பேரரசுச் சோழர்கள்

0

பேரரசுச் சோழர்கள்

சங்க காலத்தின் வீழ்ச்சிக்குப் பிறகு சோழர்கள் உறையூரில் சிற்றரசர்களாக வாழந்து வந்தனர். ஒன்பதாம் நூற்றாண்டில் மீண்டும் அவர்கள் சிறப்படையத் தொடங்கினர். தென்னிந்தியாவின் பெரும்பகுதியை உள்ளடக்கிய ஒரு பேரரசையும் நிறுவினர். அவர்களது தலைநகரம் தஞ்சாவூர். இலங்கையிலும் மலேய தீபகற்பத்திலும்கூட அவர்கள் தங்களது ஆதிக்கத்தை ஏற்படுத்தினர். எனவே அவர்களை பேரரசுச் சோழர்கள் என்று அழைக்கின்றோம். சோழர் காலத்திய ஆட்சிமுறை, சமுதாயம், பொருளாதாரம் பண்பாடு குறித்த தகவல்களை கோயில்களில் காணப்படும் ஆயிரக்கணக்கான கல்வெட்டுகளிலிருந்து தெரிந்து கொள்கிறோம்.பேரரசுச் சோழ மரபைத் தோற்றுவித்தவர் விஜயாலய சோழன். கி.பி. 815 ஆம் ஆண்டு அவர் முத்தரையரையர்களிடமிருந்து தஞ்சையைக் கைப்பற்றினார். அங்கு துர்கை கோயிலையும் கட்டுவித்தார். அவரது புதல்வாரன ஆதித்ய சோழன் அபராஜித பல்லவனை முறியடித்து பல்லவர் ஆட்சிக்கு முடிவு கட்டிவிட்டு தொண்டைமண்டலத்தையும் சோழப்பேரரசோடு இணைத்துக் கொண்டார். முதலாம் பராந்தக சோழன் முற்காலச் சோழ அரசர்களில் குறிப்பிடத்தக்கவர். பாண்டியர்களையும் இலங்கை ஆட்சியாளரையும் அவர் முறியடித்தார். ஆனால்ää புகழ்மிக்க தக்கோலப் போரில் இராஷ்டிரகூடர்களிடம் அவர் தோல்வியைத் தழுவினார். முதலாம் பராந்தகள் பல கோயில்களையும் கட்டுவித்தான். சிதம்பரம் நடராஜர் ஆலயத்தின் கூரைக்கு பொற்கூரை வேய்ந்தவன் முதலாம் பராந்தகன். அவரது காலத்தைச் சேர்ந்த உத்திரமேரூர் கல்வெட்டுக்கள் இரண்டு சோழர் காலத்தில் நிலவிய கிராம ஆட்சிமுறை பற்றி விளக்கங்களைக் கூறுகிறது. முப்பதாண்டு கால இடைவெளிக்குப் பிறகு முதலாம் ராஜராஜன் காலத்தில் மீண்டும் சோழர்கள் புகழடைந்தனர்

முதலாம் ராஜராஜன் (கி.பி. 985 – 1014)

முதலாம் ராஜராஜன், அவரது புதல்வன் முதலாம் ராஜேந்திரன் ஆகிய இருவரின் ஆட்சிக் காலங்களிலும் சோழப் பேரரசு புகழின் உச்சியை எட்டியது. முதலாம் ராஜராஜனின் போர் வெற்றிகள் வருமாறு.
1. காந்தளுர் சாலை என்ற இடத்தில் சேர மன்னன் பாஸ்கரரவிவர்மனுடைய கடற்படைகளை முறியடித்தான்.
2. பாண்டிய அரசன் அமரபுஜங்கள் தோற்கடிக்கப்பட்டான். பாண்டிய நாட்டில் சோழர் ஆட்சி ஏற்படுத்தப்பட்டது.
3. மைசூர்ப் பகுதியிலிருந்த கங்கவாடி, நுளம்பாடி, தடிகைபாடி போன்ற பகுதிகள் கைப்பற்றப்பட்டன.
4. இலங்கைப் படையெடுப்பை அவரது புதல்வன் முதலாம் ராஜேந்திரன் மேற்கொண்டான். இலங்கை அரசன் ஐந்தாம் மகிந்தன் நாட்டைவிட்டு ஓடினான். வடக்கு இலங்கையை தோழர்கள் இணைத்துக் கொண்டனர். தலைநகர் அனுராதபுரத்திலிருந்து பொலநருவா என்ற இடத்திற்கு மாற்றப்பட்டு அங்கு சிவாலயம் ஒன்றும் எழுப்பப்பட்டது.

