முதல் & 2ம் ஆண்டு கல்லூரி மாணவர்களுக்கு சுழற்சி முறை வகுப்புகள் – உயர்கல்வித்துறை அமைச்சர் ஆலோசனை!!
தமிழகத்தில் முதல் மற்றும் 2ம் ஆண்டு கல்லூரி மாணவர்களுக்கு சுழற்சி முறையில் வகுப்புகள் தொடங்குவது குறித்து ஆலோசிக்கப்பட்டு வருவதாக உயர்கல்வித்துறை அமைச்சர் கேபி அன்பழகன் அவர்கள் தெரிவித்து உள்ளார்.
சுழற்சிமுறை வகுப்புகள்:
நாடு முழுவதும் கொரோனா பரவல் காரணமாக கடந்த வருட மார்ச் மாதத்தில் பள்ளி, கல்லூரிகள், பல்கலைக்கழகங்கள் உள்ளிட்ட அனைத்து கல்வி நிறுவனங்களும் மூடப்பட்டன. இதனால் மாணவர்களுக்கு ஆன்லைன் வாயிலாக வகுப்புகள் எடுக்கப்பட்டது. பின்னர் தொற்று குறைந்ததால் கல்வி நிறுவனங்களை திறக்க மத்திய உள்துறை அமைச்சகம் அனுமதி வழங்கியது. அதற்கான வழிகாட்டு நெறிமுறைகளும் வெளியிடப்பட்டது. இதனையடுத்து பல்வேறு மாநில அரசுகள் பள்ளி, கல்லூரிகளை திறந்து நேரடி வகுப்புகளை தொடங்கின.
IAS தேர்வுக்கான இலவச பயிற்சி – ஜனவரி 24இல் நுழைவுத்தேர்வு!!
தமிழகத்தில் கடந்த டிசம்பர் மாதத்தில் இறுதியாண்டு மாணவர்களுக்கு மட்டும் நேரடி வகுப்புகள் தொடங்கப்பட்டது. பிற மாணவர்களுக்கு ஆன்லைன் கல்வி தொடரும் என அரசு அறிவித்தது. இந்நிலையில் முதல் மற்றும் 2ம் ஆண்டு மாணவர்களுக்கும் விரைந்து கல்லூரிகளை திறக்க வேண்டும் என பேராசிரியர்கள் சார்பில் கோரிக்கை வைக்கப்பட்டது. இதனை பரிசீலித்த உயர்கல்வித்துறை அது தொடர்பாக ஆலோசனையில் ஈடுபட்டு வருகிறது.
10 மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு ஆன்லைன் மூலமாக தேர்வு – சி.இ.ஓ உத்தரவு!!
இன்று செய்தியாளர்களை சந்தித்த உயர்கல்வித்துறை அமைச்சர் கேபி அன்பழகன், முதல் மற்றும் 2ம் ஆண்டு மாணவர்களுக்கு கல்லூரிகள் திறக்கப்படும் போது விடுதிகளில் தங்க வைப்பதில் பிரச்சனைகள் எதுவும் நடைபெறாமல் இருக்க தகுந்த முன்னேற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளதாக தெரிவித்தார். மேலும் சுழற்சி முறையில் வகுப்புகள் நடத்துவது குறித்து ஆலோசனை நடைபெற்று வருவதாகவும் அமைச்சர் கூறினார். அதாவது முதலாம் ஆண்டு மாணவர்களுக்கு ஒரு நாளும், அடுத்த நாள் 2ம் ஆண்டு மாணவர்களுக்கும் வகுப்புகளை நடத்துவதற்கான சாத்தியக்கூறுகள் ஆராயப்பட்டு வருகிறது.
Velaivaippu Seithigal 2021
To Subscribe => Youtube Channel கிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebook கிளக் செய்யவும்
To Join => Telegram Channel கிளிக் செய்யவும்
Pls don’t open the college.sir…. Corona ennum caviar agum
Please don’t open the college Please sir