12 ம் வகுப்பு பொதுத்தேர்வு – மாநில அரசுகளின் முடிவுகள் !!

1
12 ம் வகுப்பு பொதுத்தேர்வு - மாநில அரசுகளின் முடிவுகள் !!
12 ம் வகுப்பு பொதுத்தேர்வு - மாநில அரசுகளின் முடிவுகள் !!
12 ம் வகுப்பு பொதுத்தேர்வு – மாநில அரசுகளின் முடிவுகள் !!

கொரோனா தொற்று பாதிப்பு காரணமாக நாடு முழுவதும் உள்ள கல்வி வாரியங்கள் 12 ம் வகுப்பு பொதுத்தேர்வை தள்ளி வைத்திருந்த நிலையில் பல மாநிலங்கள் தேர்வை ரத்து செய்துள்ளது. மாநில அரசுகளின் முடிவுகளை குறித்து இந்த பதிவில் காண்போம்.

12ம் வகுப்பு பொதுத்தேர்வு:

நாடு முழுவதும் கொரோனா தொற்றின் இரண்டாம் அலை கடந்த மார்ச் மாதம் முதல் பரவி வருகிறது. பொதுவாக மார்ச் மாதத்தில் நடத்தப்படும். கொரோனா காரணமாக நடப்பு ஆண்டில் மே மாதத்தில் தேர்வுகளை நடத்த கல்வி வாரியங்கள் திட்டமிட்டிருந்தது. தொடர்ந்து கொரோனா அதிகரிப்பால் தேர்வை ரத்து செய்ய கோரிக்கைகள் வைக்கப்பட்டது. இதனை தொடர்ந்து கடந்த ஜூன் 1ம் தேதி பிரதமர் தலைமையிலான உயர்மட்ட ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

TN Job “FB  Group” Join Now

கூட்டத்தின் முடிவில் ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களின் பாதுகாப்பு நலன் கருதி மத்திய இடைநிலைக் கல்வி வாரியத்தின் 12ம் வகுப்பு பொதுத்தேர்வை ரத்து செய்வதாக அறிவித்தார். மேலும், இந்திய பள்ளிக்கல்வி சான்றிதழ் கல்வி வாரியமும் 12ம் வகுப்பு பொதுத்தேர்வை ரத்து செய்தது. இதனை தொடர்ந்து பல மாநிலங்களின் கல்வி வாரியங்களும் பொதுத்தேர்வு குறித்த தங்களது முடிவை அறிவித்து வருகின்றது.

தமிழகத்தில் + 2 பொதுத்தேர்வு – கல்வியாளர்களின் மாற்று கருத்துக்கள்!!

மாநில அரசுகளின் முடிவுகள்:

ராஜஸ்தான்:

ராஜஸ்தான் பள்ளி கல்வி அமைச்சர் கோவிந்த் சிங் டோட்டாஸ்ரா, கொரோனாவின் மூன்றாவது அலை குறித்த அச்சத்தை கருத்தில் கொண்டு, அமைச்சர்கள் கூட்டத்தில் ராஜஸ்தான் இடைநிலைக் கல்வி வாரியத்தின் 10 மற்றும் 12 ஆம் வகுப்பு வாரிய தேர்வுகளை ரத்து செய்ய இன்று முடிவு செய்யப்பட்டது என்று கூறியுள்ளார்.

கோவா:

கோவா முதலமைச்சர் பிரமோத் சாவந்த், விரிவான ஆலோசனைகளுக்குப் பிறகு, எங்கள் மாணவர்களின் உடல்நலம் மற்றும் பாதுகாப்பிற்கு அதிக முன்னுரிமை அளிக்கும் விதமாக 12 ம் வகுப்பு தேர்வுகள் ரத்து செய்யப்படுகிறது. மாணவர்களின் மதிப்பெண்கள் அரசின் உள்மதிப்பீடு முறைப்படி வெளியிடப்படும் என்று கூறியுள்ளார்.

மத்திய பிரதேசம்:

மத்திய பிரதேச முதல்வர் சிவ்ராஜ் சிங் சவுகான், 2020-21 ஆம் ஆண்டிற்கான 12 ஆம் வகுப்பு வாரிய தேர்வுகள் நடப்பு ஆண்டு ரத்து செய்யப்பட்டுள்ளது என்று கூறியுள்ளார்.

தமிழக தனியார் கல்லூரி விரிவுரையாளர்களுக்கு ஊதியம் – அரசுக்கு வலியுறுத்தல்!!

