தமிழக அரசு ஊழியர்கள் கவனத்திற்கு – தலைமை செயலாளர் அறிவிப்பு!!

0
தமிழக அரசு ஊழியர்கள் கவனத்திற்கு - தலைமை செயலாளர் அறிவிப்பு!!
தமிழக அரசு ஊழியர்கள் கவனத்திற்கு - தலைமை செயலாளர் அறிவிப்பு!!
தமிழக அரசு ஊழியர்கள் கவனத்திற்கு – தலைமை செயலாளர் அறிவிப்பு!!

தமிழகத்தில் உள்ள அரசு அலுவலகங்களை தூய்மைமிகு மற்றும் எழில்மிகு அலுவலகங்களாக மாற்ற வேண்டும் என்று தலைமை செயலாளர் வெ இறையன்பு அனைத்து ஊழியர்களுக்கும் கடிதம் ஒன்றினை எழுதியுள்ளார்.

தலைமை செயலாளர் கடிதம்

தமிழகத்தில் இருக்கும் அரசு அலுவலகங்கள் பலவும் பல நாட்களாக பராம்பரிக்கபடாமல் தூய்மையற்று இருப்பது அனைவரும் அறிந்த ஒன்று தான். இந்த நிலையினை களைய வேண்டும் என்று அரசு தரப்பில் இருந்து தொடர்ந்து வலியுறுத்தப்பட்டு வந்தது.

TN Job “FB  Group” Join Now

இதனை அடுத்து புதிதாக தலைமையேற்று இருக்கும் தலைமை செயலாளர் வெ இறையன்பு அரசு அலுவலகங்களை தூய்மையாக வைத்திருக்க வேண்டும் என்று அனைத்து பணியாளர்களுக்கும் வலியுறுத்தி வருகிறார். தற்போது இது தொடர்பான ஒரு கடிதம் ஒன்றை வெளியிட்டுள்ளார்.

ஆகஸ்ட் 26ம் தேதி வக்ஃப் வாரிய உறுப்பினர் தேர்தல் – முழு விபரம் இதோ!

அதில் அவர் கூறியிருப்பதாவது, மக்கள் அனைவரும் விரும்பும் தூய்மையான அதே சமயம் எழில்மிகு அரசு அலுவலகம் என்ற சூழலை உருவாக்க வேண்டும். அதற்காக நாம் செய்யவேண்டியது சில விஷயங்கள் தான்.

பின்பற்ற வேண்டிய நடைமுறைகள்

  • முடிவற்ற கோப்புகளை முறைப்படி பாதுகாக்க வேண்டும். அதனை ஆவண அறைக்கோ அல்லது ஆவண காப்பகத்திருக்கோ அனுப்பி குவித்து வைக்க கூடாது.
  • அலுவலகங்களில் பயன்படுத்தாத நாற்காலிகளை உடனடியாக அகற்ற வேண்டும். அறைக்கலன்களை உடனடியாக அகற்ற அதனை ஏலத்தில் விட வேண்டும்.
  • மின்கழிவுகளை முறையாக அகற்றிட வேண்டும். பணியாளர்கள் யாரும் பயன்படுத்தாமல் இருக்கும் கணினிகளை முறையாக ஒரு குழு அமைத்து களைய வேண்டும்.
  • பணியாளர்கள் அனைவரும் தங்களது டேபிளை அழகாக வைத்திருக்க வேண்டும். கோப்புகளை முறையாக அடுக்கி வைக்க வேண்டும். தேவையில்லாத பொருட்களை எடுத்து விட வேண்டும்.
  • அலுவலக சூழலை சுத்தமாக வைத்திருக்க அனைத்து ஊழியர்களும் நடவடிக்கை மற்றும் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும். சுகாதாரத்தினை பேணுவதும், முறையாக கிரிமிநாசினிகளை தெளித்தல் மற்றும் குப்பைகள் அகற்றபடுத்தலை கண்காணிக்க வேண்டும்.
  • அரசு அலுவலகங்களில் உள்ள தூய்மை பணியாளர்கள் மணிக்கு ஒரு முறை கழிவறைகளை சுத்தம் செய்ய வேண்டும். கழிவறைகள் அனைத்தும் விமான நிலையங்களில் உள்ள ஓய்வறைகள் போல மாற தகுந்த நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.
  • அலுவலகங்களுக்கு வரும் பார்வையாளர்கள் தேவையின்றி தாழ்வாரங்களில் உலவுவதை தவிர்க்க அதிகாரிகள் அவர்களை பார்ப்பதற்கு என்று ஒரு நேரத்தினை ஒதுக்கி அதனை செயல்படுத்த வேண்டும்.
  • தலைமை அதிகாரிகள் தனது அலுவலகத்தை மட்டுமல்லாது, தனக்கு கீழ் செயல்படும் அலுவலகங்களையும் அவ்வப்போது சென்று ஆய்வு மேற்கொள்ள வேண்டும். அதன் மூலமாக அலுவலக தூய்மையினை உறுதி செய்ய வேண்டும்.

இந்த நடவடிக்கைகளை மேற்கொள்ள எந்த ஒரு செலவும் கிடையாது. அதனால் இதனை அனைவரும் முறையாகவும், தொடர்ச்சியாகவும் 3 வாரங்கள் பின்பற்றினால் அது ஒரு அங்கமாக மாறி விடும். அதனால் அரசு ஊழியர்கள் அனைவரும் இதனை முறையாக பின்பற்ற வேண்டும். அரசு அலுவலகங்களை எழில்மிகு அலுவலகம் என்ற நோக்கத்தினை அடைய வழிவகை செய்ய வேண்டும்.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!