Download TNPSC அரசியலமைப்பு பாடக்குறிப்புகள்

5. எழுச்சி பெற்றுவந்த கல்யாணிச் சாளுக்கியரை முதலாம் ராஜ ராஜன் எதிர்த்துப் போரிட்டு வெற்றி பெற்றார். சாளுக்கிய அரசன் சத்யஸ்ரீயன் முறியடிக்கப்பட்டான். முதலாம் ராஜராஜன் ரெய்ச்சூர் தோஆப், பனவாசி போன்ற இடங்களைக் கைப்பற்றினார். சோழப் பேரரசு துங்கபத்திரா நதிக்கரை வரை பரவியது.
6. தெலுங்குச் சோடர்களை முறியடித்து, வெங்கி அரியணையை அதன் ஆட்சியாளர்களான சக்தி வர்மனுக்கும் விமலாதித்தனுக்கும் முதலாம் ராஜராஜன் மீட்டுக் கொடுத்தார். தனது மகள் இளவரசி குந்தவையை விமலாதித்தனுக்கு மணமுடித்துக் கொடுத்தார்.
7. மாலத்தீவுகளுக்கு எதிராக மேற்கொண்ட கடற்படையெடுப்பே முதலாம் ராஜராஜனின் இறுதிபடையெடுப்பாகும். மாலத்தீவுகள் கைப்பற்றப்பட்டன.
முதலாம் ராஜராஜனின் இத்தனைய போர்வெற்றிகளினால், சோழப்பேரரசு, தமிழ்நாட்டில் சேர, பாண்டிய, தொண்டை மண்டலப் பகுதிகளையும், தக்காணத்தில் கங்கபாடி, நுளம்பபாடி, தெலுங்குச் சோடர்களின் ஆட்சிப்பகுதி, வடக்கு இலங்கை, மாலத்தீவுகள் போன்ற பகுதிகளை உள்ளடக்கியதாக இருந்தது. மும்முடிசோழன், ஜெயங்கொண்டான், சிவபாத சேகரன் போன்ற விருதுப் பெயர்களையும் முதலாம் ராஜராஜன் சூட்டிக் கொண்டான். சிறந்த சிவபக்தனாகவும் அவர் விளங்கினார். கி.பி. 1010ல் தஞ்சையில் பிரகதீஸ்வரம் என்றழைக்கப்படும் தஞ்சைப் பெரிய கோயிலை கட்டிமுடித்தார். நாகப்பட்டினத்தில் புத்த மடாலயம் கட்டுவதற்கும் அவர் உதவிகளை வழங்கினார்.

முதலாம் ராஜேந்திரன் (கி.பி. 1012 – 1044)

