கர்நாடகாவில் பொது போக்குவரத்து தொடக்கம், வழிபாட்டு தலங்கள் திறப்பு – திரும்பும் இயல்பு நிலை!

0
கர்நாடகாவில் பொது போக்குவரத்து தொடக்கம், வழிபாட்டு தலங்கள் திறப்பு - திரும்பும் இயல்பு நிலை!
கர்நாடகாவில் பொது போக்குவரத்து தொடக்கம், வழிபாட்டு தலங்கள் திறப்பு - திரும்பும் இயல்பு நிலை!
கர்நாடகாவில் பொது போக்குவரத்து தொடக்கம், வழிபாட்டு தலங்கள் திறப்பு – திரும்பும் இயல்பு நிலை!

கர்நாடகா மாநிலத்தில் அரசு அறிவித்துள்ள 3ம் கட்ட ஊரடங்கு தளர்வுகள் இன்று காலை 6 மணி முதல் அமலுக்கு வந்துள்ளது. இதனால் பொது போக்குவரத்துகள் மீண்டும் தொடங்கப்பட்டு, வழிபாட்டு தலங்கள் திறக்கப்பட்டு உள்ளதால் இயல்பு நிலை திரும்பி வருகிறது.

ஊரடங்கு தளர்வுகள்:

கொரோனா தொற்றின் பாதிப்புகள் படிப்படியாக குறைந்து வருவதால் கர்நாடகா மாநிலத்தில் ஜூன் 14ம் தேதி முதல் அரசு தளர்வுகளை அறிவித்து வருகிறது. கடந்த மே மாதம் முதல் அங்கு ஊரடங்கு கட்டுப்பாடுகள் அமலில் இருந்த நிலையில், பாதிப்புகள் குறைந்து வருவதால் தளர்வுகள் அளிக்கப்பட்டு வருகிறது. இரண்டாம் கட்டமாக ஜூன் 21ம் தேதி தளர்வுகள் அளிக்கப்பட்டது. தற்போது ஜூலை 5ம் தேதியான இன்று காலை 6 மணி முதல் கர்நாடகாவில் மூன்றாம் கட்ட தளர்வுகள் அமலுக்கு வருகின்றது.

தமிழகத்தில் 9 மாவட்டங்களில் கனமழை வெளுத்து வாங்கும் – வானிலை அறிக்கை!

அரசு அறிவித்துள்ள தளர்வுகள் அனைத்தும் ஜூலை 19ம் தேதி காலை 6 மணி வரை அமலில் இருக்கும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது. மூன்றாம் கட்ட தளர்வு அறிவிப்பின் படி, கல்வி நிறுவனங்கள், திரையரங்குகள், மதுபான கேளிக்கை விடுதிகள் தவிர மற்ற அனைத்தும் அனுமதிக்கப்பட்டுள்ளது. இதனால் இன்று முதல் கர்நாடகா மாநிலம் முழுவதும் இயல்பு நிலை திரும்பும் வாய்ப்புள்ளது என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இருப்பினும் நகரில், இரவு 9 மணி முதல் காலை 5 மணி வரை இரவு நேர ஊரடங்கு அமலில் இருக்கும். அவசர பணிகளுக்காக மட்டும் மக்கள் இந்த நேரங்களில் பயணிக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

தளர்வுகள்:

  • மால்கள் திறக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
  • பொதுப்போக்குவரத்துகள் அனைத்தும் 100% பயணிகளுடன் செயல்பட அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
  • தரிசனத்திற்காக மட்டும் கோவில்கள் திறக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
  • திருமணம் போன்ற நிகழ்வுகளில் 100 பேரும் , இறுதி சடங்குகளில் 20 பேரும் கலந்து கொள்ள அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
  • பயிற்சிக்காக மட்டும் நீச்சல் குளங்கள் திறக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

தடை:

  • அனைத்து வகையான கூட்டங்கள், போராட்டங்கள், கொண்டாட்டங்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
  • கல்வி நிறுவனங்கள் திறக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.
  • பொது இடங்களில் அரசின் கொரோனா நோய் தடுப்பு விதிகளை மீறுபவர்களுக்கு அபராதம் விதிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!