தமிழகத்தில் பள்ளிகளில் மீண்டும் ஷிப்ட் முறையில் வகுப்புகள்? அவசர ஆலோசனை!

0
தமிழகத்தில் பள்ளிகளில் மீண்டும் ஷிப்ட் முறையில் வகுப்புகள்? அவசர ஆலோசனை!
தமிழகத்தில் பள்ளிகளில் மீண்டும் ஷிப்ட் முறையில் வகுப்புகள்? அவசர ஆலோசனை!
தமிழகத்தில் பள்ளிகளில் மீண்டும் ஷிப்ட் முறையில் வகுப்புகள்? அவசர ஆலோசனை!

தமிழகத்தில் தொடர்ச்சியாக அதிகரித்து வரும் கொரோனா பரவல் சூழலுக்கு மத்தியில் பள்ளிகளில் மீண்டும் ஷிப்ட் முறையில் வகுப்புகளை நடத்துவது குறித்து ஆலோசனைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

ஷிப்ட் முறையில் வகுப்புகள்

தமிழகத்தில் கடந்த 2 ஆண்டுகளாக காணப்பட்டு வரும் கொரோனா நோய்த்தொற்று சூழலுக்கு மத்தியில் பள்ளிகள், கல்லூரிகள் உள்ளிட்ட அனைத்து வகையான கல்வி நிறுவனங்களிலும் ஆன்லைன் முறையில் பாடங்கள் நடத்தப்பட்டது. அதே நேரத்தில் அவ்வப்போது குறைந்து வந்த கொரோனா நிலவரத்தை கருத்தில் கொண்டு முன்னதாக சுழற்சி முறையில் வகுப்புகள் நடத்தப்பட்டது. இந்த நிலையில் கடந்த பிப்ரவரி மாதத்திற்கு பிறகு கொரோனா பாதிப்புகள் குறைந்து வந்ததையடுத்து தமிழகம் முழுவதும் உள்ள பள்ளி, கல்லூரிகள் வழக்கமான முறையில் மீண்டும் செயல்படத் துவங்கி இருக்கிறது.

Exams Daily Mobile App Download

அந்த வகையில் பள்ளிகள் திறக்கப்பட்டு தற்போது ஒரு மாதம் கடந்திருக்கும் நிலையில் நாடு முழுவதும் கொரோனா 4ம் அலை பாதிப்புகள் புதிய தாக்கத்தை ஏற்படுத்தி வருகிறது. தமிழகத்திலும், கொரோனா பரவலால் நாள் ஒன்றுக்கு ஆயிரக்கணக்கான மக்கள் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இதனால் பள்ளிக்கு செல்லும் குழந்தைகளுக்கும் இந்த நோய்த்தொற்று பரவும் சூழல் நிலவுகிறது. இதை கருத்தில் கொண்டு பள்ளிகளை மீண்டுமாக ஷிப்ட் முறையில் நடத்துவது குறித்து ஆலோசிக்கப்பட்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

தமிழகத்தில் பெயர் மாற்றம் செய்ய சென்னை வரை செல்ல தேவையில்லை – புதிய வசதி இதோ!

அதாவது, தமிழகம் முழுவதும் உள்ள தனியார் பள்ளி நிர்வாகங்கள், 1 முதல் 5ம் வகுப்பு வரையுள்ள மாணவர்களுக்கு ஆன்லைன் முறையில் வகுப்புகளை நடத்தவும், மற்ற மாணவர்களுக்கு ஒரு நாள் விட்டு ஒரு நாள் என்ற அடிப்படையில் சுழற்சி முறையில் வகுப்புகளை மேற்கொள்வது குறித்த முக்கிய ஆலோசனையில் ஈடுபட்டுள்ளதாக தெரிகிறது. மேலும் இது குறித்து பள்ளி மாணவர்களின் பெற்றோர்களிடம் ஆலோசனை மேற்கொள்ளப்பட்டு இது தொடர்பான அறிவிப்புகள் விரைவில் வெளியாக வாய்ப்புகள் இருப்பதாக எதிர்பார்க்கப்பட்டுள்ளது. மறுபக்கத்தில், கொரோனா பரவல் அதிகரிக்கும் பட்சத்தில் தமிழகத்தில் மீண்டும் கடுமையான கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட வாய்ப்புகள் இருப்பதால் பள்ளிகள் மூடப்படும் என்ற தகவல்கள் வெளியான வண்ணம் இருக்கிறது.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here