தமிழகத்தில் கூட்டுறவு வங்கி நகைக்கடன் தள்ளுபடி – பயனாளிகள் தேர்வுக்கு நிபந்தனைகள்?
தமிழகத்தில் கூட்டுறவு வங்கிகளில் வாங்கிய நகை கடன் தள்ளுபடிக்கு கடும் நிபந்தனைகள் கொண்டு வர அரசு திட்டமிட்டுள்ளது. அதன்படி தகுதியுள்ள நபர்களுக்கு மட்டுமே நகை கடன் தள்ளுபடி செய்யப்படும் என்று நிதி அமைச்சர் தெரிவித்துள்ளார்.
நகை கடன் :
தமிழகத்தில் கடந்த ஏப்ரல் மாதம் நடைபெற்ற சட்டமன்ற தேர்தல் பிரச்சாரத்தில் மு க ஸ்டாலின் கூட்டுறவு வங்கிகளில் 5 சவரன் வரை வாங்கிய நகை கடன்கள் தள்ளுபடி செய்யப்படும் என்று வாக்குறுதி அளித்தார். மேலும் அவர் ஆட்சிக்கு வந்தவுடன் அவர் அளித்த பல்வேறு வாக்குறுதிகளை நிறைவேற்றி வருகிறார். தமிழகம் முழுவதும் உள்ள கூட்டுறவு சங்கங்களில் மொத்த நகை கடன் 85 ஆயிரம் கோடி என்று கூட்டுறவு சங்கத்தினர் கூறுகின்றனர். நகை கடன் தள்ளுபடி செய்யப்படும் என்ற அறிவிப்பு வந்ததை அடுத்து மக்கள் நகைகளை மீட்பதில் ஆர்வம் காட்டவில்லை.
ICC டெஸ்ட் தரவரிசை பட்டியல் – கேஎல் ராகுல், சிராஜ் முன்னேற்றம்!
இதனால் கூட்டுறவு நிறுவன பணியாளர்களுக்கு சம்பளம் அளிக்க முடித்த நிலை வந்துள்ளது. தமிழகத்தில் தற்போது உள்ள நிதி நெருக்கடியில் நகை கடன்களுக்குக்கான தொகையை அரசு தர இயலாது. எனவே கூட்டுறவு வங்கிகளில் வாங்கிய நகை கடன் தள்ளுபடிக்கு கடும் நிபந்தனைகள் கொண்டு வர அரசு திட்டமிட்டுள்ளது. அதன் படி சரியான நபர்களுக்கு மட்டுமே நகை கடன் தள்ளுபடி செய்யப்படும் என்று நிதித்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.
TN Job “FB
Group” Join Now
இதற்காக கூட்டுறவு வங்கிகளில் நகை கடன் பெற்றவர்களில் 37 வகையான விவரங்களை சேகரிக்க பணியாளர்களுக்கு கூட்டுறவு துறை பதிவாளர் அறிவுறுத்தியுள்ளார். சேகரிக்கப்படும் விவரங்கள் தலைமை செயலகத்திற்கு கணினி மூலம் அனுப்பப்பட்டு வருகிறது. அரசு ஊழியர்கள், அதிக வருமானம் ஈட்டும் நபர்கள் வாங்கிய நகை கடன்கள் தள்ளுபடி செய்யப்பட மாட்டாது என்று தகவல் வெளியாகி வருகிறது. விரைவில் நகை கடன் தள்ளுபடி செய்யப்படும் நிபந்தனைகள் அறிவிக்கப்படும் என்று கூட்டுறவுத்துறை அலுவலர்கள் தெரிவித்துள்ளனர்.