டிசம்பர் 18ம் தேதி CLAT 2023 நுழைவு தேர்வுகள் – முக்கிய விவரங்கள் இதோ!

0
டிசம்பர் 18ம் தேதி CLAT 2023 நுழைவு தேர்வுகள் - முக்கிய விவரங்கள் இதோ!
டிசம்பர் 18ம் தேதி CLAT 2023 நுழைவு தேர்வுகள் - முக்கிய விவரங்கள் இதோ!
டிசம்பர் 18ம் தேதி CLAT 2023 நுழைவு தேர்வுகள் – முக்கிய விவரங்கள் இதோ!

2023ம் ஆண்டு சட்ட பல்கலையில் மாணவர்களின் சேர்க்கைக்காக நடத்தப்படும் CLAT நுழைவு தேர்வுகள் நடக்க உள்ள தேதிகள் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் வெளியாகியுள்ளது.

CLAT தேர்வு 2023:

நாடு முழுவதும் உள்ள 22 தேசிய பல்கலைக்கழகங்கள் மற்றும் சட்ட கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை பொது சட்ட நுழைவுத் தேர்வின் (CLAT) மூலம் நடத்தப்படுகிறது. இப்பல்கலைக்களங்களில் இளங்கலை மற்றும் முதுகலை படிப்புகளுக்கென்று தனித்தனியாக நுழைவு தேர்வுகள் நடத்தப்படுகின்றது. கடந்த வாரம் 2024-2025 ம் கல்வி ஆண்டில் தொடங்கப்படும் 5 ஆண்டு பட்டப்படிப்பு மாணவர்களுக்கு டிசம்பர் 2023 ல் CLAT தேர்வு நடத்தப்படும் என்று அறிவிப்பு வெளியிடப்பட்டது.

போலி ஆவணங்கள் மூலம் வேலை வாய்ப்பு பெற்றவர்களுக்கு ஆப்பு வைத்த நிறுவனம் – இது தேவையா? இப்போ அனுபவிங்க!

Exams Daily Mobile App Download

CLAT இளநிலை படிப்பில் சேருவதற்கு மாணவர்கள் தங்கள் 12ம் வகுப்பில் 45% மதிப்பெண்களை எடுத்திருக்க வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், 2023ம் கல்வி ஆண்டிற்கான மாணவர்கள் சேர்க்கைக்கு இந்த மாதம் 13ம் தேதி வரை விண்ணப்பங்கள் பதிவு செய்யப்படும் என்றும், இதற்கான தேர்வுகள் டிசம்பர் 18ம் தேதி நடைபெறும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. விண்ணப்பங்களை பதிவு செய்வதற்கு பொது பிரிவு மாணவர்களுக்கு ரூ.4,000மும், எஸ்சி , எஸ்டி பிரிவினருக்கு ரூ.3,500 கட்டணமாக செலுத்த வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Telegram Updates for Latest Jobs & News – Join Now

TNPSC Online Classes

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!