நாடு முழுவதும் ஆகஸ்ட் மாதம் கல்லூரிகள் திறக்கப்படும் – மத்திய அரசு அறிவிப்பு..!

0
நாடு முழுவதும் ஆகஸ்ட் மாதம் கல்லூரிகள் திறக்கப்படும்
நாடு முழுவதும் ஆகஸ்ட் மாதம் கல்லூரிகள் திறக்கப்படும்

நாடு முழுவதும் ஆகஸ்ட் மாதம் கல்லூரிகள் திறக்கப்படும் – மத்திய அரசு அறிவிப்பு..!

இந்தியாவில் கொரோனா வைரஸ் பரவல் காரணமாக மே 17 வரை ஊரடங்கு உத்தரவு நீட்டிக்கப்பட்டு உள்ளது. இதனால் அனைத்து கல்வி நிறுவனங்களும் மூடப்பட்டு உள்ளதால் மாணவர்களின் கல்வி கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளது. இந்நிலையில் ஊரடங்கு முடிந்து கல்லூரி மற்றும் பல்கலைக்கழகங்கள் திறக்கப்படும் தேதியை மத்திய அமைச்சர் அறிவித்து உள்ளார்.

NEET மற்றும் JEE தேர்வுகள் தேதி 2020

கல்லூரிகள் திறப்பு:

இந்தியாவில் பல்வேறு பள்ளிகள் மற்றும் கல்லூரிகளின் தேர்வுகள் நடைபெறாத நிலையில் அடுத்த கல்வியாண்டு தொடங்க உள்ளது குறிப்பிடத்தக்கது. இதனால் ஊரடங்கு முடிந்தவுடன் தேர்வுகளை விரைந்து நடத்தி முடித்து வகுப்புகளை தொடங்க திட்டமிடப்பட்டு உள்ளது. இந்நிலையில் இன்று மத்திய அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் சில முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டு உள்ளார். அவை,

  • நாடு முழுவதும் கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழகங்கள் ஆகஸ்ட் 1ம் தேதி திறக்க அனுமதி வழங்கப்பட்டு உள்ளது.
  • புதிய மாணவர்களுக்கான வகுப்புகள் செப்டம்பர் 1ம் தேதி முதல் தொடங்கலாம் எனவும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
  • பழைய மாணவர்களுக்கு ஆகஸ்ட் 1ம் தேதி முதல் வகுப்புகளை தொடங்கவும் பரிந்துரை வழங்கப்பட்டு உள்ளது.
To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here