CIC நிறுவனத்தில் 20+ காலிப்பணியிடங்கள் – ரூ.63,200/- வரை ஊதியம்..!

0
CIC நிறுவனத்தில் 20+ காலிப்பணியிடங்கள் - ரூ.63,200/- வரை ஊதியம்..!
CIC நிறுவனத்தில் 20+ காலிப்பணியிடங்கள் - ரூ.63,200/- வரை ஊதியம்..!
CIC நிறுவனத்தில் 20+ காலிப்பணியிடங்கள் – ரூ.63,200/- வரை ஊதியம்..!

24.03.2022 அன்று மத்திய தகவல் ஆணையம் (CIC) வெளியிட்ட அறிவிப்பில் காலியாக உள்ள Assistant Section Officer, Personal Assistant, Hindi Translator, Staff Car Driver ஆகிய பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பில் இப்பணிகளுக்கு என மொத்தமாக 23 இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது. இப்பணிக்கு விண்ணப்பிக்க விருப்பம் உள்ளவர்கள் விரைவில் விண்ணப்பித்து பயன் பெறவும். கல்வி, ஊதியம், தேர்வு முறை ஆகிய அனைத்து தகவல்களும் எளிதில் புரியுமாறு கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

வேலைவாய்ப்பு செய்திகள் 2022
நிறுவனம் Central Information Commission (CIC)
பணியின் பெயர் Assistant Section Officer, Personal Assistant, Hindi Translator & Staff Car Driver
பணியிடங்கள் 23
விண்ணப்பிக்க கடைசி தேதி 08.05.2022
விண்ணப்பிக்கும் முறை Offline
மத்திய தகவல் ஆணையம் பணியிடங்கள்:

மத்திய தகவல் ஆணையத்தில் (CIC) பின்வரும் பணியிடங்கள் காலியாக உள்ளது.

  • Assistant Section Officer – 11
  • Personal Assistant – 07
  • Hindi Translator – 01
  • Staff Car Driver – 04
CIC கல்வி தகுதி:

Assistant Section Officer, Personal Assistant, Hindi Translator பணிக்கு அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற கல்வி நிலையங்கள் / கல்லூரி / பல்கலைக்கழகங்களில் ஏதேனும் ஒரு Diploma, Master Degree-யை பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம்.

Staff Car Driver பணிக்கு அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற கல்வி நிலையங்கள் / பள்ளிகளில் 10ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம்.

மத்திய தகவல் ஆணையம் அனுபவம்:

இப்பணிகளுக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் தேர்வு செய்யப்படும் பணிக்கு தகுந்தாற்போல் அரசு நிறுவனங்களில் வழக்கமான அடிப்படையில் ஒத்த பணிகளில் அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ள ஊதிய அளவுகளின் கீழ் மாத ஊதியம் பெற்றவராக இருக்க வேண்டும்.

CIC வயது வரம்பு:

இப்பணிகளுக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்களின் வயது வரம்பு அதிகபட்சம் 56 வயது என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

மத்திய தகவல் ஆணையம் சம்பளம்:

Assistant Section Officer, Personal Assistant பணிக்கு தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்கள் Level 07 ஊதிய அளவின் படி மாத சம்பளம் பெறுவார்கள்.

Exams Daily Mobile App Download

Hindi Translator பணிக்கு தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்கள் ரூ.9,300/- முதல் ரூ.34,800/- வரை மாத சம்பளமாகவும், ரூ.4,200/- Grace Pay ஆகவும் பெறுவார்கள்.

Staff Car Driver பணிக்கு தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்கள் ரூ.19,900/- முதல் ரூ.63,200/- வரை மாத சம்பளமாக பெறுவார்கள்.

CIC தேர்வு செய்யும் முறை:

இப்பணிகளுக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் எழுத்து தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

CIC விண்ணப்பிக்கும் வழிமுறை:

இப்பணிகளுக்கு விண்ணப்பிக்க தகுதி உள்ளவர்கள் அதிகாரப்பூர்வ அறிவிப்பின் கீழ் உள்ள விண்ணப்ப படிவத்தை பதிவிறக்கம் செய்து பின் அதை பூர்த்தி செய்து தேவையான ஆவணங்களை இணைத்து அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ள முகவரிக்கு தபால் செய்ய வேண்டும். 08.05.2022 என்ற கடைசி நாளுக்குள் விண்ணப்பங்கள் அலுவலகம் வந்து சேருமாறு தபால் செய்ய வேண்டும்.

CIC Notification & Application Link

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!