சென்னையில் நேற்று (நவ. 21) கடுமையான குளிர்.. பொதுமக்கள் அச்சம் – காரணம் இதுவா?

0
சென்னையில் நேற்று (நவ. 21) கடுமையான குளிர்.. பொதுமக்கள் அச்சம் - காரணம் இதுவா?
சென்னையில் நேற்று (நவ. 21) கடுமையான குளிர்.. பொதுமக்கள் அச்சம் - காரணம் இதுவா?
சென்னையில் நேற்று (நவ. 21) கடுமையான குளிர்.. பொதுமக்கள் அச்சம் – காரணம் இதுவா?

சென்னையில் நேற்று முழுவதும் பயங்கர குளிர் நிலவி வந்ததால் பொதுமக்கள் அச்சத்தில் இருந்தனர். இந்நிலையில் அதற்கான காரணம் என்ன என்பது குறித்து தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் தனது பேஸ்புக் பக்கத்தில் விளக்கம் கொடுத்து இருக்கிறார்.

கடும் குளிர்:

பொதுவாக தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் அதிக வெப்பமாகவும், அதிகம் மழை பெய்யும் மாவட்டமாக சென்னை தான் இருக்கிறது. எந்த இயற்கை சீற்றம் என்றாலும் அதில் முதலில் பாதிக்கப்படுவது சென்னை தான். அந்த வகையில் தற்போது மழை காலமாக இருக்கும் நிலையில், நேற்று சென்னை முழுவதும் பயங்கர குளிர் நிலவியது. ஒரு பக்கம் பகலில் வெயில் அடித்தாலும், கடும் குளிரும் நிலவியது. அதற்கு என்ன காரணம் என்பது குறித்து தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் தனது பேஸ்புக் பக்கத்தில் விளக்கம் கொடுத்து இருக்கிறார்.

Follow our Instagram for more Latest Updates

அதில் சென்னையில் இது போல குளிர் நிலவுவது இது முதல்முறை இல்லை. 1976 ஆம் ஆண்டு முதல் இப்படி ஆண்டுக்கு ஒரு முறை வரும். மே மாதத்தில் புயலானது வங்கக் கடலில் உருவாகி அங்கேயே நிலவினால் அது வடக்கிலிருந்து வறண்ட காற்றை இழுக்கும். இதனால் நில பகுதியில் 40 செல்சியஸை வெப்பநிலை இருக்கும். அது போல் நவம்பர் மாதத்தில் வங்கக் கடலில் உருவாகும் காற்றழுத்தமோ புயலோ மழையை கொடுக்காமல் அப்படியே தங்குவதால் கடுமையான குளிர் ஏற்படும். அந்த நிலைமை தான் சென்னைக்கு நேற்று ஏற்பட்டு இருப்பதாக அவர் தெரிவித்துள்ளார். பல ஆண்டுகளில் இது போல குளிர் நிலவி இருப்பதாக அவர் விளக்கம் கொடுத்து இருக்கிறார்.

TNPSC Online Classes

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!