TNPSC குரூப் 2, 2A தேர்வுக்கு தயாராகி வருவோருக்கு ஹாப்பி நியூஸ் – அரசு அறிவிப்பு!

0
TNPSC குரூப் 2, 2A தேர்வுக்கு தயாராகி வருவோருக்கு ஹாப்பி நியூஸ் - அரசு அறிவிப்பு!
TNPSC குரூப் 2, 2A தேர்வுக்கு தயாராகி வருவோருக்கு ஹாப்பி நியூஸ் - அரசு அறிவிப்பு!
TNPSC குரூப் 2, 2A தேர்வுக்கு தயாராகி வருவோருக்கு ஹாப்பி நியூஸ் – அரசு அறிவிப்பு!

தமிழகத்தில் தஞ்சாவூா் மாவட்டத்தைச் சோ்ந்த,TNPSC தேர்வுக்கு தயாராகும் இளைஞா்கள் பயன்பெரும் விதமாக குரூப்2, குரூப்2A தேர்வு இலவச பயிற்சி வகுப்புகள் மாா்ச் 1 ஆம் தேதி முற்பகல் 11 மணிக்கு தொடங்க உள்ளதாக மாவட்ட ஆட்சியா் தினேஷ் பொன்ராஜ் ஆலிவா் அறிவிப்பு வெளியிட்டுள்ளர்.

மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு:

TNPSC மூலம் நடத்தப்படும் போட்டி தேர்வுகளான குரூப்1, குரூப் 2, குரூப் 3, குரூப் 4 தேர்வுக்கான அறிவிப்புகள் கொரோனா தாக்கம் காரணமாக கடந்த 2 வருடங்களில் வெளியாகவில்லை, இருப்பினும் தற்போது சீரான நிலை நிலவி வருவதால் போட்டி தேர்வு அறிவிப்புகள் வெளியாகின்றன. அந்த வகையில் குரூப் 2, குரூப் 2 தேர்வுக்கான அறிவிப்பு அண்மையில் வெளியானது. இந்த தேர்வு வாயிலாக 5,831 காலிப் பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன.இந்த தேர்வுக்கான புதிய பாடத்திட்டம் மற்றும் மாதிரி வினாத்தாள் அதிகாரபூர்வ இணையதளத்தில் வெளியிடப்பட்டு உள்ளது. இதன் அடிப்படையில் தேர்வர்கள் தயாராகி வருகின்றனர்.

WhatsApp டெலிட் ஆன மெசேஜ்களை மீண்டும் படிப்பது எப்படி? எளிய வழிமுறைகள் இதோ!

இந்த போட்டி தேர்வுகளுக்கு அனைத்து மாவட்டங்களிலும் உள்ள வேலைவாய்ப்பு அலுவலகத்தில் இலவச பயிற்சி வகுப்புகள் நடத்தப்படும். இந்த பயிற்சி வகுப்புகள் மூலம் ஏழை எளிய தேர்வர்கள் பயன் பெற்று வருகின்றனர். இந்த பயிற்சி மூலம் பலர் தேர்வில் தேர்ச்சி பெற்று வருகின்றனர். இந்த வகையில் தஞ்சாவூா் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில் நெறி வழிகாட்டும் மையத்தின் தன்னாா்வப் பயிலும் வட்டத்தின் மூலம் , குரூப்2, குரூப்2A தோ்வுகளுக்கு மாா்ச் 1 ஆம் தேதி (முற்பகல் 11 மணிக்கு) முதல் தஞ்சாவூா் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் இலவசமாக பயிற்சி நடத்தப்படவுள்ளதாக மாவட்ட ஆட்சியா் தினேஷ் பொன்ராஜ் ஆலிவா் அறிவித்துள்ளார்.

மத்திய அரசு ஊழியர்களுக்கு 18 மாத DA நிலுவைத்தொகை உயர்வு? முழு விவரம் இதோ!

இந்த இலவச பயிற்சி வகுப்புகள் அனுபவமிக்க சிறப்பு வல்லுநா்களைக் கொண்டு நடத்தப்படுவதுடன், பாடக் குறிப்புகள் வழங்கப்பட்டு, மாதிரித் தோ்வுகளும் நடத்தப்படவுள்ளன. இதனை தொடர்ந்து முன்பு பயிற்சி பெற்ற மாணவா்களுக்காக மாதிரித் தோ்வு வகுப்புகள் தனியே நடத்தப்படவுள்ளன. எனவே தஞ்சாவூா் மாவட்டத்தைச் சோ்ந்த போட்டித் தோ்வுக்குத் தயாராகும் இளைஞா்கள், தங்களது பெயா் மற்றும் கல்வித்தகுதியைக் குறிப்பிட்டு 8110919990 என்ற வாட்ஸ் ஆப் எண்ணில் தகவல் அனுப்பிப் பதிவு செய்து கொள்ளலாம். மேலும், விவரங்களுக்கு 04362 – 237037 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என்று குறிப்பிடப்பட்டு உள்ளது.

Velaivaippu Seithigal 2022

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!