CLAT 2021 தேர்வு விண்ணப்ப பதிவு – மே 15 வரை கால அவகாசம் நீட்டிப்பு!

0
CLAT 2021 தேர்வு விண்ணப்ப பதிவு - மே 15 வரை கால அவகாசம் நீட்டிப்பு!
CLAT 2021 தேர்வு விண்ணப்ப பதிவு - மே 15 வரை கால அவகாசம் நீட்டிப்பு!
CLAT 2021 தேர்வு விண்ணப்ப பதிவு – மே 15 வரை கால அவகாசம் நீட்டிப்பு!

சட்ட பல்கலையில் இளங்கலை மற்றும் முதுகலை மாணவர் சேர்க்கைக்கு நடத்தப்படும் CLAT பொது நுழைவுத்தேர்வுக்கு விண்ணப்பிக்க கால அவகாசம் மே 15ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

CLAT நுழைவுத்தேர்வு:

நாடு முழுவதும் உள்ள 22 தேசிய பல்கலைக்கழகங்கள் மற்றும் சட்ட கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை CLAT பொது நுழைவுத் தேர்வின் மூலம் நடத்தப்படுகிறது. மேலும் இளங்கலை மற்றும் முதுகலை மாணவர்களுக்கு என தனித்தனியாக நுழைவு தேர்வுகள் நடத்தப்படுகிறது. இந்த படிப்பில் சேர விரும்பும் மாணவர்கள் 12ம் வகுப்பு தேர்வில் 45% மதிப்பெண்கள் பெற்றிருக்க வேண்டும்.

மே 1 முதல் கோடை விடுமுறை – உயர் நீதிமன்ற தலைமை பதிவாளர் அறிவிப்பு!

2021 CLAT தேர்வுகள் ஜூன் மாதம் நடத்தப்படுவதாக முன்னர் அறிவிக்கப்பட்டு அதற்கான விண்ணப்ப பதிவுகள் ஜனவரி மாதம் முதல் தொடங்கப்பட்டது. முதலில் விண்ணப்ப பதிவிற்கு மார்ச் 31ம் தேதி இறுதி நாள் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. அந்த சமயத்தில் கொரோனா இரண்டாம் அலை தாக்கம் நாட்டில் தொடங்கி விட்ட காரணத்தால் தேர்வுக்கு விண்ணப்பிக்க ஏப்ரல் 30ம் தேதி வரை கால அவகாசம் நீட்டிக்கப்பட்டது.

TN Job “FB  Group” Join Now

கொரோனா தொற்றின் தாக்கம் அதிகரித்து வருவதால் CLAT தேர்வுகளை மே மாதத்தில் நடத்துவதற்கு ஆலோசனைகள் மேற்கொள்ளப்பட்டது. தற்போது நாடு முழுவதும் உள்ள பல மாநிலங்களிலும் கொரோனா தொற்று காரணமாக ஊரடங்கு அறிவிக்கப்பட்டிருப்பதால் தேர்வுகளை முன்னர் அறிவித்த ஜூன் 13ம் தேதி அன்று நடத்த தேர்வு வாரியம் முடிவு செய்துள்ளது. இதனால் தேர்வுக்கு விண்ணப்பிக்க மே 15ம் தேதி வரை கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது. CLAT தேர்வு எழுத விரும்பும் மாணவர்கள் https://consortiumofnlus.ac.in என்ற இணையதளம் வழியாக விண்ணப்பிக்கலாம்.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!