ரியல் ஜோடியாக மாறும் கலர்ஸ் டிவி ‘அம்மன்’ சீரியலின் அமல்ஜித், பவித்ரா? ரசிகர்கள் வாழ்த்து!

0
ரியல் ஜோடியாக மாறும் கலர்ஸ் டிவி 'அம்மன்' சீரியலின் அமல்ஜித், பவித்ரா? ரசிகர்கள் வாழ்த்து!
ரியல் ஜோடியாக மாறும் கலர்ஸ் டிவி 'அம்மன்' சீரியலின் அமல்ஜித், பவித்ரா? ரசிகர்கள் வாழ்த்து!
ரியல் ஜோடியாக மாறும் கலர்ஸ் டிவி ‘அம்மன்’ சீரியலின் அமல்ஜித், பவித்ரா? ரசிகர்கள் வாழ்த்து!

நடிகர் சித்து மற்றும் ஸ்ரேயாவை தொடர்ந்து கலர்ஸ் தமிழ் சேனலின் ‘அம்மன்’ சீரியல் ரீல் ஜோடியான அமல்ஜித் மற்றும் பவித்ரா இருவரும் தங்களது காதலை தற்போது சமூக வலைதளங்களில் வெளிப்படையாக அறிவித்துள்ளனர்.

நட்சத்திர ஜோடி

சமீப காலமாக சின்னத்திரை நடிகர் நடிகைகள் பலரும் அடுத்தடுத்து திருமணம் செய்துகொண்டு ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்து வருகின்றனர். அந்த வகையில் இந்த மாதத்திலேயே விஜய் டிவி நடிகர் ஆர்யன் மற்றும் ஜீ தமிழ் சீரியல் நடிகை ஷபானா, ஜீ தமிழ் நடிகர் மதன் மற்றும் ரேஷ்மா, கலர்ஸ் டிவி நடிகர் சித்து மற்றும் ஸ்ரேயா என முன்னணி டிவி சேனல்களின் நட்சத்திர காதல் ஜோடிகள் தொடர்ச்சியாக திருமணம் செய்து கொண்டனர்.

‘பிக் பாஸ்’ வீட்டில் இருந்து வெளியேறிய இசைவாணி வெளியிட்ட வீடியோ – ரசிகர்கள் ஷாக்!

இவர்களை தொடர்ந்து கலர்ஸ் தமிழ் சேனலின் மற்றுமொரு சீரியல் பிரபலங்களான அமல்ஜித் மற்றும் பவித்ரா இருவரும் தங்களது காதல் விஷயத்தை தற்போது வெளிப்படையாக சமூக வலைதளங்களில் அறிவித்துள்ளனர். அதாவது கலர்ஸ் தமிழ் டிவியின் ‘அம்மன்’ என்ற சீரியல் மூலம் தமிழ் சின்னத்திரைக்கு அறிமுகமான அமல்ஜித் மற்றும் பவித்ரா ரீல் ஜோடி தற்போது ரியல் ஜோடியாக மாறி இருக்கிறது. கர்நாடகா மாநிலம் பெங்களூருவை சொந்த ஊராக கொண்ட நடிகை பவித்ரா மற்றும் கேரளாவை சேர்ந்த நடிகர் அமல்ஜித் இருவரும் ‘அம்மன்’ சீரியல் மூலம் தமிழ் மக்களுக்கு பரீட்சயமானார்கள்.

‘பிக் பாஸ்’ வீட்டில் இருந்து வெளியேறிய இசைவாணி வெளியிட்ட வீடியோ – ரசிகர்கள் ஷாக்!

படப்பிடிப்பின் போது காதலில் விழுந்த இந்த ஜோடி ரகசியமாக தங்களது காதலை வளர்த்து வந்த நிலையில் இந்த காதல் விஷயம் காலப்போக்கில் ரசிகர்களுக்கு தெரிய வந்தது. இந்நிலையில் நடிகர் அமல்ஜித், நடிகை பவித்ராவுடன் இணைந்து எடுத்துக்கொண்ட புகைப்படத்திற்கு Half என்ற கேப்ஷன் கொடுத்து தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டிருக்கிறார். இந்த பதிவின் மூலம் தங்களது காதலை பகிரங்கமாக வெளிப்படுத்திய அமல்ஜித் மற்றும் பவித்ரா ஜோடிக்கு விரைவில் திருமணம் ஆக வேண்டும் என ரசிகர்கள் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!