தமிழகத்தில் நவ.1 முதல் பள்ளிகள் திறப்பு ஒத்திவைப்பு? ஊரடங்கில் கூடுதல் தளர்வுகள் – முதல்வர் ஆலோசனை!
தமிழகம் முழுவதும் கொரோனா நோய் தொற்று பாதிப்பு பரவலாக குறைந்து வருவதால், வரும் மாதம் முதல் ஊரடங்கு கட்டுப்பாடுகளில் இருந்து மேலும் சில தளர்வுகளை அளிப்பது தொடர்பாக முதல்வர் முக ஸ்டாலின் நாளை (அக்.22) முக்கிய ஆலோசனையில் ஈடுபட இருக்கிறார்.
ஊரடங்கு தளர்வுகள்
கடந்த ஏப்ரல் மாதம் முதல் நாடு முழுவதும் தீவிரமடைந்து வந்த கொரோனா 2ம் அலை காரணமாக தமிழகம் முழுவதும் மே மாதம் முதல் முழு ஊரடங்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டது. இந்த கட்டுப்பாடுகள் தொடர்ந்து பல கட்டமாக நீட்டிக்கப்பட்டு வந்த நிலையில் தற்போது அக்டோபர் மாதம் 31ம் தேதி வரை அமல்படுத்தபட்டுள்ளது. இதற்கிடையில் நோய் பரவல் பாதிப்பை கவனத்தில் கொண்டு கடந்த ஜூலை மாதம் முதலே பல்வேறு செயல்பாடுகளுக்கு அரசு அனுமதி அளித்திருந்தது. அந்த வகையில் சமீபத்திலும், வார இறுதி நாட்களில் மத வழிபாட்டு தலங்களுக்கு விதிக்கப்பட்டிருந்த கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டது.
தமிழகத்தில் நாளை (அக்.22) மின்தடை ஏற்பட உள்ள பகுதிகள் – மின்வாரியம் அறிவிப்பு!
இதனுடன் வரும் நவம்பர் மாதம் 1ம் தேதி முதல் 1 முதல் 8ம் வகுப்பு வரையுள்ள மாணவர்களுக்கு பள்ளிகள் மீண்டுமாக திறக்கப்பட இருக்கிறது. இந்நிலையில் வரும் நவம்பர் மாதம் 4ம் தேதி தமிழகம் முழுவதும் தீபாவளி பண்டிகை கொண்டாப்பட இருப்பதால் அதற்கான துணிகள், இனிப்புகள், பட்டாசுகள் ஆகியவற்றை வாங்குவதற்கு கடைகளில் அதிகளவு கூட்டம் காணப்பட்டு வருகிறது. மேலும் தமிழகத்தில் தற்போது நோய் தொற்று பரவலும் வெகுவாக குறைந்திருப்பதால் ஊரடங்கில் இருந்து கூடுதல் தளர்வுகளை அளிப்பது குறித்து முதல்வர் முக ஸ்டாலின் நாளை (அக்.23) ஆலோசனை நடத்த இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
மத்திய அரசு ஊழியர்களுக்கு ஷாக் அறிவிப்பு – தீபாவளிக்கு பாதி போனஸ் தான்!
அந்த வகையில் சென்னை தலைமைச் செயலகத்தில் நாளை (அக்.23) காலை 11.30 மணியளவில் நடைபெறும் இந்த ஆலோசனை கூட்டத்தில் தமிழக தலைமைச்செயலர், மருத்துவத்துறை அதிகாரிகள் உள்ளிட்ட பல்வேறு துறைகளின் செயலர்கள், உயர் அதிகாரிகள் ஆகியோர் கலந்து கொள்ள உள்ளனர். மேலும் வரும் நவம்பர் மாதம் கொண்டாடப்பட இருக்கும் தீபாவளி பண்டிகையையொட்டி பள்ளிகள் திறப்பை தள்ளி வைக்க வேண்டும் என்று எழுப்பப்பட்டு வரும் கோரிக்கை குறித்தும் இந்த கூட்டத்தில் ஆலோசனை செய்யப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
நல்ல முடிவு எடுங்கள்