கோயம்புத்தூரில் மாபெரும் வேலைவாய்ப்பு முகாம் – 200+ நிறுவனங்கள்!! 20000 காலிப்பணியிடங்கள்!!

0
கோயம்புத்தூரில் மாபெரும் வேலைவாய்ப்பு முகாம் - 200+ நிறுவனங்கள்!! 20000 காலிப்பணியிடங்கள்!!
கோயம்புத்தூரில் மாபெரும் வேலைவாய்ப்பு முகாம் - 200+ நிறுவனங்கள்!! 20000 காலிப்பணியிடங்கள்!!
கோயம்புத்தூரில் மாபெரும் வேலைவாய்ப்பு முகாம் – 200+ நிறுவனங்கள்!! 20000 காலிப்பணியிடங்கள்!!

கோயம்புத்தூரில் வள்ளலார் வேலைவாய்ப்பு சேவையகம் மற்றும் KGISL EDUCATIONAL INSTITUTIONS ஆகியவை இணைந்து நடத்தும் மாபெரும் வேலைவாய்ப்பு முகாம் டிசம்பர் மாதம் நடைபெற உள்ளது. இந்த முகாமில் கலந்து கொள்வதற்கான விபரங்கள் குறித்து விரிவாக பார்ப்போம்.

வேலைவாய்ப்பு முகாம்:

தமிழகத்தில் இளைஞர்கள் மத்தியில் வேலைவாய்ப்பற்ற நிலையை உருவாக்குவதற்கு பல்வேறு இடங்களில் வேலைவாய்ப்பு முகாம் அமைக்கப்படுகிறது. இதன் மூலமாக வேலைவாய்ப்பற்ற இளைஞர்கள் பல்லாயிரக்கணக்கானோர் பணி ஆணைகளை பெற்றுள்ளனர். இதையடுத்து தற்போது கோயம்புத்தூரில் வள்ளலார் வேலைவாய்ப்பு சேவையகம் மற்றும் KGISL EDUCATIONAL INSTITUTIONS ஆகியவை இணைந்து நடத்தும் மாபெரும் வேலைவாய்ப்பு முகாம் நடைபெற இருக்கிறது.

Telegram Updates for Latest Jobs & News – Join Now

இம்முகாமில் கலந்து கொள்ள விரும்பும் நபர்கள் https://jobfair.vvvsi.com என்ற இணையதளத்தில் கட்டாயமாக முன்பதிவு செய்திருக்க வேண்டும். இம்முகாமில் கலந்து கொள்ள 10ம் வகுப்பு தேர்ச்சி, 12ம் வகுப்பு தேர்ச்சி, ஐடிஐ மற்றும் டிப்ளமோ படிப்பை முடித்தவர்களும் கலந்து கொள்ளலாம். இதேபோல் இளங்கலை பட்டம் முடித்தவர்களும், பொறியியல் பட்டம் முடித்தவர்கள், MBA , Life Science, Healthcare ஆகிய படிப்பை முடித்தவர்களும் இதில் கலந்து கொண்டு தங்களின் தகுதிகளுக்கேற்ப வேலை வாய்ப்பை பெறலாம்.

வீட்டில் இருந்தே வேலை.. ஆயிரக்கணக்கில் சம்பளம் – பெண்களை குறிவைக்கும் புதிய மோசடி!

Exams Daily Mobile App Download

மேலும் வேலைவாய்ப்பு முகாம் மூலமாக 22 துறைகளை சேர்ந்த 200-க்கும் மேற்பட்ட முன்னணி தனியார் நிறுவனங்கள் தங்களிடம் உள்ள காலிப்பணியிடங்களை நிரப்ப உள்ளது. அதன்படி இம்முகாம் மூலமாக சுமார் 20000 காலிப்பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இம்முகாம் வருகிற டிசம்பர் 2,3,4 ஆகிய தேதிகளில் 365, KGISL கல்வி வளாகம், சரவணப்பட்டி, கோயம்புத்தூர்- 641035 என்ற முகவரியில் நடைபெற இருக்கிறது. மேலும் இது தொடர்பான கூடுதல் தகவல்களை கேட்டறிய 97519 51084, 97519 51544, 82705 279922 ஆகிய எண்களில் ஏதேனும் ஒரு எண்ணிற்கு தொடர்பு கொண்டு கேட்டறியலாம்.

Follow our Twitter Page for More Latest News Updates

TNPSC Online Classes

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!