  • தனது தந்தை மேற்கொண்ட படையெடுப்புகளில் கலந்துகொண்டு படைவல்லமையை ராஜேந்திரசோழன் வெளிப்படுத்தினார். ஆட்சிக்கு வந்தபிறகு தந்தையின் கொள்கைகளையே பின்பற்றி பேரரசை விரிவுபடுத்தும் பணிகளில் ஈடுப்பட்டார். அவரது சிறப்பக்குரிய போர்களாவன:
    1. சோழர்களிடமிருந்து வடக்கு இலங்கையை கைப்பற்ற இலங்கை அரசன் ஐந்தாம் மகிந்தன் முயற்சி செய்தான். ராஜேந்திரன் மீண்டும் அவனை முறியடித்து தெற்கு இலங்கையையும் கைப்பற்றிக் கொண்டார். இதனால் இலங்கை முழுவதுமே சோழப் பேரரசில் இணைக்கப்பட்டது.
    2. சேர, பாண்டிய ஆட்சிப் பகுதிகளில் மீண்டும் சோழ ஆதிக்கத்தை உறுதிப்படுத்தினார்.
    3. மேலைச் சாளுக்கிய அரசன் ஜெயசிம்மனை மீண்டும் முறியடித்தான். சோழ – சாளுக்கிய எல்லையாக துங்கபத்திரை நதி அங்கீகரிக்கப்பட்டது.
    4. முதலாம் ராஜேந்திரனின் புகழ் வாய்ந்த படையெடுப்பு அவர் வடஇந்தியாவின்மீது மேற்கொண்டதாகும். வழியில் பல ஆட்சியாளர்களை முறியடித்த சோழப் படை கங்கை நதியைக் கடந்து சென்றது. வங்காள அரசன் முதலாம் மகிபாலனை முதலாம் ராஜேந்திரன் முறியடித்தான் தமது வடஇந்தியப் படையெடுப்பின் வெற்றியைக் கொண்டாடும் விதத்தில் கங்கைகொண்ட சோழபுரம் என்ற நகரை நிர்மாணித்து அங்கு புகழ்வாய்ந்த ராஜேஸ்வர ஆலயத்தையும் அவர் எழுப்பினார். அந்நகரின் மேற்குப்புறத்தில் சோழகங்கம் என்ற நீர்ப்பாசன ஏரியையும் வெட்டுவித்தான்.
    5. ஸ்ரீவிஜயம் எனப்படும் கடராத்தின்மீது முதலாம் ராஜேந்திரன் மேற்கொண்ட படையெடுப்;பு மிகவும் சிறப்பு வாயந்ததாகும். அப்படையெடுப்பின் உண்மையான நோக்கம் பற்றி கூறுவது கடினம். நோக்கம் எதுவாக இருப்பினும், அந்த கடற்படையெடுப்பு மாபெரும் வெற்றியாக முடிந்தது. சோழப்படைகள் பல்வேறு இடங்களை ஆக்ரமித்தன. ஆனால், அவை தற்காலிகமான ஆக்;ரமிப்புகளே கைப்பற்றப்பட்ட இடங்களை பேரரசுடன் இணைத்துக் கொள்ளும் எண்ணம் அவருக்கில்லை. இந்த படையெடுப்புக்குப்;பின் முதலாம் ராஜேந்திரன் கடாரம் கொண்டான் என்ற பட்டத்தை சூட்டிக் கொண்டார்.
    6. பல்வேறு கலகங்களை ஓடுக்கி, சோழப் பேரரசு சீர்குலையாதவாறு அவர் பார்த்துக் கொண்டார்.
  • முதலாம் ராஜேந்திரன் மறைந்தபோது சோழப் பேரரசு அதன் உச்ச கட்டத்தை எட்டியிருந்தது. துங்கபத்திரை வடக்கு எல்லையாக இருந்தது.
  • பாண்டிய, கேரள, மைசூர்ப்; பகுதிகள், இலங்கை ஆகியவற்றை உள்ளடக்கியதாக சோழப் பேரரசு இருந்தது.
  • தனது புதல்வி அம்மங்காதேவியை வெங்கிச் சாளுக்கிய இளவரசனுக்கு மணமுடித்துக் கொடுத்த முதலாம் ராஜேந்திரன்; தனது தந்தை ஏற்படுத்திச் சென்ற மணஉறவுகளை தொடர்ந்து கடைப்பிடித்தார்.
  • முடிகொண்டான், கங்கை கொண்டான், கடாரம்கொண்டான், பண்டிதசோழன் என பல்வேறு விருதுப் பெயர்களையும் முதலாம் ராஜேந்திரன் சூட்டிக் கொண்டார். தந்தையைப் போலவே சிறந்த சிவபக்தனாகவும் அவர் திகழ்ந்தார்.
  • புதிய தலைநகரான கங்கைகொண்ட சோழபுரத்தில் சிவாலயம் ஒன்றையும் எழுப்பினார். அந்த ஆலயத்துக்கு தாராளமாக மானியங்களை அளித்தார்.
  • சிதம்பரம் நடராஜர் ஆலயத்திற்கும் கொடைகளை வழங்கினார். வைணவ, புத்த சமயப் பிரிவுகளிடமும் அவர் சகிப்புத் தன்மையுடன் நடந்து கொண்டார்.
  • முதலாம் ராஜேந்திரனுக்குப் பிறகு, முதலாம் குலோத்தங்கன், மூன்றாம் குலோத்தங்கன் போன்ற ஆட்சியாளர்கள் காலத்திலும் சோழப் பேரரசு புகழ் பெற்று விளங்கியது.
  • முதலாம் ராஜேந்திரனின் மகள் அம்மங்காதேலியின் வாரிசாக உதித்தவனே முதலாம் குலோத்துங்கன். அவர் சோழப் பேரரசனாக பதவியேற்றதால் வெங்கி நாடும் சோழப் பேரரசுடன் இணைந்தது. ஆனால், அவரது ஆட்சிக் காலத்தில் இலங்கை விடுதலை பெற்றது.
  • பின்னர், வெங்கியும் மைசூரும் மேலைச் சாளுக்கியரால் கைப்பற்றப்பட்டன. முதலாம் குலோத்துங்கன் 72 வணிகர்கள் அடங்கிய தூதுக் குழுவை சீனாவிங்கு அனுப்பி வைத்தார்.
  • ஸ்ரீவிஜய அரசுடன் நல்லுறலை அவர் மேற்கொண்டிருந்தார். மூன்றாம் குலோத்துங்கன் ஆட்சிக் காலத்தில் சோழப் பேரரசு நலிவடையத் தொடங்கியது.
  • கடவராயர்கள் போன்ற குறுநிலத் தலைவர்கள் எழுச்சி பெற்றனர். சோழரின் மேலாண்மைக்கு பாண்டியரின் எழுச்சி பெரிய சவலாயிற்று.
  • இறுதியில் சோழப் பேரரசு வீழ்ச்சியடைந்தது. கடைசி சோழ அரசன் மூன்றாம் ராஜேந்திரனை இரண்டாம் ஜடாவர்மன் சுந்தரபாண்டியன் முறியடித்தான்.
  • சோழ நாடு பாண்டியப் பேரரசுடன் இணைத்துக் கொள்ளப்பட்டது.

