அதிக சிசிடிவி கேமரா உள்ள நகரங்கள் – முதலிடத்தில் டெல்லி! போர்ப்ஸ் பத்திரிக்கை ரிப்போர்ட்!

0
அதிக சிசிடிவி கேமரா உள்ள நகரங்கள் - முதலிடத்தில் டெல்லி! போர்ப்ஸ் பத்திரிக்கை ரிப்போர்ட்!
அதிக சிசிடிவி கேமரா உள்ள நகரங்கள் - முதலிடத்தில் டெல்லி! போர்ப்ஸ் பத்திரிக்கை ரிப்போர்ட்!
அதிக சிசிடிவி கேமரா உள்ள நகரங்கள் – முதலிடத்தில் டெல்லி! போர்ப்ஸ் பத்திரிக்கை ரிப்போர்ட்!

உலகிலேயே அதிக சிசிடிவி கேமரா கொண்ட நகரங்கள் பட்டியலை போர்ப்ஸ் ஊடகம் சமீபத்தில் வெளியிட்டுள்ளது. இதில் முதலிடத்தில் இந்திய நகரமான டெல்லி இடம்பெற்றுள்ளது அனைவரையும் வியப்பில் ஆழ்த்தி உள்ளது.

அதிக சிசிடிவி கேமரா:

உலகத்திலேயே 1 சதுர மைல் தூரத்தில், அதிக சிசிடிவி கேமராக்கள் உள்ள நகரத்தின் பட்டியலை ‘போர்ப்ஸ் இந்தியா’ ஊடகம் சில நாட்களுக்கு முன் சேகரித்து வந்தது. நாட்டில் ஏற்படும் குற்ற செயல்களை தடுக்கவும், குற்றம் நடந்த பின்னணி குறித்து ஆராய்ந்து முடிவெடுக்கவும், குற்ற செயலில் ஈடுபடுவோரை கண்காணிக்கவும் கேமராக்கள் பொறுத்தப்படுவது வழக்கமாகி உள்ளது. இந்த நிலையில், அதிகமான கண்காணிப்பு கேமராக்கள் மூலம் பொது இடங்களை கண்காணிப்பதில் முக்கிய கவனம் செலுத்தும் 20 நகரங்களின் பட்டியலை ‘போர்ப்ஸ் இந்தியா’ ஊடகம் தற்போது வெளியிட்டுள்ளது.

Jio, VI & Airtel நிறுவனங்களின் 3GB டேட்டா வழங்கும் ரீசார்ஜ் பிளான்கள் – முழு விபரம் இதோ!

குறிப்பிட்ட ஒரு சதுர மைல் பரப்பில் அமைக்கப்பட்டுள்ள அதிகபட்ச கேமராக்களை அடிப்படையாக கொண்டு உலக அளவில் மிகுந்த கேமராக்கள் உள்ள கண்காணிப்பு நகர பட்டியல் தயாரிக்கப்பட்டு உள்ளதாக இந்த ஊடகம் தெரிவித்தது. இந்த பட்டியலில் உலக அளவில் ஒரு சதுர மைல் பரப்பில் 1,827 கேமராக்களுடன் டெல்லி முதலிடத்தை பெற்றுள்ளது. இதனை அடுத்து 1,138 கேமராக்களுடன் லண்டன் 2வது இடத்தையும், 610 கேமராக்களுடன் சென்னை 3வது இடத்தையும் பிடித்துள்ளது.

TN Job “FB  Group” Join Now

மேலும், 194 கேமராக்களுடன் நியூயார்க் 14வது இடத்திலும், 157 கேமராக்களுடன் மும்பை 18வது இடத்திலும் உள்ளது குறிப்பிடத்தகுந்தது. மேலும் பல முன்னணி நகரங்களை பின்னுக்கு தள்ளி முதலிடத்தை பெற்றிருப்பது மிகுந்த பெருமை என்று தெரிவித்த டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால், இதற்காக உழைத்த பொறியாளர்கள் மற்றும் அலுவலர்களின் கடின முயற்சியை பாராட்டுவதாகவும் தெரிவித்தார். இந்த செயல்கள் அனைத்தும் குறுகிய காலத்தில் நடந்திருப்பது கூடுதல் சிறப்பு எனவும் தெரிவித்தார்.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!