அக்.1 முதல் இந்த வங்கிகளின் செக் புக் செல்லாது – PNB அறிவிப்பு!

0
அக்.1 முதல் இந்த வங்கிகளின் செக் புக் செல்லாது - PNB அறிவிப்பு!
அக்.1 முதல் இந்த வங்கிகளின் செக் புக் செல்லாது - PNB அறிவிப்பு!
அக்.1 முதல் இந்த வங்கிகளின் செக் புக் செல்லாது – PNB அறிவிப்பு!

பஞ்சாப் நேஷனல் வங்கி (PNB) யுடன் இணைக்கப்பட்டுள்ள ஓரியண்டல் பேங்க் ஆப் காமர்ஸ் மற்றும் யுனைடெட் பேங்க் ஆப் இந்தியா ஆகிய வங்கிகளின் காசோலை புத்தகங்கள் வரும் அக்டோபர் மாதம் 1ம் தேதி முதல் நிறுத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

காசோலை புத்தகம்

இந்தியா முழுவதும் செயல்பட்டு வரும் வங்கி நிறுவனங்களில் பல புதிய மாற்றங்கள் தொடர்ச்சியாக அறிவிக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் கடந்த ஏப்ரல் முதல் சிறிய நிதித்துறை வங்கிகள் பலவும் பெரிய வங்கிகளுடன் இணைக்கப்பட்டுள்ளன. இது தவிர SBI போன்ற முன்னணி பொதுத்துறை வங்கிகளின் ஆன்லைன் சேவைகளும் விரிவுபடுத்தப்பட்டுள்ளன. அந்த வரிசையில் தற்போது, பஞ்சாப் நேஷனல் வங்கி (PNB) தனது வாடிக்கையாளர்களின் காசோலை புத்தகங்களை நிறுத்துவதாக கடந்த செப்டம்பர் மாத தொடக்கத்தில் அறிவித்திருந்தது.

தமிழகத்தில் செப்.23ம் தேதி மின்தடை ஏற்படும் பகுதிகள் – மின்வாரியம் அறிவிப்பு!

அதாவது பஞ்சாப் நேஷனல் வங்கி (PNB)யுடன் இணைக்கப்பட்டுள்ள ஓரியண்டல் பேங்க் ஆப் காமர்ஸ் மற்றும் யுனைடெட் பேங்க் ஆப் இந்தியா ஆகிய வங்கிகளின் வாடிக்கையாளர்களது காசோலை புத்தக சேவைகளை நிறுத்துவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதனால் வாடிக்கையாளர்கள் அக்டோபர் மாதம் 1ம் தேதிக்குள் PNB வங்கியின் புதிய காசோலைகளை பெற்றுக்கொள்ளும் படி அறிவுறுத்தப்பட்டு வந்தது. அந்த வகையில், பஞ்சாப் நேஷனல் வங்கி அறிவித்துள்ள இப்புதிய மாற்றம் அக்டோபர் 1 முதல் நடைமுறைக்கு வர உள்ளது.

அதனால் OBC மற்றும் UNI வங்கிகளின் வாடிக்கையாளர்கள் தங்கள் பழைய காசோலை புத்தகங்களை விரைவில் மாற்றுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர். குறிப்பாக PNB காசோலை புத்தகத்துடன் புதுப்பிக்கப்பட்ட IFSC மற்றும் MICR கோடுகளை மாற்றவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. அதனால் OBC மற்றும் UNI வங்கிகளில் கணக்கு வைத்திருப்பவர்கள் PNB வங்கி கிளைகள் வழியாக புதிய காசோலை புத்தகங்களுக்கு விண்ணப்பிக்கலாம்.

மாற்றாக, வாடிக்கையாளர்கள் அந்தந்த வங்கிகளின் ATM, இணைய வங்கி, PNB ஒன் அல்லது அதிகாரப்பூர்வ அழைப்பு மையங்கள் மூலமாகவும் காசோலை புத்தகத்துக்கு விண்ணப்பம் செய்யலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக கூடுதம் விவரங்களை அறிந்துகொள்ள, 1800-180-2222 என்ற கட்டணமில்லா தொலைபேசி எண்ணை தொடர்பு கொள்ளலாம் என PNB தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளது.

தமிழக அரசு ஊழியர்களுக்கு ஆறு நாட்கள் சிறப்பு தற்செயல் விடுப்பு – அரசாணை வெளியீடு!

இது தவிர அக்டோபர் மாதம் முதல் பஞ்சாப் நேஷனல் வங்கியில் சில கூடுதல் மாற்றங்கள் ஏற்படுத்தப்பட உள்ளன. அதன் கீழ், PNB வங்கி அதன் பண்டிகை கால சலுகையின் ஒரு பகுதியாக சில்லறை பொருட்களின் அனைத்து சேவை மற்றும் செயலாக்க கட்டணங்களையும் தள்ளுபடி செய்வதாக அறிவித்துள்ளது. அதனுடன், வங்கி வீட்டுக் கடனுக்கு 6.80% மற்றும் கார் கடனுக்கு 7.15% என்று வட்டி விகிதங்களை PNB வழங்குகிறது. இதே போல அக்டோபர் 1 முதல் அலகாபாத் வங்கியின் காசோலை புத்தகங்களில் சில மாற்றங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!