உத்தரகண்ட்:

மாநிலத்தில் நிலவும் கோவிட் நிலைமையைக் கருத்தில் கொண்டு உத்தரகண்ட் இடைநிலை வாரிய தேர்வுகளும் ரத்து செய்யப்படுவதாகவும், முதலமைச்சருடன் கலந்தாலோசித்த பின்னர் மாணவர்கள், ஆசிரியர்கள் மற்றும் பாதுகாவலர்களின் நலனுக்காக இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக மாநில கல்வி அமைச்சர் அரவிந்த் பாண்டே தெரிவித்துள்ளார்.

கர்நாடகா:

கர்நாடக கல்வி அமைச்சர் எஸ்.சுரேஷ்குமார் புதன்கிழமை, மேல்நிலைப் பள்ளி விடுப்புச் சான்றிதழ் (எஸ்.எஸ்.எல்.சி) (10-ஆம் வகுப்பு) மற்றும் பியூசி 2ம் ஆண்டு (12-ஆம் வகுப்பு) தேர்வுகளை நடத்துவது குறித்த முடிவு விரைவில் அறிவிக்கப்படும். இது தொடர்பாக ஆசிரியர்கள், கல்வி வல்லுநர்கள் மற்றும் பெற்றோர்களுடன் கலந்துரையாடல்கள் நடைபெற்று வருவதாகவும், குழந்தைகளின் ஆரோக்கியம் மற்றும் அவர்களின் எதிர்காலம் ஆகியவற்றைக் கருத்தில் கொண்டு தகுந்த முடிவு விரைவில் எடுக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளார்.

இந்தியாவில் குழந்தைகளுக்கு கொரோனா தடுப்பூசி – பாரத் பயோடெக் சோதனை!!

மகாராஷ்டிரா:

மகாராஷ்டிரா பள்ளி கல்வி அமைச்சர் வர்ஷா கெய்க்வாட், 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான மாநில வாரிய தேர்வுகள் தொடர்பாக பேரிடர் மேலாண்மை ஆணையத்திடம் ஒரு திட்டம் அனுப்பப்பட்டுள்ளது. இது குறித்த முடிவு ஓரிரு நாட்களில் எடுக்கப்படும் என்றும் கூறினார்.

ஒடிசா:

ஒடிசாவில், மாநில காங்கிரஸ் தலைவர் நிரஞ்சன் பட்நாயக் கோவிட் -19 தொற்றுநோயின் இரண்டாவது அலை காரணமாக மாநில அரசு 12 ஆம் வகுப்பு வாரிய தேர்வை ரத்து செய்ய வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளார்.

உத்தரபிரதேசம்:

உத்தரபிரதேசத்தில், சமாஜ்வாடி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ் நேற்று சிபிஎஸ்இ தேர்வுகளை போன்று மாநில வாரியங்களும் தேர்வை ரத்து செய்ய வேண்டும் என்று அரசுக்கு கோரிக்கை வைத்துள்ளார்.

மேற்கு வங்கம்:

மேற்கு வங்கத்தில், 10 மற்றும் 12 ஆம் வகுப்பு வாரிய தேர்வுகளின் அட்டவணை அறிவிக்கப்பட இருந் நிலையில் தற்போது செய்தியாளர் சந்திப்பு தள்ளிவைக்கப்பட்டுள்ளது. தற்போதைய சூழ்நிலையில் தேர்வுகளை எவ்வாறு நடத்துவது மற்றும் மதிப்பீடு செய்வது போன்றவற்றை ஆராய நிபுணர்களின் குழு அமைக்கப்பட்டுள்ளதாக பள்ளி கல்வித் துறை அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

இன்று முதல் ஜூன் 10 வரை தளர்வுகளுடன் முழு ஊரடங்கு நீட்டிப்பு – போக்குவரத்துக்கு அனுமதி!!

தமிழ்நாடு:

மாநில கல்வி நிபுணர்களுடன் ஆலோசனை நடத்திய பின்னர் 12ம் வகுப்பு தேர்வு குறித்த அறிவிப்பை இரண்டு நாட்களில் அரசு அறிவிக்கும் என்று தமிழக பள்ளி கல்வி அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார்.

பஞ்சாப்:

பஞ்சாபின் கல்வி அமைச்சர் விஜய் இந்தர் சிங்லா, பொதுத்தேர்வை ரத்து செய்வது தற்போதைய நிலையில் சரியான முடிவாகும். ஆனால் மாணவர்களுக்கான உயர்கல்வி சேர்க்கை மற்றும் இறுதி மதிப்பெண் வழங்கும் முறைகளை குறித்து மத்திய அரசு எந்த ஒரு முடிவையும் வெளியிடாமல் உள்ளது என்று கருத்து தெரிவித்துள்ளார்.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

1 COMMENT

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!