சோழர் ஆட்சி முறை

மத்திய அரசாங்கம்

  • சோழர்கள் சிறந்த ஆட்சிமுறையைப் பெற்றிருந்தனர்.
  • ஆட்சிக்கு பேரரசர் தலைமை வகித்தார். சோழப் பேரரசின் பரப்பும், செல்வமும் அவரது அதிகாரத்தையும், மதிப்பையும் உயர்த்தின.
  • தஞ்சை, கங்கை கொண்டசோழபுரம் போன்ற பெரிய தலைநகரங்களும், பிரமாண்டமான அரசவைகளும், ஆலயங்களுக்கு அள்ளி வழங்கிய நிலக் கொடைகளும் சோழ அரசனின் அதிகாரத்தை வெளிப்படுத்துவதாக உள்ளன.
  • ஆட்சியின் வல்லமையை உணர்த்துவதற்காக சோழ அரசர்கள் அவ்வப்போது அரசப் பயணங்களை மேற்கொண்டனர்.
  • பெருந்தனம், சிறுதனம் என்று அழைக்கப்பட்ட அதிகார வர்க்கம் ஆட்சிக்குப் பொறுப்பு வகித்தன.

வருவாய் நிர்வாகம்

  • சோழர்கால நில வருவாய்த்துறை நன்கு சீரமைக்கப்பட்டிருந்தது. அது புரவுவரித்திணைக்களம் என்று அழைக்கப்பட்டது.
  • அனைத்து நிலங்களும் முறையாக அளக்கப்பட்டு, வகைப்படுத்தப்பட்டு, வரி மதிப்பீடுகள் செய்யப்பட்டன.
  • கிராம குடியிருப்பு பகுதிகள் ஊர் நத்தம் எனப்பட்டது. இப்பகுதியும், ஆலயங்களுக்கு தானமாக வழங்கப்பட்ட நிலப்பதியும் வரிவிலக்கு பெற்றிருந்தன.
  • நில வரியைத்தவிர, ஓரிடத்திலிருந்து மற்றொரு இடத்திற்கு பொருட்களை கொண்டு செல்வதற்கான சுங்கமும் வசூலிக்கப்பட்டது.
  • பல்வேறு தொழில்களுக்கும் வரிவிதிக்கப்ட்டன. திருமணம், சடங்குகள்; போன்ற நிகழ்வுகளின் போதும் வரி வசூலிக்கப்பட்டது.
  • நீதிமன்றங்களில் விதிக்கப்பட்ட அபராதங்களும் மற்றொரு வருவாயாகும். இடர்மிக்க காலங்களில் வரிவிலக்கும் அளிக்கப்பட்டது.
  • முதலாம் குலோத்துங்கள் வரிவிலக்கு அளித்தான் என்பதற்காக சுங்கம் தவிர்த்த சோழன் என்ற விருதுப் பெயரைச் சூட்டிக்கொண்டான்.
  • அரசன், அரசவை, ராணுவம், கப்பற்படை, சாலை பராமரிப்பு, நீர்ப்பாசன ஏரிகள், கால்வாய்கள் அமைத்தல் போன்றவை அரசின் செலவினங்களாக இருந்தன.
TNPSC சைவம் & வைணவம் பாடக்குறிப்புகள் Download

