தமிழகத்திலும் காலரா நோய் பரவல்? தீவிரமாகும் கட்டுப்பாடுகள்! அமைச்சர் விளக்கம்!

0
தமிழகத்திலும் காலரா நோய் பரவல்? தீவிரமாகும் கட்டுப்பாடுகள்! அமைச்சர் விளக்கம்!
தமிழகத்திலும் காலரா நோய் பரவல்? தீவிரமாகும் கட்டுப்பாடுகள்! அமைச்சர் விளக்கம்!
தமிழகத்திலும் காலரா நோய் பரவல்? தீவிரமாகும் கட்டுப்பாடுகள்! அமைச்சர் விளக்கம்!

காரைக்கால் பகுதி முழுக்க காலரா கட்டுப்பாட்டு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில், நோய் கட்டுப்பாடுகள் குறித்து மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் தற்போது விளக்கமளித்துள்ளார்.

காலரா நோய் பரவல்

காரைக்காலில் சில வாரங்களாக பொதுமக்கள் தொடர்ந்து காலரா நோயினால் பாதிக்கப்பட்டு வருகின்றனர். மேலும், இந்த பொது மக்கள் வீட்டிற்கு அருகிலுள்ள அசுத்தமான நீரை பயன்படுத்துவதால் வாந்தி, வயிற்றுப்போக்கு என பெரும்பாலான மக்கள் அவதிப்பட்டு வருகின்றன. இதனிடையே, காலரா நோய் வேகமாக பரவும் தன்மை கொண்டதனால் தீவிர கட்டுப்பாட்டு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மேலும், காரைக்கால் பகுதியை ஒட்டியுள்ள பகுதிகளில் காலரா நோய் கட்டுப்பாடுகளை தீவிரப்படுத்தப்பட்டுள்ளதாக மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்ரமணியன் தெரிவித்துள்ளார்.

தமிழக பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிப்பு – கனமழை எதிரொலி! மாவட்ட ஆட்சியர் உத்தரவு!

அதாவது, காரைக்கால் பகுதியை ஒட்டியுள்ள அனைத்து கிராமங்களுக்கும் சுகாதாரத்துறை பணியாளர்கள் நேரில் சென்று மக்களை சந்தித்து ஆய்வு நடத்தியிருக்கின்றனர். அதாவது, வீட்டு பக்கத்தில் ஏதெனும் கழிவு நீர் தேங்குகிறதா எனவும், கொசுக்களின் எண்ணிக்கை பெருகாமல் இருக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இது மட்டுமல்லாமல் பொதுமக்களுக்கு காலரா நோயை பற்றிய விழிப்புணர்வும் வழங்கப்பட்டுள்ளது. காலரா வேகமாக பரவக்கூடிய நோய் என்பதால் வீட்டை தூய்மையாக வைத்திருக்கும்படியும், குளோரின் கலந்த நீரை பருகும்படியும் அறிவுறுத்தப்பட்டு வருகிறது.

Exams Daily Mobile App Download

மேலும், பொது இடங்களில் இயற்கை உபாதைகளை கழிக்க வேண்டாம் எனவும், அதன் மூலமாகவும் வேகமாக காலரா பரவ கூடும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து, வாந்தி, வயிற்றுப்போக்கால் அவதிப்படும் மக்களுக்கு மருந்துகளை வழங்க போதுமான மாத்திரைகள் மருத்துவமனைகளில் இருக்கிறதா என்பது குறித்தும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்ரமணியன் தெரிவித்துள்ளார்.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here