தமிழகத்தில் 12ம் வகுப்பு பொதுத்தேர்வு கருத்துகேட்பு – மின்னஞ்சல், தொடர்பு எண் அறிவிப்பு!

33
தமிழகத்தில் 12ம் வகுப்பு பொதுத்தேர்வு கருத்துகேட்பு - மின்னஞ்சல், தொடர்பு எண் அறிவிப்பு!
தமிழகத்தில் 12ம் வகுப்பு பொதுத்தேர்வு கருத்துகேட்பு - மின்னஞ்சல், தொடர்பு எண் அறிவிப்பு!
தமிழகத்தில் 12ம் வகுப்பு பொதுத்தேர்வு கருத்துகேட்பு – மின்னஞ்சல், தொடர்பு எண் அறிவிப்பு!

12 ம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு நடத்துவது குறித்த கருத்துக்களை பொதுமக்கள், மாணவர்கள், பெற்றோர்கள், கல்வியாளர்கள் போன்றோர் மின்னஞ்சல் மற்றும் தொலைபேசி எண்ணை தொடர்பு கொண்டு தெரிவிக்கலாம் என பள்ளிக் கல்வித்துறை தெரிவித்துள்ளது.

12ம் வகுப்பு பொதுத்தேர்வு :

தமிழகத்தில் கடந்த வருடம் மார்ச் மாதம் பரவிய கொரோனா காரணத்தால் பள்ளி, கல்லூரிகளுக்கு காலவரையற்ற தொடர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இடையில் சற்று கொரோனா பரவல் குறைந்ததால் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு மட்டும் பள்ளிகள் திறக்கப்பட்டு பாடங்கள் நடத்தப்பட்டது. செய்முறை தேர்வும் நடைபெற்றது. பொதுத் தேர்வானது மே 5ம் தேதி முதல் நடைபெறவிருந்தது. இந்த நிலையில் கொரோனா இரண்டாம் அலை பரவல் தொடங்கியது. எனவே மாணவர்களின் நலன் கருதி பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டது.

TN Job “FB  Group” Join Now

ssc

அதனால் மாணவர்கள் வீட்டிலேயே இருந்து தேர்வுக்கு தயாராகும் படி அரசு அறிவுறுத்தியது. பொதுத்தேர்வு தேதி பின்னர் அறிவிக்கப்படும் என பள்ளிக்கல்வித்துறை தெரிவித்தது. 1 முதல் 11ம் வகுப்பு வரை தேர்வின்றி தேர்ச்சி பெற்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் 12ம் வகுப்பு மாணவர்கள் அடுத்து உயர்கல்வி தொடங்கவிருப்பதால் தேர்வு அவசியமானதாக உள்ளது. கடந்த வருடத்தை விட வைரஸ் அதிக வீரியத்துடன் பரவுவதால் தேர்வை நடத்த அரசு அச்சப்படுகிறது. இதனால் மாணவர்களுக்கு தொற்று பரவும் வாய்ப்பு உள்ளது. பள்ளிக் கல்வித்வித்துறை கல்வியாளர்களுடன் ஆலோசித்து தேர்விற்கான வழிமுறைகளை வடிவமைத்துள்ளது.

தமிழகத்தில் முழு ஊரடங்கு மேலும் நீட்டிப்பு? முதல்வர் முக ஸ்டாலின் ஆலோசனை!!

ஒரு சிலர் தேர்வு நடத்த எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். மற்றொரு புறம் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு தேர்வு அவசியம் இது அவர்களின் எதிர்காலத்தை தீர்மானிக்கும் என்கின்றனர். எனவே பள்ளிக்கல்வித்துறை மின்னஞ்சல் மற்றும் தொலைபேசி எண்ணை வெளியிட்டுள்ளது. இதன் மூலம் கல்வியாளர்கள், மாணவர்கள், பெற்றோர்கள் ஆகியோர் 12ம் வகுப்பு பொதுத்தேர்வு நடத்துவது குறித்து தங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாம் என கூறியுள்ளது tnschooledu21@gmail என்ற மின்னஞ்சல் மூலமாகவும் 14417 என்ற தொலைபேசி எண் மூலமாகவும் கருத்து தெரிவிக்கலாம் என பள்ளிக்கல்வித்துறை தெரிவித்துள்ளது.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

33 COMMENTS

  1. 50000 thousand students Mattu erukara cbse school exams cancel pannum pothu engaluku en cancel panna kudathu

  2. XII Board exam is must. If the grading is awarded with any average clause based on past records of schools own method of exam patern & own valuation is conflict to common board exam. Further, suppose the board exam is cancelled, than how students are able to attend the common entrance exam consiting all subjects for their higher studies. So, board exam should conduct after the commencement of normal life – to secure proper qualification to accure good higher education.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!