ராணுவ நிர்வாகம்

  • யானைப்படை, குதிரைப்படை, காலாட்படை, கப்பற்படை என்ற பிரிவுகளைக் கொண்ட நிலையான படையை சோழர்கள் பெற்றிருந்தனர்.
  • கல்வெட்டுகளில் சுமார் எண்பது படைப்பிரிவுகள் குறிப்பிடப்பட்டுள்ளன. அரசரின் தனிப்படை கைக்கோளப் பெரும்படை என்று அழைக்கப்பட்டது.
  • அதற்குள்ளேயே அரசரைப் பாதுகாக்கும் சிறப்புக்காவல் வீரர்கள் வேளைகாரர் எனப்பட்டனர். ராணுவத்திற்கு முறையான பயிற்சி அளக்கப்பட்டது.
  • ராணுவ முகாம்கள் கடகங்கள் என்று அழைக்கப்பட்டன. சோழர்கள் கடற்படை ஆற்றல் சோழர்கள் காலத்தில் புகழ்மிக்கு விளங்கியது.
  • மலபார், சோழ மண்டலக் கடற்கரை ஆகியன அவர்களது கட்டுப்பாட்டில் இருந்தன. வங்காள விரிகுடா ‘சோழ ஏரி’ யாகவே சிலகாலம் இருந்தது

மாகாண ஆட்சி

  • சோழப் பேரரசு மண்டலங்களாகவும், மண்டலம் பல வளநாடுகளாகவும், வளநாடு, பல நாடுகளாகவும் பிரிக்கப்பட்டிருந்தன. நாடு என்ற பகுதியில் பல தன்னாட்சி பெற்ற கிராமங்கள் இருந்தன.
  • மண்டலங்களின் நிர்வாகத்தை அரச குலத்தைச் சேர்ந்த ஆளுநர்கள் கவனித்து வந்தனர்.
  • வளநாட்டை பெரிய நாட்டாரும். நாடு பகுதியை நாட்டாரும் நிர்வகித்தனர்.
  • நகர நிர்வாகத்தை நகரத்தார் என்ற அவை மேற்கொண்டது.

கிராம சபைகள்

  • சபைகளும், சபைக்குழுக்களும் கொண்ட கிராம தன்னாட்சிமுறை காலங்காலமாக தமிழ்நாட்டில் பரிணாம வளர்ச்சி பெற்று வந்தது.
  • சோழர் ஆட்சிக் காலத்தில் அது ஏற்றம் பெற்று விளங்கியது. முதலாம் பராந்தகசோழன் ஆட்சிக் காலத்தைச் சேர்ந்த உத்திரமேரூரில் கண்டெடுக்கப்பட்ட இரண்டு கல்வெட்டுகள் கிராம சபைகளின் நடவடிக்கைகள் பற்றி விவரிக்கின்றன.
  • அந்த கிராமம் முப்பது குடும்பு அல்லது வர்ர்டுகளாகப் பிரிக்கப்பட்டிருந்தது. ஒவ்வொரு வார்டிலிருந்தும் கிராம சபைக்கான பிரதிநிதி தெரிவு செய்யப்பட்டார். கிராம சபை உறுப்பினராவதற்கான தகுதிகளும் நிர்ணயிக்கப்பட்டிருந்தன.அவை யாவன:
    அ. குறைந்தபட்சம் கால்வேலி நிலமாவது சொந்தமாக வைத்திருக்க வேண்டும்.
    ஆ. சொந்த இல்லத்தில் குடியிருக்க வேண்டும்
    இ. முப்பது வயதுக்கு மேலும் எழுபது வயதுக்குள்ளும் இருக்க வேண்டும்.
    ஈ. வேதங்கள் குறித்த அறிவைப் பெற்றிருக்க வேண்டும் இருப்பினும், யார் யார் தகுதியற்றவர்கள் என்பது அக்கல்வெட்டுகளில் தெளிவாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. அவை –
    அ. கடந்த மூன்று ஆண்டுகள் தொடர்ந்து கிராம சபையில் உறுப்பினராக பணியாற்றியவர்கள்.
    ஆ. கிராம சபைக்குழுவில் உறுப்பினராகப் பணியாற்றி சரிவர கணக்குகளை அளிக்காதவர்கள்.
    இ. பஞ்சமா பாதகங்களைச் செய்தவர்கள்
    ஈ. பிறர் பொருட்களை களவாடியவர்கள்
  • இவ்வாறு தெரிவு செய்யப்பட்டவர்களின் பெயர்களை பனை ஓலைகளில் எழுதி ஒரு குடத்திற்குள் இட்டு சிறுவன் அல்லது சிறுமி ஒருவரை விட்டு எடுக்கச் செய்வர்.
  • இதற்கு குடவோலை முறை என்று பெயர். இவ்வாறு முப்பது வார்டுகளின் உறுப்பினர்களும் தெரிவு செய்யப்படுவர். பின்னர், முப்பது பேர் கொண்ட கிராமசபை ஆறு வாரியக் குழுக்களாகப் பிரிந்து செயல்படும். சம்வத்சர வாரியம், ஏரிவாரியம், தோட்ட வாரியம், பஞ்சவார வாரியம், பொன் வாரியம், புரவுவரி வாரியம் என்பதே அந்த ஆறு வாரியங்கள்.
  • ஆறுவித பொறுப்புகளை அவை நிறைவேற்றும். இதன் உறுப்பினர்கள் வாரியப் பெருமக்கள் எனப்பட்டனர்.
  • கோயில் அல்லது மரநிழலில் கூடி தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. வாரிய உறுப்பினர்களின் எண்ணிக்கையும் குழுக்களின் எண்ணிக்கையும் கிராமத்திற்கு கிராமம் வேறுப்பட்டிருந்தது.

