முடிவுக்கு வந்த சன் டிவியின் “சித்தி 2” சீரியல் – இறுதி நாள் புகைப்படங்கள் வெளியீடு! ரசிகர்கள் ஷாக்!

0
முடிவுக்கு வந்த சன் டிவியின்
முடிவுக்கு வந்த சன் டிவியின் "சித்தி 2" சீரியல் - இறுதி நாள் புகைப்படங்கள் வெளியீடு! ரசிகர்கள் ஷாக்!
முடிவுக்கு வந்த சன் டிவியின் “சித்தி 2” சீரியல் – இறுதி நாள் புகைப்படங்கள் வெளியீடு! ரசிகர்கள் ஷாக்!

சன் டிவியில் மெகா ஹிட் அடித்த பல சீரியல்கள் இருக்கின்றன. அந்த சீரியலின் இரண்டாம் பாகம் வேண்டும் என ரசிகர்களின் வேண்டுகோளுக்கு இணங்க சீசன் 2 தொடங்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் 2020 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட சீரியல் தான் சித்தி 2. இந்த சீரியலின் கடைசி நாள் படப்பிடிப்பில் பிரபலங்கள் கொண்டாட்டத்தில் ஈடுபடும் புகைப்படங்கள் தற்போது வைரலாகி வருகிறது

சித்தி 2 புகைப்படங்கள்:

சின்னத்திரை சீரியல்களை பட்டி தொட்டி எங்கும் பலர் விரும்பி பார்க்கின்றனர். அதில் சன் டிவி சீரியல்களுக்கு அந்த காலம் முதல் ஏகப்பட்ட ரசிகர்கள் இருக்கின்றனர். சித்தி, கோலங்கள், திருமதி செல்வம் என ஹிட் அடித்த பல தொடர்களை ரசிகர்கள் தற்போது வரை மறக்காமல் இருக்கின்றனர். இந்நிலையில் கால மாற்றத்திற்கு ஏற்றார் போல பல புதிய சீரியல்களை தொடங்கி இருக்கின்றனர். ஆனால் கொரோனா ஊரடங்கின் போது புது சீரியல் படப்பிடிப்புகள் எடுக்க முடியாமல் போனது. அதனால் மெகா ஹிட்டான பழைய சீரியல்களை சேனல் தரப்பு ஒளிபரப்பி வந்தது.

விஜய் டிவி ‘ராஜா ராணி 2’ சீரியல் பார்வதி வைஷு வாங்கிய புத்தம் புதிய கார் – ரசிகர்கள் வாழ்த்து!

அதை பார்த்த ரசிகர்கள் ஒரு சில சீரியல்களில் இரண்டாம் சீசன் தொடங்கப்பட வேண்டும் என தெரிவித்தனர். அந்த வகையில் நடிகை ராதிகா நடிப்பில் ஹிட் அடித்த சித்தி சீரியலின் இரண்டாம் பாகம் தொடங்கப்பட்டது. அதில் பல புது கன்டென்ட் உடன் கதை கொண்டு செல்லப்பட்டது. கடந்த 2020 ஆம் ஆண்டு ஜனவரி 27 ஆம் தேதி முதல் தொடங்கப்பட்ட இந்த சீரியலின் தொடக்கத்தில் நடிகை ராதிகா முன்னணி கதாபாத்திரத்தில் நடித்து வந்தார். ஆனால் திடீரென அவர் அந்த சீரியலை விட்டு விலகினார்.

Exams Daily Mobile App Download

அதன் பின் சில புதுமுக நடிகைகளை லீட் ரோலில் வைத்து கதை கொண்டு செல்லப்பட்டது. தற்போது அந்த சீரியல் முடிவுக்கு வர இருப்பதாக தகவல் வெளியானது. மேலும் சீரியலின் இறுதி நாள் படப்பிடிப்பு காட்சிகள் எடுக்கப்பட்ட நிலையில், அதில் பிரபலங்கள் கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர். அது குறித்த புகைப்படங்கள் வெளியாகி இருக்கிறது. இருந்தாலும் பிரபலமான சீரியல் முடிவுக்கு வருவதால் ரசிகர்கள் வருத்தத்தில் இருக்கின்றனர்.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!