ஜூன் 17ம் தேதி டெல்லி செல்லும் முதல்வர் முக ஸ்டாலின்!!

0
ஜூன் 17ம் தேதி டெல்லி செல்லும் முதல்வர் முக ஸ்டாலின்!!
ஜூன் 17ம் தேதி டெல்லி செல்லும் முதல்வர் முக ஸ்டாலின்!!
ஜூன் 17ம் தேதி டெல்லி செல்லும் முதல்வர் முக ஸ்டாலின்!!

தமிழக முதல்வர் முக ஸ்டாலின் வரும் ஜூன் 17 ஆம் தேதியன்று பிரதமர் மோடி அவர்களை சந்திக்க தலைநகர் டெல்லிக்கு பயணம் மேற்கொள்ள உள்ளார்.

முதல்வர் டெல்லி பயணம்:

திமுக தலைவர் முக ஸ்டாலின் தமிழகத்தின் முதல்வராக கடந்த மாதம் பதவியேற்றார். தேர்தலில் மக்களுக்கு அளித்த முதல் 5 வாக்குறுதிகளை திட்டமாக மாற்றி செயல்படுத்தினார். கொரோனா வைரஸ் தொற்றால் தமிழகம் பெரும் இழப்புகளை சந்தித்து வருகிறது. இந்த நேரத்தில் தமிழக முதல்வர் பல தடுப்பு பணிகளை மேற்கொண்டு வருகிறார். ஆட்சி பொறுப்பு ஏற்கும் முன்னரே மருத்துவ குழு மற்றும் சுகாதாரத் துறையுடன் ஆலோசனைகளை நடத்தி தேவையான பணிகளை ஓய்வில்லாமல் செய்து வருகிறார்.

தமிழகத்தின் 27 மாவட்டங்களில் டாஸ்மாக் கடைகளை திறக்க அனுமதி – ஜூன் 21 வரை ஊரடங்கு நீட்டிப்பு!

கொரோனா தடுப்பு பணிகளை மாவட்டங்களுக்கு சென்று நேரில் ஆய்வு செய்து மாவட்ட ஆட்சியாளர்களுடன் கலந்தாலோசனையில் ஈடுபட்டு உரிய நடவடிக்கைகளை எடுக்க உத்தரவிட்டு வருகிறார் முதல்வர். மேலும் அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு ரேஷன் கடைகள் மூலம் 4000 ரூபாய் நிதி உதவியும், 14 வகையான மளிகை பொருட்களையும் வழங்க உத்தரவிடப்பட்டு உள்ளது. கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணியை மக்கள் இயக்கமாக மாற்றியுள்ளார்.

TN Job “FB  Group” Join Now

இதனை தொடர்ந்து வரும் ஜூன் 17ம் தேதி அன்று டெல்லி சென்று பிரதமர் மோடியை சந்திக்க உள்ளார். இந்த சந்திப்பில் தமிழகத்திற்கு கூடுதல் தடுப்பூசிகள் வழங்க வேண்டும். மற்றும் அடுத்த தாக்குதலாக பரவி வரும் பூஞ்சை நோய்களுக்கான முன்னெச்சரிக்கை பணிக்காக மருந்துகள் ஒதுக்கீடு மற்றும் வெகு நாட்களாக தமிழகத்தில் எதிர்ப்பு தெரிவித்து வரும் நீட் தேர்வை ரத்து செய்தல் போன்ற கோரிக்கைகளுக்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என நேரடியாக பிரதமரை சந்தித்து வலியுறுத்தவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றது.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!