TN TRB ஆசிரியர் தகுதித் தேர்வில் (TET) கட்டாயம் தேர்ச்சி பெற வேண்டுமா? CM CELL Reply!

0
TN TRB ஆசிரியர் தகுதித் தேர்வில் (TET) கட்டாயம் தேர்ச்சி பெற வேண்டுமா? CM CELL Reply!
TN TRB ஆசிரியர் தகுதித் தேர்வில் (TET) கட்டாயம் தேர்ச்சி பெற வேண்டுமா? CM CELL Reply!
TN TRB ஆசிரியர் தகுதித் தேர்வில் (TET) கட்டாயம் தேர்ச்சி பெற வேண்டுமா? CM CELL Reply!

தமிழகத்தில் “உங்கள் தொகுதியில் ஸ்டாலின்’ என்ற திட்டத்தின் மூலம் புகார் மனு வரவேற்கப்பட்டு பிரச்சனைகள் தீர்க்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் CM CELL அரசு உதவி பெறும் சிறுபான்மை, சிறுபான்மையற்ற பள்ளிகளின் ஆசிரியர்கள் நடப்பு ஆண்டுக்கான TET தேர்வில் தேர்ச்சி குறித்து reply அனுப்பியுள்ளது.

TET தேர்வில் கட்டாயம் தேர்ச்சி பெற வேண்டுமா?

சந்துரு, பூபதி கட்டாயக் கல்விச் சட்டத்தை (ஆர்டிஇ) மத்திய அரசு 2010 ஆகஸ்டு 23ல் அமல்படுத்தியது. இதை தமிழக அரசு ஏற்றுக் கொண்டு அமலாக்கம் செய்த தேதிக்கும் முன்னதாக பணி நியமனம் பெற்ற ஆசிரியர்களில் அரசு மற்றும் சிறுபான்மையினர் பள்ளிகளின் ஆசிரியர்களுக்கு ‘ டெட் ’ தகுதித்தேர்வு தேர்ச்சி கட்டாயம் இல்லை என்ற உத்தரவு நீதிமன்றம் வாயிலாகவும், அரசு உத்தரவு மூலம் அரசு செயல்முறைகள் வெளியீடு செய்யப்பட்டன. அரசு உதவிபெறும் சிறுபான்மையற்ற பள்ளி ஆசிரியர்கள் பணி நியமனங்கள் 2012 நவ., 16ம் தேதியிட்ட பள்ளிக்கல்வி இயக்குநர் செயல் முறைகளின் அடிப்படையில், இனிமேல் பணி நியமனங்கள் மேற்கொள்ளும்போது, டெட் தேர்ச்சி பெற்றவர்களை மட்டுமே தேர்வு செய்ய வேண்டும் என அனைத்து அரசு உதவி பெறும் பள்ளிகளின் செயலர்களுக்கும் அறிவுறுத்தப்பட்டது.

தமிழகத்தில் 3 நாட்களுக்கு மழை பெய்யும் – வானிலை ஆய்வு மையம்!

2010 செப்., 23 முதல் 2012 நவ16 க்கு இடையில் பணி நியமனம் செய்யப்பட்ட அரசு உதவிபெறும் பள்ளி ஆசிரியர்களுக்கு டெட் கட்டாயம் என்ற நிபந்தனை பற்றி தெரியாமல் பள்ளிக்கல்வி செயலாளர்கள் மாவட்ட கல்வி, முதன்மைக் கல்வி அலுவலர்கள் , உயர் அதிகாரிகள் மூலமாக பணி நியமனங்களுக்கு ஒப்புதல்கள் அளிக்கப்பட்டது. டெட் தேர்ச்சி பெற வேண்டும் என்ற நிபந்தனையை எதிர்த்து ஆங்காங்கே இது தொடர்பான வழக்குகளும் பதிவாகின. இதனைத்தொடர்ந்து நீதிமன்றங்களின் அறிவுறுத்தல் அடிப்படையிலும், தமிழக அரசின் கருணையிலும் இன்று வரை டெட் நிபந்தனை ஆசிரியர்களுக்கு பணி பாதுகாப்பு மட்டும் அளிக்கப்பட்டுள்ளது தவிர, பதவி உயர்வு போன்ற வேறு எந்த சலுகைகளும் கிடைக்கவில்லை.

TNPSC குரூப் 2, 2A & 4 VAO தேர்வர்களுக்கு சூப்பர் அறிவிப்பு – இதை படித்தால் வெற்றி உறுதி!

இந்நிலையில் நடப்பு ஆண்டிற்கான TET தேர்வுக்கு விண்ணப்பங்கள் வரவேற்க்கப்படுகிறது. இந்நிலையில் 5/11/2011 நாளிட்ட கல்வித்துறை அரசாணை எண் 181 ன் படி, RTE ACT அமலாக்கம் செய்யப்பட்ட 23/8/2010 க்குப் பிறகு பணி நியமனம் செய்யப்பட்ட அரசு, அரசு உதவி பெறும் சிறுபான்மை, சிறுபான்மையற்ற பள்ளிகளின் ஆசிரியர்கள் நடப்பு ஆண்டுக்கான TET தேர்வில் தேர்ச்சி பெற வேண்டுமா என்று பல்வேறு கேள்விகள் எழுப்பப்பட்டு வருகிறது. இந்நிலையில் ” உங்கள் தொகுதியில் முதலமைச்சர்” துறைக்கு ஒரு நபர் மனு ஒன்றை அனுப்பியுள்ளார். அந்த மனுவுக்கு CM CELL , அரசு, அரசு உதவி பெறும் சிறுபான்மை, சிறுபான்மையற்ற பள்ளிகளின் ஆசிரியர்கள் நடப்பு ஆண்டுக்கான TET தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும் என்பதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகவில்லை என்று REPLY அனுப்பியுள்ளது.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!