விஜய் டிவியில் விரைவில் ஒளிபரப்பாகும் Mr. And Mrs. சின்னத்திரை – எதிர்பார்ப்பில் ரசிகர்கள்!

0
விஜய் டிவியில் விரைவில் ஒளிபரப்பாகும் Mr. And Mrs. சின்னத்திரை - எதிர்பார்ப்பில் ரசிகர்கள்!
விஜய் டிவியில் விரைவில் ஒளிபரப்பாகும் Mr. And Mrs. சின்னத்திரை - எதிர்பார்ப்பில் ரசிகர்கள்!
விஜய் டிவியில் விரைவில் ஒளிபரப்பாகும் Mr. And Mrs. சின்னத்திரை – எதிர்பார்ப்பில் ரசிகர்கள்!

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வந்த Mr. And Mrs. சின்னத்திரை நிகழ்ச்சி கடந்த சில வாரங்களுக்கு முன்பு தான் முடிவடைந்த நிலையில் விரைவில் சீசன் 4 ஒளிபரப்பாகும் என அறிவிப்பு வெளியாகியுள்ளது.

Mr. And Mrs. சின்னத்திரை:

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் நிகழ்ச்சிகள் அனைத்துமே மக்களின் மத்தியில் நல்ல ஒரு இடத்தை பிடித்து வருகிறது. டிஆர்பியிலும் விஜய் தொலைக்காட்சி தான் எப்போதுமே முன்னிலையில் இருந்து வருகிறது. அதிலும் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் சூப்பர் சிங்கர், கலக்கப்போவது யாரு, குக் வித் கோமாளி போன்ற நிகழ்ச்சிகளுக்கு எக்கச்சக்கமான ஆதரவு கிடைத்து வருகிறது. ஒவ்வொரு சீசன் முடிவடையும் போதும் அடுத்த சீசனுக்காக ரசிகர்கள் காத்து கொண்டிருக்கின்றனர்.

Exams Daily Mobile App Download

அந்த வகையில் விஜய் தொலைக்காட்சியில் ரசிகர்களால் அதிகமாக விரும்பி பார்க்கப்படும் நிகழ்ச்சியில் ஒன்றான Mr. And Mrs. சின்னத்திரை நிகழ்ச்சி கடந்த சில வாரங்களுக்கு முன்பு தான் முடிவடைந்தது. தற்போது வரைக்கும் மூன்று சீசன் வெற்றிகாரமாக முடிந்துவிட்டது.TRP-யிலும் Mr. And Mrs. சின்னத்திரை நிகழ்ச்சி உச்சத்தில் இருந்து வந்தது. மீண்டும் அடுத்த சீசன் எப்போது ஒளிபரப்பாகும் என ரசிகர்கள் அனைவரும் ஆர்வத்துடன் கேட்டபடி இருந்தனர்.

தனது முடிவில் பிடிவாதமாக இருக்கும் கதிர், மீனா அப்பாவிடம் பணம் வாங்க மறுக்கும் ஜீவா – இன்றைய “பாண்டியன் ஸ்டோர்ஸ்” எபிசோட்!

ரசிகர்களின் வேண்டுகோளுக்கு இணங்கி Mr. And Mrs. சின்னத்திரை நான்காம் சீசன் விரைவில் ஒளிபரப்பாகும் என தகவல் வெளியாகியுள்ளது. மேலும், சீசன் 4 நிகழ்ச்சிக்கான படப்பிடிப்பு இன்னும் சில நாட்களில் துவங்கப்போவதாகவும் தகவல் வெளியாகி ரசிகர்களை குஷிப்படுத்தியுள்ளது. விரைவில் Mr. And Mrs. சின்னத்திரை நிகழ்ச்சி விஜய் தொலைக்காட்சியில் காண ரசிகர்கள் அனைவரும் பெருத்த ஆர்வத்துடன் காத்துகொண்டு இருக்கிறார்கள்.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here