பள்ளிகளுக்கு விடுமுறை குறித்து ஆட்சியரின் அன்பான பதிவு – நெகிழ்ச்சியில் மாணவர்கள்!

0
பள்ளிகளுக்கு விடுமுறை குறித்து ஆட்சியரின் அன்பான பதிவு - நெகிழ்ச்சியில் மாணவர்கள்!
பள்ளிகளுக்கு விடுமுறை குறித்து ஆட்சியரின் அன்பான பதிவு - நெகிழ்ச்சியில் மாணவர்கள்!
பள்ளிகளுக்கு விடுமுறை குறித்து ஆட்சியரின் அன்பான பதிவு – நெகிழ்ச்சியில் மாணவர்கள்!

கேரளா மாநிலத்தில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வரும் நிலையில் பல மாவட்டங்களில் கல்வி நிறுவனங்களுக்கு அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் விடுமுறை அறிவிப்பை வெளியிட்டனர். அந்த வகையில் ஆலப்புழா மாவட்ட ஆட்சியர் V. R. கிருஷ்ண தேஜா IAS விடுமுறை குறித்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.

பள்ளிகளுக்கு விடுமுறை:

நாடு முழுவதும் கடந்த சில நாட்களாக பல மாநிலங்களில் கனமழை வெளுத்து வாங்கி வருகிறது. குறிப்பாக கேரளாவில் கனமழை புரட்டி போட்டு வருகிறது. பல மாவட்டங்களில் வெள்ள பெருக்கு ஏற்பட்டதால் கல்வி நிறுவனங்களுக்கு அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் விடுமுறை அறிவிப்பை வெளியிட்டனர். அந்த வகையில் ஆலப்புழா மாவட்ட ஆட்சியர் V. R. கிருஷ்ண தேஜா IAS அவர்கள் தனது முகநூல் பக்கத்தில் மாணவர்களுக்கு விடுமுறை குறித்த அறிவிப்பை அன்புடன் வெளியிட்டுள்ளார்.

Exams Daily Mobile App Download

அதில் அன்புள்ள குழந்தைகளே, நாளையும் விடுமுறை அறிவுத்துள்ளேன் என்பதை கூறி கொள்கிறேன். நேற்று சொன்னதை மறக்காதே..மழைக்காலம் என்பதால், பெற்றோர்கள் வேலைக்குச் செல்லும் போது, பைகளில் குடை, ரெயின்கோட் உள்ளதா என்பதை நீங்கள் உறுதி செய்து கொள்ள வேண்டும். அவர்களை வழி அனுப்பும் போது கட்டி அணைத்து முத்தம் கொடுத்து வழி அனுப்புங்கள் … நாங்கள் இங்கேயே உங்களுக்காக காத்திருப்போம் கவனமாக வாகனம் ஓட்டி சென்று மாலையில் சீக்கிரமாக வீடு திரும்பி வாருங்கள் என்று அன்புடன் வழி அனுப்புங்கள்…நீங்கள் நல்ல பழக்க வழக்கங்களை கடைபிடிக்க வேண்டும். புத்திசாலியாக இருங்கள்…மிகுந்த அன்புடன் உங்கள் பிரியமான கலெக்டர் மாமா.

TET தேர்வுக்கு தயாராகுபவரா நீங்கள்? உங்களுக்கான அரிய வாய்ப்பு இதோ

என அன்பாக அவருடைய பதிவில் குறிப்பிட்டுள்ளார். பள்ளி மாணவர்களுக்கு அவர் எழுதிய பாசமான பதிவு தற்போது சமூக வலைத்தளங்களில் ட்ரெண்டாகி இருக்கிறது. மாவட்ட ஆட்சியரின் இந்த போஸ்ட்டுக்கு சுமார் 57 ஆயிரத்துக்கும் மேற்பட்ட லைக்குகள், 3 ஆயிரத்து 800க்கும் மேற்பட்ட ஷேர்கள் கிடைத்துள்ளன. மேலும் தமிழகம், கேரளா, கர்நாடகா மாநிலங்களுக்கு இந்திய வானிலை ஆய்வு மையம் ரெட் அலர்ட் விடுத்துள்ளதால் இன்னும் சில நாட்களுக்கு மழை நீடிக்க வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here