தமிழக உறுப்புக் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை – கல்லூரி கல்வி இயக்ககம் விளக்கம்!
கொரோனா பேரலை காரணமாக கல்வி நிறுவனங்கள் அனைத்தும் மூடப்பட்டிருக்கும் நிலையில் ஆன்லைன் வகுப்புகளுக்கான மாணவர் சேர்க்கை துவங்கியுள்ளது. அந்த வகையில் அரசு உறுப்புக் கல்லூரிகளிலும் ஆன்லைன் வழியாக மாணவர் சேர்க்கையை நடத்த கல்லூரி கல்வி இயக்ககம் உத்தரவிட்டுள்ளது.
மாணவர் சேர்க்கை:
தமிழகத்தில் செயல்பட்டு வரும் பல்கலைக்கழக உறுப்புக் கல்லூரிகள் அனைத்தும் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளாக மாற்றப்பட்டு இயங்கி வருகிறது. அதாவது தமிழகத்தில் உள்ள 41 பல்கலைக்கழகத்தின் உறுப்புக் கல்லூரிகள் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளாக செயல்பட்டு வருகிறது. இந்த கல்லூரிகளிலும் தற்போது புதிய மாணவர் சேர்க்கையை துவங்க வேண்டும் என கல்லூரிக்கல்வி இயக்குநர் பூரணசந்திரன் உத்தரவிட்டுள்ளார்.
ஊரடங்கு மேலும் ஒரு வாரம் நீட்டிப்பு – வங்கதேச அரசு அறிவிப்பு!
அதாவது கொரோனா நோய் பரவல் காரணமாக கடந்த 2 மாதங்களாக கல்லூரிகள், பள்ளிகள் உட்பட அனைத்து கல்வி நிறுவனங்களும் மூடப்பட்டுள்ளது. இதற்கிடையில் கல்லூரி மாணவர்களுக்கான செமஸ்டர் தேர்வுகள் அனைத்தும் கடந்த ஆண்டை போலவே ஆன்லைன் வழியாக நடத்தப்பட்டு வருகிறது. இதை தொடர்ந்து கல்லூரிகளில் முதலாம் ஆண்டு புதிய மாணவர் சேர்க்கையும் துவங்கியுள்ளது. அந்த வகையில் தமிழகத்தில் உள்ள அனைத்து உறுப்பு கல்லூரிகளிலும் புதிய மாணவர் சேர்க்கையை துவங்க கல்லூரிக் கல்வி இயக்ககம் உத்தரவிட்டுள்ளது.
TN Job “FB
Group” Join Now
அதாவது மாநிலம் முழுவதும் உள்ள 41 பல்கலைக்கழகத்தின் உறுப்புக் கல்லூரிகள் அரசு கலை, அறிவியல் கல்லூரிகளாக மாற்றப்பட்டுள்ளது. இவற்றில் 14 கல்லூரிகளில் ஏற்கெனெவே புதிய மாணவர் சேர்க்கை பணிகள் துவங்கியுள்ளதால், மீதமுள்ள 27 கலை, அறிவியல் கல்லூரிகளிலும் ஆன்லைன் வழியாக மாணவர் சேர்க்கையை நடத்த கல்லூரி கல்வி இயக்ககம் அறிவுறுத்தியுள்ளது. அதனால் மாணவர் சேர்க்கை பணிகளுக்காக அரசு மேற்கொள்ளும் அனைத்து நடவடிக்கைகளுக்கும் கல்லூரிகள் ஒத்துழைப்பு நல்க வேண்டும் என கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.