சித்திரை தமிழ் புத்தாண்டு விருதுகள் 2021 விண்ணப்பம் – பிப்ரவரி 26 கடைசி தேதி!!

0
சித்திரை தமிழ் புத்தாண்டு விருதுகள் 2021 விண்ணப்பம் - பிப்ரவரி 26 கடைசி தேதி!!
சித்திரை தமிழ் புத்தாண்டு விருதுகள் 2021 விண்ணப்பம் - பிப்ரவரி 26 கடைசி தேதி!!
சித்திரை தமிழ் புத்தாண்டு விருதுகள் 2021 விண்ணப்பம் – பிப்ரவரி 26 கடைசி தேதி!!

ஒவ்வொரு ஆண்டும் தமிழ் வளர்ச்சித் துறை சார்பில் வழங்கப்படும் சித்திரை தமிழ் புத்தாண்டு விருதுகளுக்கு விண்ணப்பிக்க பிப்ரவரி 26 ஆம் தேதி கடைசி நாள் என அறிவிக்கப்பட்டுள்ளது.

சித்திரை தமிழ் புத்தாண்டு விருதுகள்:

தமிழ் வளர்ச்சித் துறை சார்பில், தமிழ் அறிஞர்களை ஊக்குவிக்க ஓவ்வொரு ஆண்டும் 71 விருதுகள் வழங்கப்படுகின்றன. சித்திரை முதல் நாள் தமிழ் புத்தாண்டை சிறப்பிக்கும் வகையில் தமிழுக்கும், தமிழ் இலக்கியத்திற்கும் வளம் சேர்க்கும் தமிழ் அறிஞர்களுக்கும் மற்றும் தமிழ் அமைப்புகளை ஏற்படுத்தி தமிழகத்திலும், பிற மாநிலங்களிலும், வெளிநாடுகளிலும் தமிழர் பண்பாடு, தமிழர் நாகரிகம் ஆகியவற்றை போற்றிப் பாதுகாக்கும் வகையில் செயலாற்றி வரும் சிறந்த தமிழ் அமைப்புகளுக்கும் விருதுகள் வழங்கப்படும்.

TN Job “FB  Group” Join Now

இந்த ஆண்டுக்கான விருதுகள் பெற விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இந்த விருதுகள் பெற விருப்பமுள்ளவர்கள் தமிழ் வளர்ச்சித்துறையின், www.tamilvalarchithurai.com என்ற இணையதளத்தில் விண்ணப்ப படிவம், விதிமுறைகளை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

தமிழக அரசு ஊழியர்களுக்கான பதவி உயர்வு பட்டியல் தயாரிப்பு – ஐகோர்ட் புதிய உத்தரவு!!

இந்த விருதுக்கு விண்ணப்பிக்க விண்ணப்பதாரர்கள் தங்களது சுயகுறிப்பு விவரங்கள், இரண்டு புகைப்படம், அவர்கள் எழுதிய நூல்களில் பெயர், அந்த நுால்களில் ஒரு படி வீதம் போன்றவற்றை இணையதளத்தில் பிப்ரவரி 26 ஆம் தேதிக்குள் பதிவேற்றம் செய்ய வேண்டும். மேலும் விவரங்களுக்கு 044 – 2819 0412, 2819 0413 என்ற தொலைபேசி எண்ணை தொடர்பு கொள்ளலாம்.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!