CMC கல்லூரியில் Degree முடித்தவர்களுக்கான வேலை – விண்ணப்பிக்க கடைசி வாய்ப்பு!
வேலூர் மாவட்ட, கிறிஸ்துவ மருத்துவக் கல்லூரி (CMC Vellore) ஆனது வேலைவாய்ப்பு குறித்த புதிய அறிவிப்பு ஒன்றை சமீபத்தில் வெளியிட்டது. இதில் காலியாக உள்ள Non Technical Assistant பணிக்கான காலிப்பணியிடங்கள் நிரப்பவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆர்வமுள்ள மற்றும் தகுதியானவர்களின் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. இப்பணிக்கு விண்ணப்பிக்க தேவையான தகுதிகள் குறித்த முழு விவரங்களும் கீழே தொகுத்து வழங்கப்பட்டுள்ளது. விருப்பமுள்ளவர்கள் இறுதி நாள் முடிவதற்குள் விண்ணப்பித்து பயனடையுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.
வேலைவாய்ப்பு விவரங்கள்:
- Non Technical Assistant பணிக்கு என ஒதுக்கப்பட்டுள்ள பல்வேறு பணியிடங்கள் கிறிஸ்தவ மருத்துவக் கல்லூரி (CMC Vellore) நிரப்பப்பட உள்ளது.
- இப்பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிலையங்களில் ஏதேனும் ஒரு Graduate Degree முடித்தவராக இருக்க வேண்டும்.
- இந்த கல்லூரி பணிக்கு விண்ணப்பிக்க விருப்பமுள்ள விண்ணப்பதாரர்களின் வயது வரம்பு அதிகபட்சம் 30 வயது என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
- இந்த பணிக்கு தேர்வாகும் பணியாளர்கள் பணியின் போது தகுதி மற்றும் திறமையை பெருத்து CMC கல்லூரி மூலம் மாத சம்பளம் பெறுவார்கள்.
- Non Technical Assistant பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் நேர்முகத் தேர்வு அல்லது எழுத்து தேர்வு மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
விண்ணப்பிக்கும் முறை:
ஆர்வமுள்ள மற்றும் தகுதியானவர்களை திகாரபூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து 08.08.2022ம் தேதிக்குள் விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்பட்டிருந்தது. தற்போது அதற்கான கால அவகாசம் நாளையுடன் முடிய உள்ளதால் விண்ணப்பதாரர்கள் விரைந்து விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.