தமிழக அரசின் பெண் குழந்தைகள் பாதுகாப்பு திட்டம் – ஆதார் எண் இணைப்பு கட்டாயம்! அரசாணை வெளியீடு!

0
தமிழக அரசின் பெண் குழந்தைகள் பாதுகாப்பு திட்டம் - ஆதார் எண் இணைப்பு கட்டாயம்! அரசாணை வெளியீடு!
தமிழக அரசின் பெண் குழந்தைகள் பாதுகாப்பு திட்டம் - ஆதார் எண் இணைப்பு கட்டாயம்! அரசாணை வெளியீடு!
தமிழக அரசின் பெண் குழந்தைகள் பாதுகாப்பு திட்டம் – ஆதார் எண் இணைப்பு கட்டாயம்! அரசாணை வெளியீடு!

தமிழகத்தில் முதல்வரின் பெண் குழந்தைகள் பாதுகாப்புத் திட்டத்தின் கீழ் பயன்பெற பயனாளிகளுக்கு ஆதார் எண் கட்டாயம் என தமிழக அரசு புதிய உத்தரவிட்டுள்ளது.

அரசு உத்தரவு:

தமிழக சமூக நலத் துறை சார்பில் முதல்வரின் பெண் குழந்தைகள் பாதுகாப்புத் திட்டம் செயல்பட்டு வருகிறது. அதன் படி பெண் குழந்தைகளின் பெயரில் ரூ.50 ஆயிரம் வைப்புநிதியாக தமிழ்நாடு மின் விசை நிதி நிறுவனத்தில் வைக்கப்படுகிறது. இரண்டு பெண் குழந்தைகள் இருந்தால் தலா ரூ.25 ஆயிரம் வீதம் வைப்பு நிதி செலுத்தப்படுகிறது. அந்த வைப்பு நிதிக்கான ஆவணம், குழந்தையின் பெற்றோரிடம் வழங்கப்படும். இந்த திட்டத்தில் பயன் பெற மத்திய அரசு விதிகள்படி, ஆதார் எண் இணைப்பது கட்டாயம் ஆகும்

Telegram Updates for Latest Jobs & News – Join Now

தமிழகத்தில் இன்று (பிப். 2) பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை – கனமழை எதிரொலி!

அவ்வாறு ஆதார் எண் இணைக்காதவர்கள் பெற்றோர் மூலம் ஆதார் எண்ணுக்கு விண்ணப்பித்து, அதைக் கொண்டு விண்ணப்பிக்க வேண்டும். மேலும், புகைப்படத்துடன் கூடிய வங்கிக் கணக்குப் புத்தகம், பான் அட்டை, கடவுச்சீட்டு, குடும்ப அட்டை, வாக்காளர் அடையாள அட்டை, மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்ட அட்டை, புகைப்படத்துடன் கூடிய கிசான் பாஸ்புக், ஓட்டுநர் உரிமம், தாசில்தார் உள்ளிட்ட சான்றொப்ப அதிகாரியால் வழங்கப்பட்ட புகைப்படத்துடன் கூடிய சான்றிதழ் அல்லது அரசால் அங்கீகரிக்கப்பட்ட ஏதேனும் ஒரு சான்றிதழ் ஆகியவற்றில் ஏதேனும் ஒன்றை இணைத்து, விண்ணப்பிக்க வேண்டும்.

மத்திய அரசு திட்டங்களில் பயன் பெறுபவர்கள் ஆதார் எண்ணை இணைப்பது கட்டாயம் ஆக்கி உள்ள நிலையில், தமிழக அரசின் திட்டங்களிலும் ஆதார் இணைப்பு கட்டாயமாக்கப்பட்டு வருவது இந்த அரசாணையில் மைய கருத்தாக இருக்கிறது.

TNPSC Online Classes

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!