ணன் மேல தான போடுவீங்க என்று கேட்டுள்ளார்.

குடும்பத்தை பிரிந்து 90 நாட்கள், கடுமையாக போராடும் போட்டியாளர்கள் – வெளியான ‘சர்வைவர்’ ப்ரோமோ!

மற்றொரு ரசிகர் கண்ணன எம்.மகன் வடிவேலு மாதிரி ஆக்கீட்டீங்களே என்று கூறியுள்ளனர். மேலும் ரசிகர்கள் பலரும் லக்ஷ்மி அம்மா மரணத்துக்கு கண்ணன் தான் காரணம் என்று பழி வரும் என்பது போல கருத்துக்களை பதிவிட்டுள்ளனா.

பாரதி கண்ணம்மா

பாரதி கண்ணம்மா சீரியலில், ஹேமாவும் லட்சுமியும் ஒரே மாதிரி ட்ரெஸ் போட்டு வருவது போல ப்ரோமோ ஒன்று வெளியாகி இருந்தது. இந்த ப்ரமோவை பார்த்த ரசிகர் ஒருவர் இப்பவாது உண்மையை சொல்லுங்க அகில் என்று கூறியுள்ளார். ஒரு ரசிகர் லக்ஷ்மிக்கு தெரியுரது கூட கண்ணம்மா உனக்கு தெரியலையே என்று கூறியுள்ளார். மேலும் ரசிகர்கள் பலரும் இந்த உண்மை எப்போது தான் தெரிய வரும், சீக்கிரமா தெரியப்படுத்துங்கள் என்று கூறியுள்ளனர்.

பாக்கியலட்சுமி

பாக்கியலட்சுமி சீரியலில், ஜெனி மாசமாக இருப்பதால் வேலைக்கு செல்ல முடியாது என சொல்லி வருத்தப்படுவது போல வீடியோ ஒன்று வெளியாகி உள்ளது. இந்த ப்ரோமோவை பார்த்த ரசிகர் ஒருவர் சரிய சொன்னீங்க பாக்யா அம்மா நீங்க கூட்டிக்கிட்டு போய்ட்டு வாங்க, செழியன வெளியிலே உட்கார வைங்க என்று கூறியுள்ளார். மற்றொரு ரசிகர் இதுதான் ஒரு நல்ல மாமியாருக்கு அடையாளம் என்று கூறியுள்ளார். மற்றொரு ரசிகர் செழியன் மாதிரி ஒவ்வொரு வீட்லயும் ஒரு பையன் இருக்கத்தான் செய்கிறார்கள் என்று கூறியுள்ளார்.

ராஜா ராணி 2

ராஜா ராணி 2 சீரியலில் சந்தியாவின் பிரிவை தாங்க முடியாமல் பேருந்தில் வரும் நிலையில், பேருந்து விபத்தில் சிக்குவது போல ப்ரோமோ ஒன்று வெளியானது. இந்த ப்ரமோவை பார்த்த ரசிகர் ஒருவர் இருக்கும்போது திட்டிக்கொண்டே இருப்பர், அவர் போனவுடன் கவலைப்படுவது. இதுதான் தமிழ் சீரியல் சினிமாவின் எழுதப்படாத விதி என்று கூறியுள்ளார். மற்றொரு ரசிகர் சிவகாமி ஏன் இப்படி நடிக்கிறீங்க என்று கேட்டுள்ளார். மேலும் ரசிகர்கள் பலரும் சந்தியாவுக்கு ஆதரவாகவே கருத்துக்களை பதிவிட்டுள்ளனர்.

ரோஜா

ரோஜா சீரியலில், செண்பகம் ரோஜா தான் என் மகள் என சொல்வார் என்ற எதிர்பார்ப்பில் இருக்கின்றனர். இது குறித்த ப்ரோமோ ஒன்று வெளியான நிலையில் இந்த ப்ரோமோவை பார்த்த ரசிகர் ஒருவர் நாளைக்கு செண்பகம் கோவில் வாசலில் நின்று கொண்டு இருந்தாள் எபிசோட் முடியும் மறுநாள் ரோஜா மயக்கம் போட்டு விழுந்து சரியும் போது எபிசோட் முடியும்.

‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ முல்லையான கதை – நடிகை காவியாவின் சினிமா வரலாறு!

ஐயோ எங்களுக்கு மிகவும் கடுப்பாக இருக்கு என கூறியுள்ளார். மற்றொரு ரசிகர் அர்ஜூன் சார் இன்னும் இரண்டு வாரம் மயக்கத்துல இருப்பார் என கூறியுள்ளார். டைரக்டர் ஜவ்வாக இழுப்பதில் பிஎச்டி வாங்கி இருப்பார் போல.. நம்ம பொறுமையை நல்லா சோதிக்கிறாரு என பதிவிட்டு உள்ளார்.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!