மதுரையில் புதிய வசதிகளுடன் பெரியார் நிலையம் – காணொளி மூலம் முதல்வர் திறப்பு!

0
மதுரையில் புதிய வசதிகளுடன் பெரியார் நிலையம் - காணொளி மூலம் முதல்வர் திறப்பு!
மதுரையில் புதிய வசதிகளுடன் பெரியார் நிலையம் - காணொளி மூலம் முதல்வர் திறப்பு!
மதுரையில் புதிய வசதிகளுடன் பெரியார் நிலையம் – காணொளி மூலம் முதல்வர் திறப்பு!

மதுரை மாநகரத்தில் சுமார் 175 கோடி ரூபாய் செலவில் நவீன வசதிகளுடன் கட்டப்பட்டுள்ள புதிய பெரியார் பேருந்து நிலையத்தை மாண்புமிகு தமிழக முதல்வர் முக ஸ்டாலின் இன்று (டிச.8) திறந்து வைக்க இருக்கிறார்.

பேருந்து நிலையம்

தமிழகத்தின் மூன்று முக்கிய நகரங்களான மதுரை, திருநெல்வேலி மற்றும் தஞ்சாவூர் பகுதிகளில் கட்டப்பட்டுள்ள புதிய பேருந்து நிலையங்கள் மக்கள் பயன்பாட்டிற்காக இன்று (டிச.8) முதல் திறக்கப்பட இருக்கிறது. அந்த வகையில் மதுரை மாநகரத்தில் அமைந்துள்ள முக்கிய பேருந்து நிலையங்களில் ஒன்றான பெரியார் பேருந்து நிலையம் கடந்த 1921 ஆம் ஆண்டில் கட்டப்பட்டது. இந்த பேருந்து நிலையம் முதலில் மத்திய பேருந்து நிலையம், மீனாட்சி பேருந்து நிலையம், சென்ட்ரல் பேருந்து நிலையம் என்ற பெயரில் அழைக்கப்பட்டு வந்தது.

மாஸ்அப் பாடலுக்கு கலக்கலாக நடனமாடிய ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ பழைய ஐஸ்வர்யா – குவியும் லைக்குகள்!

பின்னர் 1971ம் ஆண்டில் இது பெரியார் பேருந்து நிலையமாக மாற்றப்பட்டது. இந்த பழமை வாய்ந்த பேருந்து நிலையத்தை ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் நவீன வசதிகளுடன் கட்டமைக்க தமிழக அரசால் சுமார் 175 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டிருந்தது. இதையடுத்து கடந்த 2019ம் ஆண்டு ஜூன் மாதத்தில் பெரியார் பேருந்து நிலையம் முற்றிலுமாக இடிக்கப்பட்டு புதிய கட்டுமான பணிகள் துவங்கியது. இந்த பெரியார் பேருந்து நிலையம் தற்போது 57 பேருந்துகள் நிறுத்தும் அளவிற்கு இட வசதியுடனும், 450 கடைகள் செயல்படுவதற்கான வணிக வளாகத்துடனும் அமைக்கப்பட்டுள்ளது.

தவிர பேருந்து நிலையத்தின் தரை தளத்தில் 2 அடுக்குகளில் 5000 இரு சக்கர வாகனங்களும், 350 நான்கு சக்கர வாகனங்களும் நிறுத்தும் வசதிகளுடன் காத்திருப்பு பகுதி, லிப்ட், நகரும் படிக்கட்டுகள், சுரங்கப்பாதை ஆகியவையும் இடம்பெற்றுள்ளன. மேலும் பேருந்து நிலையத்தின் சுவர்கள் முழுவதும் மதுரையின் பெருமையை பறைசாற்றும் விதத்திலான ஓவியங்கள் வரையப்பட்டுள்ளன. இப்படி நவீன முறையில் அமைக்கப்பட்டுள்ள புதிய பேருந்து நிலையத்தை தமிழக முதல்வர் முக ஸ்டாலின் இன்று (டிச.8) திறந்து வைக்க இருக்கிறார்.

விஜய் டிவி சீரியலில் களமிறங்கும் ‘பிக்பாஸ்’ பிரபலம் – விரைவில் ‘ஈரமான ரோஜாவே’ 2ம் பாகம் ஒளிபரப்பு!

இது தவிர திருநெல்வேலியில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் சுமார் ரூ.110 கோடி செலவில் விரிவாக்கம் செய்யப்பட்டுள்ள பாளையங்கோட்டை புதிய பேருந்து நிலையம் மற்றும் ரூ.30 கோடி செலவில் கட்டப்பட்டுள்ள தஞ்சாவூர் பேருந்து நிலையத்தையும் முதல்வர் முக ஸ்டாலின் இன்று (டிச.8) காணொளி காட்சிகள் வழியாக திறந்து வைக்க இருக்கிறார்.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here