CMAT 2023 தேர்வர்கள் கவனத்திற்கு – விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு! NTA அறிவிப்பு!!

0
CMAT 2023 தேர்வர்கள் கவனத்திற்கு - விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு! NTA அறிவிப்பு!!
CMAT 2023 தேர்வர்கள் கவனத்திற்கு - விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு! NTA அறிவிப்பு!!
CMAT 2023 தேர்வர்கள் கவனத்திற்கு – விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு! NTA அறிவிப்பு!!

பொது மேலாண்மை சேர்க்கை தேர்வு (CMAT) 2023 நுழைவுத்தேர்வுக்கு விண்ணப்பிப்பதற்கான கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது. இதற்கான புதிய தேதி குறித்த விவரங்களை இப்பதிவில் காணலாம்.

கால அவகாசம் நீட்டிப்பு

நடப்பு கல்வியாண்டுக்கான பொது மேலாண்மை நுழைவுத் தேர்வு (CMAT) 2023 ஆன்லைன் விண்ணப்பங்களை தேசிய தேர்வு முகமை (NTA) வரவேற்றுள்ளது. இந்த தேர்வில் தேர்ச்சி பெறுபவர்கள் AICTE உடன் இணைந்த இணைப்பு நிறுவனங்களில் மேலாண்மை படிப்புகளில் சேருவதற்கு தகுதி பெற முடியும். அந்த வகையில், பொது மேலாண்மை நுழைவுத் தேர்வை எழுத விரும்புபவர்கள் பிப்ரவரி 13 ஆம் தேதி முதல் ஆன்லைன் மூலம் விண்ணப்பங்களை செலுத்தலாம் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டது.

Follow our Instagram for more Latest Updates

தமிழக அரசு ஊழியர்கள் கவனத்திற்கு – பழைய ஓய்வூதியத் திட்டம் குறித்த முக்கிய அறிவிப்பு!!

இந்த நிலையில், CMAT தேர்வுக்கான ஆன்லைன் விண்ணப்பப் படிவத்தை சமர்ப்பிப்பதற்கான கடைசி தேதியை நீட்டிக்க NTA முடிவு செய்துள்ளது. அந்த வகையில் CMAT விண்ணப்பப் படிவங்களை ஆன்லைனில் சமர்ப்பிப்பதற்கான கடைசி தேதி 13.03.2023 மாலை 05:00 மணி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. அதன்படி, விண்ணப்பதாரர்கள் https://cmat.nta.nic.in என்ற இணையதளம் மூலம் தங்களது விண்ணப்பங்களை செலுத்தலாம். அதே போல ஆன்லைனில் விண்ணப்பக் கட்டணம் செலுத்துவதற்கான கடைசி தேதி 13.03.2023 இரவு 11:50 மணி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

OFFICIAL PDF

TNPSC Online Classes

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!