தமிழகத்தில் நாளை (நவ.26) பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை – மாவட்ட நிர்வாகங்கள் அறிவிப்பு!

0
தமிழகத்தில் நாளை (நவ.26) பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை - மாவட்ட நிர்வாகங்கள் அறிவிப்பு!
தமிழகத்தில் நாளை (நவ.26) பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை - மாவட்ட நிர்வாகங்கள் அறிவிப்பு!
தமிழகத்தில் நாளை (நவ.26) பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை – மாவட்ட நிர்வாகங்கள் அறிவிப்பு!

தமிழகத்தில் பெய்து வரும் கனமழை காரணமாக திருவாரூர், தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள பள்ளிகளுக்கு நாளை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் தூத்துக்குடி மாவட்டத்திற்கு ரெட் அலர்ட் எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது.

விடுமுறை:

தெற்கு வங்கக் கடலில் ஏற்பட்டுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக தமிழகம் முழுவதும் கனமழை பெய்து வருகிறது. மேலும் அடுத்த மூன்று நாட்களுக்கு தொடர்ந்து கனமழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்து உள்ளது. அதனால் தமிழகத்தின் சில மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட் எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது. கடந்த ஒரு வாரமாக இரவு பகலாக பெய்து வரும் தொடர் மழையால் கடலோர மாவட்டங்களில் நீர் நிலைகள் நிரம்பி உபரி நீர் தாழ்வான சாலைகள் மற்றும் குடியிருப்பு பகுதிகளில் சூழ்ந்துள்ளது.

ஆதார் கார்டில் மொபைல் எண்ணை அப்டேட் செய்வது எப்படி? முழு விபரம் இதோ!

கனமழையால் மக்கள் வீடுகளை விட்டு வெளியே வர முடியாத நிலையில் உள்ளனர். மேலும் சாலைகளில் தேங்கியுள்ள மழைநீரால் வாகன ஓட்டிகள் சாலைகளில் செல்ல முடியாமல் சிரமப்படுகின்றனர். இந்த நிலையில் மாணவர்களின் நலன் கருதி பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டு வருகின்றன. ஏற்கனவே கொரோனா பரவலால் ஒரு வருடத்திற்கும் மேல் பள்ளிகள் மூடப்பட்டிருந்தது. தற்போது தான் பள்ளிகள் திறக்கப்பட்டு வழக்கம் போல வகுப்புகள் நடைபெற்று வருகிறது.

தமிழக ரயில் நிலையங்களில் நடைமேடை கட்டணம் குறைப்பு – பயணிகள் மகிழ்ச்சி!

இந்த நேரத்தில் பெய்து வரும் வடகிழக்கு பருவ மழையால் மீண்டும் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்க வேண்டிய சூழல் உருவாகியுள்ளது. மற்ற மாவட்டங்களை தொடர்ந்து தற்போது பலத்த மழை பெய்து வரும் தூத்துக்குடி, திருநெல்வேலி மற்றும் புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள பள்ளிகள் மற்றும் கல்லுரிகளுக்கும் நாளை (26.11.2021) விடுமுறை என்று அறிவிக்கப்பட்டுள்ளது.  திருவாரூர் மாவட்டத்தில் பள்ளிகளுக்கு மட்டும் நாளை விடுமுறை என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here