மத்திய தோல் ஆராய்ச்சி நிறுவனத்தில் 50+ காலிப்பணியிடங்கள் – 10 தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம்..!

0
மத்திய தோல் ஆராய்ச்சி நிறுவனத்தில் 50+ காலிப்பணியிடங்கள் - 10 தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம்..!
மத்திய தோல் ஆராய்ச்சி நிறுவனத்தில் 50+ காலிப்பணியிடங்கள் - 10 தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம்..!
மத்திய தோல் ஆராய்ச்சி நிறுவனத்தில் 50+ காலிப்பணியிடங்கள் – 10 தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம்..!

CSIR கீழ் செயல்பட்டு வரும் மத்திய தோல் ஆராய்ச்சி நிறுவனம் (CSIR-CLRI) ஆனது சமீபத்தில் வேலைவாய்ப்பு அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. இந்த அறிவிப்பில் காலியாக உள்ள Technicians பணிக்கு என மொத்தமாக 55 பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இப்பணிக்கு விண்ணப்பிக்க தகுதி மற்றும் திறமை உள்ள நபர்களின் விண்ணப்பங்கள் மட்டுமே ஏற்றுக்கொள்ளப்படும். விண்ணப்பிக்க தேவையான தகுதி, விண்ணப்பிக்கும் முறை போன்றவை கீழ்வருமாறு தரப்பட்டுள்ளது.

வேலைவாய்ப்பு செய்திகள் 2022
நிறுவனம் Central Leather Research Institute (CSIR-CLRI)
பணியின் பெயர் Technicians
பணியிடங்கள் 55
விண்ணப்பிக்க கடைசி தேதி Online
விண்ணப்பிக்கும் முறை 20.06.2022

மத்திய தோல் ஆராய்ச்சி நிறுவனம் காலிப்பணியிடங்கள்:

CSIR கீழ் செயல்பட்டு வரும் மத்திய தோல் ஆராய்ச்சி நிறுவனத்தில் (CSIR-CLRI) Technicians பணிக்கு என மொத்தமாக 55 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளது.

Technicians கல்வி தகுதி:

Technicians பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசு அனுமதி பெற்ற பள்ளிகள் / கல்வி நிலையங்களில் 10 ம் வகுப்பு தேர்ச்சி அல்லது பணிக்கு சம்பந்தப்பட்ட துறைகளில் ITI தேர்ச்சி பெற்றவராக இருப்பது அவசியமானது ஆகும்.

Technicians அனுபவம்:

இப்பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது தனியார் தோல் நிறுவனங்களில் பணிக்கு தொடர்புடைய பிரிவுகளில் குறைந்தபட்சம் 2 ஆண்டுகள் முதல் அதிகபட்சம் 3 ஆண்டுகள் வரை அனுபவம் உள்ளவராக இருக்க வேண்டும்.

TN Job “FB  Group” Join Now

Technicians வயது வரம்பு:

  • Technicians பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்களின் வயது வரம்பு அதிகபட்சம் 28 வயது என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
  • SC / ST பிரிவினருக்கு 05 வருடம், OBC பிரிவினர், CSIR பணியாளர்களுக்கு 03 வருடம் வயது தளர்வும் தரப்பட்டுள்ளது. வயது தளர்வு பற்றிய கூடுதல் தகவலை அறிவிப்பில் காணலாம்.

    Technicians ஊதியம்:

இப்பணிக்கு தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்கள் பணியின் போது Level 2 (Rs.19,900 – 63,300) என்கிற ஊதிய அளவின் படி, ரூ.33,875/- மாத ஊதியமாக பெறுவார்கள்.

CSIR-CLRI தேர்வு முறை:

இப்பணிக்கு தகுதி மற்றும் திறமை உள்ள நபர்கள் Short List செய்யப்பட்டு Trade Test மற்றும் Written Test மூலம் தேர்வு செய்யப்பட்டு பணி அமர்த்தப்படுவார்கள்.

TCS & Infosys நிறுவனங்களில் 90,000+ பேருக்கு வேலைவாய்ப்பு – முழு விவரம் இதோ!

CSIR-CLRI விண்ணப்ப கட்டணம்:

  • இப்பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் ரூ.100/- விண்ணப்பக் கட்டணமாக செலுத்த வேண்டும்.
  • SC / ST / PwD / ESM பிரிவினர், பெண்கள், CSIR பணியாளர்கள் போன்றவர்களுக்கு விண்ணப்ப கட்டணம் கிடையாது.

CSIR-CLRI விண்ணப்பிக்கும் முறை:

இப்பணிக்கு விண்ணப்பிக்க விருப்பம் உள்ள விண்ணப்பதாரர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள இணையதள இணைப்பின் மூலம் தங்களது விண்ணப்பத்தை பதிவு செய்து கொள்ளலாம். மேலும் தேர்வு குழு பரிந்துரை செய்யும் விண்ணப்பதாரர்கள் மட்டும் பதிவு செய்த விண்ணப்பத்தின் நகலுடன் தேவையான ஆவணங்களை இணைத்து அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு விரைவு தபால் செய்ய வேண்டும். 20.06.2022 என்பது இப்பணிக்கு விண்ணப்பிக்க இறுதி நாள் ஆகும்.

CSIR-CLRI Notification Link

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!