வாரத்தில் 3 நாட்கள் வகுப்புகள், 3 நாட்கள் விடுமுறை – CBSE வாரியம் முக்கிய முடிவு!

0
வாரத்தில் 3 நாட்கள் வகுப்புகள், 3 நாட்கள் விடுமுறை - CBSE வாரியம் முக்கிய முடிவு!
வாரத்தில் 3 நாட்கள் வகுப்புகள், 3 நாட்கள் விடுமுறை - CBSE வாரியம் முக்கிய முடிவு!
வாரத்தில் 3 நாட்கள் வகுப்புகள், 3 நாட்கள் விடுமுறை – CBSE வாரியம் முக்கிய முடிவு!

மத்திய இடைநிலைத் தேர்வு வாரியம் கொரோனா தொற்று பாதிப்புகள் அதிகரித்து வருவதால் வாரத்தில் 3 நாட்கள் ஆன்லைன் வகுப்புகள் மற்றும் 3 நாட்கள் நேரடிவகுப்புகள் என்று நடத்துவதற்கு திட்டமிட்டுள்ளது. இது தொடர்பான வழிகாட்டுதல்களும் வெளியிடப்பட்டுள்ளது.

சிபிஎஸ்இ வாரியம்:

நாட்டில் மீண்டும் கொரோனா தொற்று பரவல் அதிகரித்துள்ளது. இதனால் மாணவர்களின் நலனை கருத்தில் கொண்டு மத்திய இடைநிலைத் தேர்வு வாரியம் (CBSE) மாணவர்களுக்கான வகுப்புகளை ஆஃப்லைன் மற்றும் ஆன்லைன் முறையில் நடத்த திட்டமிட்டுள்ளது. ஆன்லைன் வகுப்புகள் மூன்று நாட்களுக்கு நடைபெறும் அதே வேளையில், ஆஃப்லைன் வகுப்புகள் மூன்று நாட்களுக்கு நடைபெறும். நேரடி வகுப்புகளில் கலந்து கொள்ளும் மாணவர்கள் பெற்றோரின் அனுமதியை பெறவேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

விஜய் டிவி ‘பாரதி கண்ணம்மா’ முதல் ‘மௌன ராகம்’ வரை – சீரியல்களில் ரசிகர்களின் டாப் கமெண்ட்ஸ்!

கோவிட்-19 பாதிப்பு அதிகரித்து வரும் சூழலில் குழந்தைகளின் பாதுகாப்பு அவசியம் என்று தனியார் பள்ளிகளின் சங்கத்தின் துணைத் தலைவர் விராஜ் மோடி அறிவித்துள்ளார். போபாலில் உள்ள பெரும்பாலான தனியார் பள்ளிகள் இப்போது மூன்று நாட்களுக்கு ஆஃப்லைன் வகுப்புகளையும், மூன்று நாட்களுக்கு ஆன்லைன் வகுப்புகளையும் நடத்துகின்றது என்று அவர் அறிவித்துள்ளார். போபால் தவிர, மத்திய பிரதேசத்தில் உள்ள பல தனியார் பள்ளிகளும் இதே முறையில் வகுப்புகளை நடத்த முடிவு செய்துள்ளது. 50 சதவீத திறன் கொண்ட 105 சிபிஎஸ்இ பள்ளிகளில் வகுப்புகள் நடத்தப்படுகின்றது. மத்திய பிரதேசத்தில் பள்ளிகள் 100 சதவீத மாணவர்களுடன் செயல்பட்டு வருகிறது.

இந்தியாவில் தீவிரமெடுக்கும் ஓமைக்ரான் பரவல் – 5 பேருக்கு தொற்று உறுதி! பொதுமக்கள் அச்சம்!

இருப்பினும், அதிகரித்து வரும் கொரோனா தொற்று பாதிப்பு நிலையில், முதல்வர் சிவராஜ் சவுகான் இப்போது நவம்பர் 29 முதல் 50 சதவீத மாணவர்களுடன் மத்திய பிரதேசத்தில் வகுப்புகள் நடைபெறும் என்று தெரிவித்துள்ளார். அங்கு 1 முதல் 12 ஆம் வகுப்புகளுக்கு பள்ளிகளை மீண்டும் திறக்கப்பட்டுள்ளது. ஆசிரியர்கள், ஊழியர்கள் மற்றும் பிற ஊழியர்களும் கோவிட்-19 தடுப்பூசிகளின் இரண்டு டோஸ்களையும் போடுமாறு அரசு கேட்டுக் கொண்டுள்ளது. இந்நிலையில், டெல்லியில் பள்ளிகள் மீண்டும் திறக்கப்பட்டது, ஆனால் காற்று மாசுபாடு காரணமாக நான்கு நாட்களுக்குப் பிறகு மூடப்பட்டது. மேலும், டெல்லியில் உள்ள அனைத்து பள்ளிகளும் டிசம்பர் 3ம் தேதி முதல் மறு உத்தரவு வரும் வரை மூடப்படும் என டெல்லி சுற்றுச்சூழல் அமைச்சர் கோபால் ராய் தெரிவித்துள்ளார்.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here