தமிழகத்தில் ஏப்ரல் 18ம் தேதி பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை – மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு!

0
தமிழகத்தில் ஏப்ரல் 18ம் தேதி பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை - மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு!
தமிழகத்தில் ஏப்ரல் 18ம் தேதி பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை - மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு!
தமிழகத்தில் ஏப்ரல் 18ம் தேதி பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை – மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு!

தமிழகத்தில் கொண்டாடப்படும் முக்கிய திருவிழாக்களுக்கு அரசு சார்பில் உள்ளூர் விடுமுறை அளிக்கப்படுவது நடைமுறையில் உள்ளவை ஆகும். இந்நிலையில் அரியலூர் மாவட்டத்தில் 18ந் தேதி கலியுக வரதராஜ பெருமாள் கோவில் தேர் திருவிழாவை முன்னிட்டு உள்ளூர் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளதாக அம்மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்.

உள்ளூர் விடுமுறை:

அரியலூர் வட்டம் கல்லங்குறிச்சி கிராமத்தில் உள்ள கலியுக வரதராஜ பெருமாள் கோவில் 250 வருடங்கள் பழமை வாய்ந்த கோவிலாகும். இந்த கோயிலில் உள்ள பெருமாள் கம்பத்தில் நாமத்தோடு உருவம் இல்லாமல் அருள்பாலிக்கிறார். இத்திருத்தலத்தில் ஆண்டுதோறும் ராமநவமி அன்று அதிகாலை கொடியேற்றத்துடன் தொடங்கி, தொடர்ந்து 10 நாட்கள் பெருவிழா நடைபெறுகிறது. இந்தப் பெருவிழாவின் போது தோ்த் திருவிழா முக்கியமானதாக உள்ளது. இங்கு புரட்டாசி சனிக்கிழமைகளில் சிறப்பு பூஜைகள் நடத்தப்படுகிறது. மகா சிவராத்திரி அன்று திருமாலுக்குச் சிறப்பு அபிஷேகம் செய்யப்படுகிறது. இந்த கோவிலில் வருடம்தோறும் நடைபெறும் தேர்திருவிழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமியை தரிசனம் செய்வார்.

பள்ளிகள் காலை 7 மணி முதல் 12 மணிவரை மட்டுமே திறப்பு – மாவட்ட ஆட்சியர் முக்கிய அறிவிப்பு!

இந்நிலையில் வரவுள்ள 18-ந் தேதி கலியுக வரதராஜ பெருமாள் கோவிலில் தேர்த்திருவிழா வெகு விமர்சியாக நடைபெற உள்ளது. இதை முன்னிட்டு வரும் திங்கட்கிழமை அன்று அரியலூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு அலுவலகங்களுக்கும் உள்ளூர் விடுமுறை என்று மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார். அதன்படி இந்த உள்ளூர் விடுமுறை அரியலூர் மாவட்டத்தில் தமிழ்நாடு அரசின் கட்டுப்பாட்டில் உள்ள அனைத்துக் கல்வி நிறுவனங்களுக்கும் மற்றும் அரசு அலுவலகங்களுக்கும் பொருந்தும். இருப்பினும் இந்த உள்ளூர் விடுமுறையானது பள்ளி இறுதி வகுப்பு அரசு தேர்வுகளுக்கு (மெட்ரிக், ஆங்கிலோ இந்தியன் பள்ளித்தேர்வுகள் உள்பட) பொருந்தாது என தெரிவிக்கப்பட்டு உள்ளது.

அவை ஏற்கனவே அரசால் திட்டமிடப்பட்டு அறிவிக்கப்பட்ட நாளில் நடைபெறும் என்றும் தெரிவிக்கப்பட்டு உள்ளது. உள்ளூர் விடுமுறை வரும் 18ம் தேதி அளிக்கப்படுவதால், அதை ஈடு செய்யும் விதம் அடுத்த மாதம்(மே) 7-ந் தேதி (சனிக்கிழமை) அன்று முழு வேலை நாள் எனவும் உத்தரவிடப்படுகிறது. செலவாணி முறிச்சட்டம் 1881-ன் கீழ் இந்த உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்படவில்லை என தெரிவிக்கப்பட்டு உள்ளது. அதனால் உள்ளூர் விடுமுறை நாளில் அனைத்து சார்நிலை கருவூலங்களும், மாவட்ட கருவூலமும் அரசு வேலைகளில் எந்த இடையூறு இல்லாத வண்ணம், குறைந்த பணியாளர்களைக் கொண்டும் செயல்படும் என்று மாவட்ட ஆட்சியர் ரமண சரஸ்வதி அறிவித்துள்ளார்.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!