தமிழக அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி 34 சதவீதமாக உயர்வு – முதல்வர் அறிவிப்பு!

0
தமிழக அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி 34 சதவீதமாக உயர்வு - முதல்வர் அறிவிப்பு!
தமிழக அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி 34 சதவீதமாக உயர்வு - முதல்வர் அறிவிப்பு!
தமிழக அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி 34 சதவீதமாக உயர்வு – முதல்வர் அறிவிப்பு!

தமிழக அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்வு வழங்கப்பட வேண்டும் என பல முறை கோரிக்கை வைத்துள்ள நிலையில், நேற்று நடைபெற்ற சுதந்திர தினவிழாவில் அகவிலைப்படி உயர்வு குறித்த அறிவிப்பை முதல்வர் ஸ்டாலின் அறிவித்தார்.

அகவிலைப்படி உயர்வு:

இந்தியாவின் 75வது ஆண்டு சுதந்திரத்தினவிழா நேற்று (ஆகஸ்ட் 15) கொண்டாடப்பட்டது. சென்னையில் தேசிய கோடியை ஏற்றி வைத்த முதல்வர் ஸ்டாலின் அதன் பின் உரையாற்றினார். அதில் மத்திய அரசு ஊழியர்களை போல மாநில அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்வு வழங்கப்பட வேண்டும் என ஊழியர்களின் நீண்ட நாள் கோரிக்கையை ஏற்று அரசின் கடுமையான நிதி சுமைக்கு இடையே அரசு அலுவலர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்கள் மற்றும் குடும்ப ஓய்வூதியதாரர்களுக்கு ஜூலை 1ம் தேதி முதல் அகவிலைப்படி 31 விழுக்காட்டில் இருந்து 34 விழுக்காடாக உயர்த்தி வழங்கப்படும் என அறிவித்தார்.

TN Job “FB  Group” Join Now

மேலும் முதல்வராக பணியேற்று 2 வது முறை கொடியேற்றி வைத்த முதல்வர் ஸ்டாலின் பல்வேறு துறை சாதனையாளர்களுக்கு விருதுகள், பதக்கங்கள் வழங்கி கவுரவித்தார். மேலும் பேசிய அவர் இந்திய சுதந்திரப் போராட்ட வீரர்கள் 1,095 பேருக்கு மாதம்தோறும் தியாகிகளுக்கான நிதிக் கொடையை வழங்கி வருகிறோம். அந்த வகையில், இந்திய விடுதலையின் பவள விழா நிறைவிற்கு மேலும் சிறப்பு சேர்க்கும் சில அறிவிப்புகளைத் தற்போது வெளியிடுவதில் பெருமையடைகிறேன் என தெரிவித்தார்.

அதன் படி ஆகஸ்ட் 15 ஆம் தேதி முதல் மாநில அரசின் இந்திய விடுதலைப் போராட்ட வீரர்களுக்கான மாதாந்திர ஓய்வூதியத் தொகை, ரூ.18 ஆயிரத்தில் இருந்து ரூ.20 ஆயிரமாக உயர்த்தி வழங்கப்படும் என தெரிவித்தார். மேலும் குடும்ப ஓய்வூதியம் ரூ.9 ஆயிரத்தில் இருந்து ரூ.10 ஆயிரமாக உயர்த்தி வழங்கப்படும் எனவும், வீரபாண்டிய கட்டபொம்மனின் வழித்தோன்றல்கள், சிவகங்கை மருதுபாண்டியர் சகோதரர்களின் வழித்தோன்றல்கள், சிவகங்கை முத்துராமலிங்க விஜயரகுநாத சேதுபதியின் வழித்தோன்றல்கள், வ.உ.சிதம்பரனார் வழித்தோன்றல்களுக்கான மாதாந்திர சிறப்பு ஓய்வூதியம் ரூ.9 ஆயிரத்தில் இருந்து ரூ.10 ஆயிரமாக உயர்த்தி வழங்கப்படும் என தெரிவித்தார்.

கோபி உடைகளை எடுத்து வைத்த பாக்கியா, அதிர்ச்சியில் குடும்பத்தினர் – இன்றைய “பாக்கியலட்சுமி” எபிசோட்!

அகவிலைப்படி 31 விழுக்காட்டில் இருந்து 34 விழுக்காடாக உயர்த்தி வழங்கப்பட இருக்கும் நிலையில் இதன் மூலம் 16 லட்சம் பேர் பயனடைவார்கள். ஆனால் இதன் மூலம் ஆண்டுக்கு ரூ.1,947 கோடியே 60 லட்சம் கூடுதலாகச் செலவாகும் என தெரிவித்தார். 75 ஆண்டு கால விடுதலை இந்தியாவின் வரலாற்றை, மேல் நோக்கி நகர்த்துவதற்கு நாம் அனைவரும் ஒன்று சேர்ந்து, ஒற்றுமை உணர்வோடு வாழ்வோம். அனைத்து துறைகளிலும் தன்னிறைவு பெற்ற மாநிலங்களின் மூலமாக ஒன்றிய இந்தியாவை வளப்படுத்துவோம். வேற்றுமையில் ஒற்றுமை காண்போம். ஒற்றுமையில் மகிழ்ச்சியைக் காண்போம். மக்கள் மகிழ்ச்சியில் மனநிறைவை அடைவோம். மக்களின் மனநிறைவே நாட்டின் வளர்ச்சி என்பதை ஓங்கிச் சொல்வோம் என பேசினார்.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!