நாட்டில் நிலக்கரி பற்றாக்குறை விவகாரம் – மத்திய அமைச்சர்கள் ஆலோசனை!

0
நாட்டில் நிலக்கரி பற்றாக்குறை விவகாரம் - மத்திய அமைச்சர்கள் ஆலோசனை!
நாட்டில் நிலக்கரி பற்றாக்குறை விவகாரம் - மத்திய அமைச்சர்கள் ஆலோசனை!
நாட்டில் நிலக்கரி பற்றாக்குறை விவகாரம் – மத்திய அமைச்சர்கள் ஆலோசனை!

நாடு முழுவதும் நிலக்கரி பற்றாக்குறையினால் பல மாநிலங்களிலும் மின் தட்டுப்பாடு ஏற்பட்டிருக்கும் நிலையில், இது குறித்து மத்திய அமைச்சர்களுடன் அமித்ஷா கலந்துரையாடி உள்ளார்.

மத்திய அமைச்சர்கள்:

இந்தியாவில் நிலக்கரி பற்றாக்குறை பிரச்னைகள் காரணமாக கடந்த சில தினங்களாக பல செய்திகள் வந்து கொண்டிருக்கிறது. இது குறித்து மத்திய அரசிற்கு டெல்லி முதல்வர் கெஜ்ரிவால் நிலக்கரி பற்றாக்குறையை உடனடியாக தீர்க்காவிட்டால் டெல்லி இருளில் மூழ்கும் அபாயம் ஏற்படும் என்று கடிதம் எழுதியிருந்தார். இதேபோல், ராஜஸ்தான், கர்நாடக மற்றும் பஞ்சாப் போன்ற மாநிலங்களிலும் நிலக்கரி பற்றாக்குறை ஏற்பட்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் அங்கு மின்தட்டுப்பாடு சூழல் நிலவுகிறது.

IPL 2021 – RCB vs KKR: கொல்கத்தா அணி 4 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி!

இந்த விவகாரம் குறித்து அமித்ஷா மத்திய மின் மற்றும் நிலக்கரி துறைகளுக்கு பொறுப்பான அமைச்சர்களை இன்று சந்தித்து பேசியுள்ளார். கூடுதலாக இந்த ஆலோசனை கூட்டத்தில் NTPC அதிகாரிகளும் கலந்து கொண்டனர். இந்தியாவின் பெரும்பான்மையான மின்சாரத் தேவையை அனல் மின்நிலையங்கள்தான் பூர்த்தி செய்கின்றன. இந்நிலையில் அனல் மின்நிலையங்களுக்கு தேவையான நிலக்கரிகளை வழங்கும் சுரங்கங்கள் உள்ள பகுதிகளில் ஏற்பட்டுள்ள பெரு வெள்ளம் மற்றும் மழை காரணமாக நிலக்கரியை வெட்டியெடுக்கும் பணியில் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

தமிழகத்திற்கான வருவாய் பற்றாக்குறை ரூ.183.67 கோடி – மத்திய அரசு ஒதுக்கீடு!!

மத்திய அமைச்சர்களின் ஆலோசனை கூட்டத்தில் மாநிலங்களுக்கு தேவையான நிலக்கரி விநியோகத்தினை உறுதிப்படுத்துவது குறித்து விவாதிக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது. தமிழகத்தில் மின் உற்பத்திக்கான நிலக்கரி தட்டுப்பாடு இல்லை என்று, மின்தடை செய்யப்படாது என்றும் தமிழக அமைச்சர் செந்தில் பாலாஜி அறிவித்திருந்தார்.இதேபோல், மின்னுற்பத்திக்கு தேவையான எரிபொருள் உள்ளது. இதனைக்கொண்டு நாடு முழுவதும் மின்சாரம் விநியோகம் செய்யப்படும் என்று மின்சாரத்துறை அமைச்சர் ஆர்.கே.சிங் தெரிவித்திருந்தார். ஆனால் தற்போது நாடு முழுவதும் நிலக்கரி தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது அதிர்ச்சியளிக்கும் விதமாக உள்ளது.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here