தமிழகத்தில் ஆன்லைன் ரம்மி விளையாட்டிற்கு தடை? முதல்வர் ஆலோசனை!

0
தமிழகத்தில் ஆன்லைன் ரம்மி விளையாட்டிற்கு தடை? முதல்வர் ஆலோசனை!
தமிழகத்தில் ஆன்லைன் ரம்மி விளையாட்டிற்கு தடை? முதல்வர் ஆலோசனை!
தமிழகத்தில் ஆன்லைன் ரம்மி விளையாட்டிற்கு தடை? முதல்வர் ஆலோசனை!

தமிழகத்தில் ஆன்லைன் ரம்மி விளையாட்டை தடை செய்ய வேண்டும் என்று பல்வேறு தரப்பினரும் கோரிக்கை விடுத்து வருகின்றனர். இதனையடுத்து ஆன்லைன் ரம்மியை தடை செய்ய சட்டம் இயற்றுவது குறித்து முதல்வர் ஆலோசனை நடத்த உள்ளார்.

ஆன்லைன் ரம்மி:

நாடு முழுவதும் ஆன்லைன் ரம்மி விளையாட்டு மிகவும் பிரபலமாக உள்ளது. தற்போது சிறுவர்கள் தொடங்கி பெரியவர்கள் வரை பலரும் இந்த ஆன்லைன் ரம்மி விளையாட்டுக்கு அடிமையாகிவிட்டனர். இந்த ரம்மி விளையாட்டு மூலம் பணம் சம்பாதிக்க முடியும் என்ற ஆசையில் மக்கள் தங்களிடம் உள்ள பணத்தை முதலீடு செய்து ஏமாந்து விடுகின்றனர். இந்த ஆன்லைன் ரம்மி விளையாட்டுக்கு ஜாய்னிங் போனஸ் என்ற பெயரில் 5,000 ரூபாய் கொடுக்கின்றனர். தற்போது இந்தத் தொகை அதிகரித்து விட்டது. அதனால் ஆன்லைன் ரம்மி விளையாடுபவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளது.

இவர்கள் அதிக பணம் சம்பாரிக்க வேண்டும் என்ற நோக்கில் தங்களிடம் உள்ள மொத்த பணத்தையும் இழந்து கடைசியில் தற்கொலை செய்யும் அளவிற்கு செல்கின்றனர். அதிலும் தமிழகத்தில் ஆன்லைன் ரம்மியால் ஏற்படும் உயிரிழப்புகள் அதிகரித்து வருகின்றன. மேலும் இந்த ஆன்லைன் விளையாட்டால் கற்றல் குறைபாடுகள் மற்றும் பல சமூக ஒழுக்க சீர்கேடுகளும் ஏற்படுகிறது. அதனால் ஆன்லைன் ரம்மி விளையாட்டை தடை செய்ய வேண்டும் என்று சமீப காலமாக பல கோரிக்கைகள் எழுந்து வருகிறது.

தமிழகத்தில் மாணவர்களின் பாதுகாப்பு குறித்து முக்கிய அறிவிப்பு – கல்வித்துறை அதிரடி!

இதனையடுத்து தமிழகத்தில் அவசர சட்டம் இயற்றுவதற்காக தமிழக அரசுக்கு பரிந்துரைகள் வழங்க ஓய்வுபெற்ற நீதிபதி சந்துரு தலைமையில் குழு அமைக்கப்பட்டது. தற்போது இந்த குழு தனது அறிக்கையை அரசிடம் சமர்ப்பித்துள்ளது. இதனையடுத்து உள்துறை செயலாளர் மற்றும் அதிகாரிகளுடன் தமிழக முதலமைச்சர் முக ஸ்டாலின் அவர்கள் ஆலோசனை நடத்தி வருகிறார். தற்போது சென்னை தலைமைச் செயலகத்தில் இன்று நடைபெறும் ஆலோசனை கூட்டத்தில் சட்டத்துறை மற்றும் காவல்துறை உயர் அதிகாரிகள் பங்கேற்று உள்ளனர்.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!