தமிழகத்தில் ஏப்ரல் 14ம் தேதி பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை – அரசு அறிவிப்பு!

0
தமிழகத்தில் ஏப்ரல் 14ம் தேதி பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை - அரசு அறிவிப்பு!
தமிழகத்தில் ஏப்ரல் 14ம் தேதி பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை - அரசு அறிவிப்பு!
தமிழகத்தில் ஏப்ரல் 14ம் தேதி பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை – அரசு அறிவிப்பு!

நாடு முழுவதும் ஏப்ரல் 14ம் தேதி அண்ணல் அம்பேத்கர் 132 வது பிறந்தநாளை முன்னிட்டு பொது விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் தமிழகத்தில் அம்பேத்கர் பிறந்த தினம் மற்றும் தமிழ் புத்தாண்டையொட்டி, ஏப்ரல் 14ம் தேதி பொது விடுமுறை என மத்திய அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

பொது விடுமுறை:

1891-ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 14ம் தேதி,பாபா சாகேப் என்றழைக்கப்படும் பீம்ராவ் ராம்ஜி அம்பேத்கர் மத்திய பிரதேச மாநிலம் அம்பாவாதே என்னும் கிராமத்தில் ராம்ஜி மாலோஜி சக்பால் – பீமாபாய் ஆகியோரின் 14-வது குழந்தையாகப் பிறந்தார். இந்திய விடுதலைக்குப் பின்னர் நாட்டின் முதலாவது சட்ட அமைச்சராகவும், உயர் கல்வி பெறுவதற்காக அமெரிக்கா சென்ற முதல் இந்தியர். தாழ்த்தப்பட்ட மக்களுக்கென கழகம் ஒன்றைத் தொடங்கியவர். பரோடா மன்னருடன் இணைந்து தீண்டாமை ஒழியப் போராடியவர். பொருளாதாரம், அரசியல், வரலாறு, தத்துவம், சட்டம் ஆகிய துறைகளில் தேர்ந்தவர்; ஆசிரியராகவும், இதழாளராகவும், எழுத்தாளராகவும் சமூகநீதிப் புரட்சியாளராகவும் விளங்கியவர்.

ஏப்ரல் 7 வரை முழு ஊரடங்கு கட்டுப்பாடுகள் நீட்டிப்பு – மாநில அரசு அறிவிப்பு!

2012 ஆம் ஆண்டில் வரலாற்றுத் தொலைக்காட்சியும், சி.என்.என்- ஐ.பி.என் தொலைக்காட்சியும் நடத்திய வாக்கெடுப்பில் மிகச்சிறந்த இந்தியராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். இந்தியாவின் மிகச்சிறந்த உயரிய விருதான ‘பாரத ரத்னா’ விருது இவரது இறப்புக்குப் பின் 1990 இல் இவருக்கு வழங்கப்பட்டது. ‘திராவிட புத்தம்’ என்ற பெயரில் பல ஆயிரக்கணக்கான தாழ்த்தப்பட்டவர் எனப்பட்ட தலித் மக்களை புத்தசமயத்தைத் தழுவ செய்தவர், இவை யாவற்றுக்கும் மேலாக இந்திய அரசியலமைப்புச் சாசனத்தை வரைவதற்கான குழுவின் தலைவராகவும் பொறுப்பேற்றவர்.

இந்தியாவின் சட்ட முன்வரைவை வடிவமைத்த டாக்டர் பாபாசாஹிப் அம்பேத்கரின் பிறந்த நாளான ஏப்ரல் 14ம் தேதியை வெகு விமரிசையாக கொண்டாடி அவரது நினைவை போற்ற மத்திய அரசு முடிவு செய்துள்ளது. அந்த வகையில் தமிழ்நாட்டில் ஏப்ரல் 14ம் தேதி, தமிழ் புத்தாண்டு தினத்தை முன்னிட்டு பள்ளிகள், கல்லூரிகளுக்கு விடுமுறை நடைமுறையில் உள்ளவைதான். தற்போது மத்திய அரசு அன்றைய தினம் பொது விடுமுறை தினமாக அறிவிக்கப்பட்டுள்ளதால் அனைத்து அரசு அலுவலகங்களுக்கும் அன்று விடுமுறை விடப்படுகிறது. இந்த வருடம் ஏப்ரல் 14ம் தேதி சட்டமேதை டாக்டர் பாபாசாஹிப் அம்பேத்கரின் 132 வது பிறந்தநாள் அனுசரிக்கப்பட உள்ளது என தெரிவிக்கப்பட்டு உள்ளது.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here