சமூக,பொருளாதார வாழ்க்கை

  • சோழர் காலத்தில் ஜாதிமுறை பரவலாகப் பின்பற்றப்பட்டது. பிராமணர்களும், ஷத்திரியரும் பல்வேறு சலுகைகளைப் பெற்றிருந்தனர்.
  • சோழர் காலத்தின் பிற்பகுதியைச் சேர்ந்த கல்வெட்டுக்களில் வலங்கை, இடங்கை சாதிப் பிரிவுகள் பற்றி குறிப்புகள் காணப்;படுகின்றன. இருப்பினும் பல்வேறு ஜாதியினருக்கிடையே ஒற்றுமை காணப்பட்டது.
  • பல்வேறு கிளை ஜாதிகளும் இருந்தன. மகளிர் நிலையில் முன்னேற்றம் ஏதுமில்லை. அரச குடும்பத்தாரிடையே ‘சதி’ என்ற உடன்கட்டை ஏறும் வழக்கம் இருந்தது.
  • கோயில்களுடன் பிணைக்கப்பட்டிருந்த நாட்டிய மகளிர் அடங்கிய தேவதாசி முறை சோழர் காலத்தில்தான் தோன்றி வளர்ந்தது
  • சோழர் காலத்தில் வைணவமும், சைவமும் தழைத்தன. சோழ அரசர்கள், அரசர்களின் ஆதரவினால் ஏராளமான கோயில்கள் எழுப்பப்பட்டன.
  • சோழர் காலத்தில் கோயில்கள் பொருளாதார நடவடிக்கைகளின் மையங்களாகத் திகழ்ந்தன.
  • மடங்களும் செல்வாக்கு பெற்றிருந்தன. வேளாண்மையும் தொழிலும் சிறந்து விளங்கின.
  • காடுகள் திருத்தப்பட்டு விளைநிலங்களாக மாற்றப்பட்டதாலும், நீர்ப்பாசன ஏரிகள் வெட்டப்பட்டு முறையாக பராமரிக்கப்பட்டதாலும் வேளாண் தொழில் வளர்ச்சி பெற்றது. நெசவுத் தொழில், குறிப்பாக காஞ்சியில் பட்டு நெசவு புகழ்பெற்று விளங்கியது.
  • கோயில்களிலும், வீட்டு உபயோகத்திற்கும் பெரும் தேவை இருந்ததால் உலோகத் தொழில் நன்கு வளர்ச்சியடைந்தது. வாணிபம் சுறுசுறுப்புடன் நடைபெற்றது. வாணிகக் குழுக்கள் செயல்பட்டன.

PDF Download

பண்டையக் கால இந்திய வரலாறு பாடக்குறிப்புகள்

WhatsApp Group -ல் சேர –  கிளிக் செய்யவும்
Telegram Channel கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!