டெல்டா கொரோனா வைரஸ் பரவல் எதிரொலி – பள்ளிகள் வரிசையாக மூடல்!

0
டெல்டா கொரோனா வைரஸ் பரவல் எதிரொலி - பள்ளிகள் வரிசையாக மூடல்!
டெல்டா கொரோனா வைரஸ் பரவல் எதிரொலி - பள்ளிகள் வரிசையாக மூடல்!
டெல்டா கொரோனா வைரஸ் பரவல் எதிரொலி – பள்ளிகள் வரிசையாக மூடல்!

சீனாவின் பல்வேறு நகரங்களிலும் கொரோனா தொற்று பள்ளி குழந்தைகளுக்கு பாதித்துள்ளதால், அங்கு பள்ளிகள் தொடர்ந்து மூடப்பட்டு வருகிறது.

கொரோனா பாதிப்பு:

உலகில் கொரோனா பாதிப்பு முதன்முதலில் சீனாவில் உள்ள ஒரு நபருக்கு தான் கண்டறியப்பட்டது. ஒரு சில மாதங்களில் உலகின் அனைத்து பகுதியிலும் தொற்று பாதிப்பு பரவ ஆரம்பித்து விட்டது. தொற்று பாதிப்பை கட்டுப்படுத்த பல நாடுகளும் தொடர்ந்து கடும் சிரமங்களை சந்தித்தது. தீவிர ஆய்வின் விளைவால் கொரோனா தொற்றுக்கு எதிரான தடுப்பூசி கண்டறியப்பட்டது. மேலும், சீனாவில் தான் கொரோனாவின் முதல் அலை முதலில் கட்டுப்படுத்தப்பட்டது.

SBI வாடிக்கையாளர்கள் செப்.30 வரை கட்டணமின்றி புதுப்பிக்கலாம் – சூப்பர் ஆபர்!

இதற்காக சீன அரசு கடும் கட்டுப்பாடுகளையும், தனிமைப்படுத்தல் விதிகளையும் கடைப்பிடித்தது. இந்நிலையில், கடந்த சில மாதங்களுக்கு முன்னதாக 2ம் அலை பரவல் பாதிப்பு தொடங்கியது. இதனால் சீனா ஆங்காங்கே ஏற்படும் தொற்றுகளுக்கு ஏற்ப நுண் கட்டுப்பாட்டு மையங்களை அமைத்து நோய்ப் பரவலைக் கட்டுப்படுத்தி வந்தது. இதற்காக தென் சீனப் பகுதியில் பல்வேறு நகரங்களிலும் ஒரே நாளில் லட்சக்கணக்கானோருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

TN Job “FB  Group” Join Now

சமீபத்தில், சிங்கப்பூரில் இருந்து புஜியான் மாகாணத்தில் புட்டியான் நகருக்கு வந்த நபருக்கு டெல்டா வைரஸ் பாதிப்பு இருந்த நிலையில், அவர் மூலம் 100க்கும் அதிகமானோருக்கு தொற்று உறுதியாகியுள்ளது. 14 நாட்கள் தனிமையில் இருந்த அந்த நபருக்கு பரிசோதனையில் தொற்று பாதிப்பு இல்லை என்று வந்துள்ளது. அதன்பிறகு அவர்க்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும், இவரது பள்ளி செல்லும் மகன் மூலமாக பள்ளியில் 36 குழந்தைகளுக்கு தொற்று பாதித்துள்ளது. இதுவரை பாதிப்பு உறுதி செய்யப்பட்ட எண்ணிக்கையில் இதுவே அதிகமாகவும். மேலும், செப்டம்பர் 14ம் தேதியான இன்று புஜியானில் புதிதாக 59 பேருக்கு தொற்று உறுதியாகியுள்ளது.

தமிழகத்தில் 6 முதல் 8ம் வகுப்புகளுக்கு பள்ளிகள் திறப்பு – நாளை அறிக்கை தாக்கல்!

இதனால் இந்த நகர் முழுவதும் உள்ள பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. டெல்டா வைரஸ் வேகமெடுக்கும் சூழலில் குழந்தைகள் தான் அதிகம் பாதிக்கப்படக் கூடும் என்று சீன அரசு கருதுகிறது. இதனால் அருகில் உள்ள சியாமென் நகரில் பேருந்து போக்குவரத்து தடை செய்யப்பட்டுள்ளது. சீன மக்கள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். மீண்டும் கொரோனா பரவுவதால் மக்கள் மன ரீதியாகவும், பொருளாதார ரீதியாகவும் எதிர்கொள்ளத் தயாராக இருக்க வேண்டும் என்று சிங்கப்பூரில் உள்ள சீன தூதரகம் அறிவுறுத்தியுள்ளது.

Velaivaippu Seithigal 2021

For => Online Test Seriesகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்
To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here