தமிழக பேருந்துகளில் இலவச பயணத்திற்கு பல வண்ண டிக்கெட்கள் – விரைவில் அறிமுகம்!
தமிழகத்தில் பெண்கள், மாற்றுத் திறனாளிகள் மற்றும் மூன்றாம் பாலினத்தவர்களுக்கு இலவசமாக பேருந்து பயணம் செய்ய எதுவாக தற்போது வித விதமான வண்ணத்தில் டிக்கெட் அச்சடிக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றது.
இலவச பேருந்து பயணம்
தமிழகத்தில் முதல்வர் முக ஸ்டாலின் அவர்களின் தலைமையிலான ஆட்சி நடைபெற்று வருகின்றது. முக ஸ்டாலின் அவர்கள் ஆட்சிக்கு வந்ததும் தேர்தல் அறிக்கையில் குறிப்பிட்டிருந்த பல நலத்திட்டங்களை செயல்படுத்த உத்தரவுகளை பிறப்பித்து வருகிறார். அதில் ஒன்று தான் மகளிருக்கான இலவச பேருந்து பயணம்.
தமிழக அரசின் சாதி சான்றிதழ் பெற மொபைலில் விண்ணப்பிக்கலாம் – எளிய வழிமுறைகள் இதோ!
தமிழகத்தில் உள்ள சாதாரண நகர அரசு பேருந்துகளில் இனி பெண்கள், மாற்றுத் திறனாளிகள் மற்றும் அவர்களின் உதவியாளர்கள் மற்றும் மூன்றாம் பாலினத்தவர்கள் ஆகியோர் இலவசமாக பயணிக்கலாம் என்று உத்தரவு அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது. மேலும் மாற்றுத்திறனாளிகள் மற்றும் மூன்றாம் பாலினத்தவர் தங்களது அடையாள அட்டையினை காட்டி இலவசமாக பயணிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
TN Job “FB
Group” Join Now
தற்போது மாநிலத்தில் ஒரு நாளைக்கு எத்தனை பேர் எந்தெந்த வழித்தடங்களில், எந்தெந்த பிரிவுகளில் இலவசமாக பயணம் செய்தனர் என்பதனை கணக்கீடு செய்ய பல வண்ணங்களில் டிக்கெட் அச்சிடும் பணிகள் நடைபெற்று வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. போக்குவரத்து செயலாளரின் அனுமதி பெற்ற பின் இது செயல்பாட்டிற்கு வரும் என்று கூறப்பட்டுள்ளது.