தமிழகம் முழுவதும் கல்லூரிகள் திறப்பு? முதல்வர் முக்கிய ஆலோசனை!

1
தமிழகம் முழுவதும் கல்லூரிகள் திறப்பு? முதல்வர் முக்கிய ஆலோசனை!
தமிழகம் முழுவதும் கல்லூரிகள் திறப்பு? முதல்வர் முக்கிய ஆலோசனை!
தமிழகம் முழுவதும் கல்லூரிகள் திறப்பு? முதல்வர் முக்கிய ஆலோசனை!

தமிழகத்தில் பிளஸ் 2 மாணவர்களுக்கு பொதுத்தேர்வு மதிப்பெண் கணக்கீட்டு முறை வெளியிடப்பட்ட நிலையில் தற்போது கல்லூரிகள் திறப்பு குறித்து தமிழக முதல்வர் முக ஸ்டாலின் அவர்கள் முக்கிய ஆலோசனை மேற்கொண்டு வருகிறார்.

கல்லூரிகள் திறப்பு:

தமிழகத்தில் கொரோனா அச்சம் காரணமாக பிளஸ் 2 பொதுத்தேர்வு ரத்து செய்யப்பட்டு மாணவர்கள் அனைவரும் தேர்வின்றி தேர்ச்சி பெறுவார்கள் என்று அறிவிக்கப்பட்டது. இதையடுத்து தமிழக அரசு சில தினங்களுக்கு முன்பு பிளஸ் 2 மாணவர்களுக்கு பொதுத்தேர்வு மதிப்பெண் கணக்கீட்டு முறையை வெளியிட்டது. இதனால் தமிழகத்தில் சுமார் 9 லட்ச மாணவர்கள் தேர்ச்சி பெறும் நிலை ஏற்பட்டுள்ளது. ஆண்டுதோறும் தமிழகத்தில் பிளஸ் 2 பொது தேர்வில் 10% பேர் தோல்வி அடைவார்கள்.

தமிழ்நாடு மின்சார வாரியம் முக்கிய அறிவிப்பு – ஜூன் 30 வரை மின்தடை!

ஆனால் இந்த முறை 100% மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ள நிலையில் உயர் கல்வி வகுப்பில் மாணவர்கள் சேர்க்கை எண்ணிக்கை அதிகரிக்கக்கூடும். இதையடுத்து தமிழக முதல்வர் முக ஸ்டாலின் அவர்கள் உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி அவர்களுடன் முக்கிய ஆலோசனை ஒன்றை மேற்கொண்டு வருகிறார். இந்த ஆலோசனை கூட்டத்தில் தமிழகம் முழுவதும் கல்லூரிகள் திறப்பு குறித்து ஆலோசிக்கப்படுவதாக தகவல் வெளியாகியுள்ளது.

TN Job “FB  Group” Join Now

மேலும் உயர்கல்வி வகுப்புகளில் மாணவர் சேர்க்கை எண்ணிக்கை அதிகரிப்பு, கொரோனா அச்சம் காரணமாக விண்ணப்ப கட்டணம் குறைப்பு போன்ற பல முக்கிய விஷயங்கள் குறித்து தமிழக முதல்வர் முக ஸ்டாலின் அவர்கள் ஆலோசனை செய்து வருகிறார். மேலும் தமிழகத்தில் ஜூலை 2ம் வார முதல் கல்லூரிகளில் மாணவர்கள் சேர்க்கை தொடங்கலாம் என்று கூறப்படுகிறது. இதற்கான அதிகாரபூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

1 COMMENT

  1. Sir……I am Agri student….
    Plss….open the colleges I want to clearly study and know about agriculture….corona cases are decreasing in tamilnadu so respected.., Chief Minister consider about college open…
    Thanking You..!!!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!