கொரோனா மூன்றாம் அலையில் குழந்தைகள் பாதிப்பு? நிபுணர்கள் விளக்கம்!!

0
கொரோனா மூன்றாம் அலையில் குழந்தைகள் பாதிப்பு? நிபுணர்கள் விளக்கம்!!
கொரோனா மூன்றாம் அலையில் குழந்தைகள் பாதிப்பு? நிபுணர்கள் விளக்கம்!!
கொரோனா மூன்றாம் அலையில் குழந்தைகள் பாதிப்பு? நிபுணர்கள் விளக்கம்!!

இந்தியாவில் கொரோனா நோய்த்தொற்று மூன்றாம் அலையில் குழந்தைகள் பாதிக்கப்படுவார்கள் என்று மத்திய அரசு அறிவித்த நிலையில் தற்போது இது குறித்து நிபுணர்கள் முக்கிய விளக்கம் ஒன்றை அளித்துள்ளனர்.

கொரோனா மூன்றாம் அலை

கடந்த 2020ம் ஆண்டில் நாட்டில் பரவிய கொரோனா வைரஸ் தொற்று தற்போது இரண்டாம் அலையாக உருவெடுத்து மக்களை அதிக அளவில் தாக்கி வருகிறது. கடந்த முதல் அலையில் முதியவர்கள் அதிகமாக பாதிக்கப்பட்ட நிலையில், தற்போதைய இரண்டாம் அலையில் இளைஞர்கள் அதிகமான அளவில் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இந்நிலையில் மக்கள் அதிர்ச்சி அடையும் வகையில், கொரோனா வைரஸ் தொற்று மூன்றாம் அலையாக உருவெடுக்கும் என்றும் இதில் அதிகளவில் குழந்தைகள் பாதிக்கப்படுவார்கள் என்றும் நிபுணர்கள் எச்சரித்தனர்.

இந்தியாவில் டிவி விலை 3 – 4 சதவீதம் உயர்வு – தயாரிப்பாளர்கள் அறிவிப்பு!

தற்போது இது குறித்து எய்ம்ஸ் இயக்குநர் ரந்தீப் குலேரியா மற்றும் மருத்துவர்கள் அடங்கிய குழுவினர் குழந்தைகளிடம் செரோ ஆய்வை மேற்கொண்டனர். இந்த ஆய்வு 5 மாநிலங்களில் நடத்தப்பட்டது. அதில் 2 முதல் 17 வயது வரையிலான 700 குழந்தைகள் மற்றும் 18 வயதுக்கு மேற்பட்டவர்கள் 3,809 பேர் என மொத்தம் 4,509 பேர் ஆய்வில் கலந்து கொண்டார். இந்த ஆய்வு மூலம் ஓர் வியக்கத்தக்க அறிக்கை ஒன்று வெளியாகியுள்ளது.

TN Job “FB  Group” Join Now

அதன்படி குழந்தைகளின் செரோ பரவல் 55.7 சதவீதமாகவும், பெரியவர்களின் விகிதம் 63.5 சதவீதமாகவும் இருந்துள்ளது. அந்த வகையில் புள்ளி விவர ரீதியாக குறிப்பிட்ட வேறுபாடுகள் இல்லை என்று கண்டறியப்பட்டுள்ளது. தற்போது குழந்தைகளின் செரோ விகிதம் அதிகமாக இருப்பதாலும், பெரியவர்களுடன் ஒப்பிடக்கூடிய அளவில் இருப்பதாலும் கொரோனாவின் மூன்றாம் அலையில் குழந்தைகள் அதிக அளவில் பாதிக்கப்பட மாட்டார்கள் என்று நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!