கோல் இந்தியா லிமிடெட்டில் ரூ.1,60,000/- சம்பளத்தில் வேலை – 1000+ காலிப்பணியிடங்கள்..!
கோல் இந்தியா லிமிடெட்டில் (Coal India) வெளியிட்ட அறிவிப்பில் காலியாக உள்ள பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. Management Trainee பணிக்கு என ஒதுக்கப்பட்டுள்ள பணியிடங்கள் காலியாக இருப்பதாக இந்த அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது. இப்பணிக்கு விண்ணப்பிக்க விருப்பம் உள்ள விண்ணப்பதாரர்கள் உடனே விண்ணப்பித்து பயன் பெறுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். கல்வி, வயது, விண்ணப்பிக்கும் முறை போன்ற பணி குறித்த தகவல்கள் அனைத்தும் கீழ்வருமாறு தொகுக்கப்பட்டுள்ளது.
வேலைவாய்ப்பு செய்திகள் 2022
நிறுவனம் | Coal India Limited (Coal India) |
பணியின் பெயர் | Management Trainee |
பணியிடங்கள் | 1050 |
விண்ணப்பிக்க கடைசி தேதி | 22.07.2022 |
விண்ணப்பிக்கும் முறை | Online |
கோல் இந்தியா லிமிடெட் காலிப்பணியிடங்கள்:
தற்போது வெளியான அறிவிப்பில், கோல் இந்தியா லிமிடெட்டில் (Coal India) காலியாக உள்ள Management Trainee பணிக்கு என மொத்தமாக 1050 பணியிடங்கள் Mining, Civil, Electronics & Telecommunication, System and EDP ஆகிய துறைகளின் கீழ் ஒதுக்கப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது.
Exams Daily Mobile App Download
Management Trainee கல்வி தகுதி:
Management Trainee பணிக்கு அரசு அல்லது அங்கீகாரம் பெற்ற பொறியியல் கல்லூரி / பல்கலைக்கழகங்களில் Computer Science, Computer Engg., IT ஆகிய பணி சார்ந்த பாடப்பிரிவில் B.E / B.Tech / B.Sc மற்றும் MCA Degree முடித்தவர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.
Management Trainee வயது வரம்பு:
- இப்பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் 31.05.2022 அன்றைய நாளின் படி, அதிகபட்சம் 30 வயதிற்குள் உள்ளவராக இருப்பது அவசியமானது ஆகும்.
- OBC – 03 ஆண்டுகள், SC / ST – 05 ஆண்டுகள், PWD – 10 ஆண்டுகள், PWD (OBC) – 13 ஆண்டுகள், PWD (SC/ST) – 15 ஆண்டுகள் என வயது தளர்வுகளும் அளிக்கப்பட்டுள்ளது.
Management Trainee ஊதியம்:
Management Trainee பணிக்கு தேர்வு செய்யப்பட்டு பணி அமர்த்தப்படும் விண்ணப்பதாரர்களுக்கு மாதம் தோறும் குறைந்தபட்சம் ரூ.50,000/- முதல் அதிகபட்சம் 1,60,000/- வரை மாத ஊதியமாக தரப்படும்.
Coal India தேர்வு செய்யும் முறை:
இப்பணிக்கு தகுதி உள்ள விண்ணப்பதாரர்கள் GATE மதிப்பெண் அடிப்படையில் Shortlist செய்யப்பட்டு Document Verification, Medical Examination, மற்றும் Interview மூலம் தேர்வு செய்யப்படுவார்கள்.
TNPSC No.1 Coaching Center – Join Immediately
Coal India விண்ணப்ப கட்டணம்:
- இந்த Coal India பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்களிடம் ரூ.1180/- விண்ணப்ப கட்டணமாக வசூலிக்கப்படும்.
- SC / ST / PWD / ESM மற்றும் Coal India நிறுவன பணியாளர்கள் போன்றவர்களுக்கு விண்ணப்ப கட்டணம் கிடையாது.
Coal India விண்ணப்பிக்கும் வழிமுறை:
இப்பணிக்கு விண்ணப்பிக்க தகுதி மற்றும் திறமை உள்ள விண்ணப்பதாரர்கள் பதிவின் இறுதியில் கொடுக்கப்பட்டுள்ள இணையதள இணைப்பில் உள்ள விண்ணப்பத்தை பூர்த்தி செய்து சமர்ப்பிக்க வேண்டும். 22.07.2022 என்பது இப்பணிக்கு விண்ணப்பிப்பதற்கான இறுதி நாள் ஆகும்.