தமிழக கூட்டுறவு வங்கிகளில் நகைக்கடன் தள்ளுபடி – பெயர் பட்டியல் வெளியிட கோரிக்கை!
தமிழக அரசின் கீழ் நகைக்கடன் தள்ளுபடி பெற்ற பயனாளிகளின் பெயர் பட்டியல் அனைவரும் தெரிந்து கொள்ளும் வகையில் அந்தந்த கூட்டுறவு வங்கிகளின் தகவல் பலகையில் வெளியிட வேண்டும் என்று கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.
நகைக்கடன் தள்ளுபடி:
தமிழகத்தில் கடந்த சட்டமன்ற தேர்தலின் போது திமுக தேர்தல் அறிக்கையில் அனைவருக்கும் கூட்டுறவு வங்கிகளில் 5 சவரன் வரை நகைக்கடன் தள்ளுபடி அளிக்கப்படும் என்று குறிப்பிட்டிருந்தது. அதன் பின்னர் நகைக்கடன் தள்ளுபடி அறிவிப்பு காரணமாக நிகழ்ந்த பல்வேறு குளறுபடிகள் அரசால் கண்டுபிடிக்கப்பட்டது. மேலும் இந்த நகைக்கடன் தள்ளுபடியானது ஏழை எளிய மக்களுக்கு பயனளிக்கும் விதமாக மட்டுமே அமையும் என்ற நோக்கத்தில் கணக்கெடுப்பு நடைபெற்றது.
தமிழகத்தில் 1436 VAO காலிப்பணியிடங்கள் -TNPSC குரூப் 4 தேர்வு விரைவில் அறிவிப்பு!
அதனை தொடர்ந்து பல்வேறு நிபந்தனைகளின் அடிப்படையில் பெரும்பாலான அடையாளம் காணப்பட்ட நகைக்கடன் தள்ளுபடிக்கு தகுதியானவர்களின் பெயர் பட்டியல் அனைத்து கூட்டுறவு வங்கிகளுக்கும் அனுப்பப்பட்டது. அதன் அடிப்படையில் தகுதியான அனைவருக்கும் கூட்டுறவு வங்கி ஊழியர்கள் தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் தள்ளுபடி பெயர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்ட மக்கள் கூட்டுறவு வங்கிகளை நாடி தகவல் அறிந்து வருகின்றனர்.
தாராபுரத்தில் நவ.30ம் தேதி தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம் – சூப்பர் அறிவிப்பு வெளியீடு!
இந்நிலையில் தமிழ்நாடு நுகர்வோர் பாதுகாப்பு மற்றும் சுற்றுச்சூழல் ஆராய்ச்சி மையத்தின் பொதுச் செயலாளர் ஆர்.ரமேஷ் அவர்கள் இது குறித்து ஒரு கோரிக்கை வைத்துள்ளார். அதாவது நகைக்கடன் தள்ளுபடிக்கு தகுதியானவர்களின் பெயர் பட்டியலில் இடம் பெற்றுள்ள மக்கள் உண்மையில் நகைக்கடன் தள்ளுபடி பெற தகுதியானவர்கள் தானா என்பதை அனைவரும் அறிந்து கொள்ளும் விதமாக வங்கி தகவல் பலகையில் வெளியிடுமாறு கோரிக்கை வைத்துள்ளார்.