சென்னை பல்கலைக்கழகத்தில் 117 பேரின் தேர்வு முடிவுகள் ரத்து – மெகா மோசடி அம்பலம்!

0
சென்னை பல்கலைக்கழகத்தில் 117 பேரின் தேர்வு முடிவுகள் ரத்து - மெகா மோசடி அம்பலம்!
சென்னை பல்கலைக்கழகத்தில் 117 பேரின் தேர்வு முடிவுகள் ரத்து - மெகா மோசடி அம்பலம்!
சென்னை பல்கலைக்கழகத்தில் 117 பேரின் தேர்வு முடிவுகள் ரத்து – மெகா மோசடி அம்பலம்!

சென்னை பல்கலைக்கழகத்தில் படிக்காமலேயே ஆன்லைன் தேர்வில் பங்கேற்று மோசடி செய்து டிகிரி வாங்க முயன்ற 117 நபர்கள் சிக்கி கொண்டனர். இதனால் அவர்களின் தேர்வு முடிவுகள் ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டு உள்ளது.

தேர்வு முடிவுகள்:

கொரோனா அச்சுறுத்தலால் கடந்த ஆண்டு முழுவதும் பள்ளி மற்றும் கல்லூரிகளில் நேரடி வகுப்புகள் ரத்து செய்யப்பட்டு ஆன்லைன் மூலம் வகுப்புகள் நடத்தப்பட்டு வந்தன. அதேபோல் தேர்வும் ஆன்லைனில் நடத்தப்பட்டது. அந்த சமயத்தில் பல வருடங்களுக்கு முன்னர் கல்லூரி முடித்தும் அரியர் வைத்துள்ள மாணவர்களுக்காக சிறப்பு தேர்வை பல்கலைக்கழகங்கள் அறிவித்தது. அதன் அடிப்படையில் 1980-81 ஆம் கல்வியாண்டு முதல் தற்போது வரை அரியர் வைத்துள்ள மாணவர்கள், சிறப்பு வாய்ப்பாக ஆன்லைன் தேர்வில் பங்கேற்று தேர்ச்சி பெறலாம் என்று சென்னை பல்கலைக்கழகத்தின் தொலைதூரக் கல்வி இயக்ககம் அறிவித்திருந்தது.

TCS, Wipro உட்பட 40 முன்னணி நிறுவனங்கள் பங்கேற்கும் வேலைவாய்ப்பு முகாம் – இளைஞர்கள் கவனத்திற்கு!

அதன்படி கடந்த ஆண்டு டிசம்பர், நடப்பு ஆண்டு ஏப்ரல் மற்றும் நவம்பர் ஆகிய மாதங்களில் அரியர் வைத்தவர்கள் ஆன்லைன் தேர்வுகளில் கலந்து கொள்ளலாம் என 3 வாய்ப்புகள் வழங்கப்பட்டன. இந்த வாய்ப்பை பயன்படுத்தி கொண்ட தனியார் தொலைதூர கல்வி மையங்கள் ஆன்லைன் தேர்வில் மோசடி செய்து படிக்காத நபர்களுக்கு பட்டம் வாங்கி கொடுக்க முயன்றது. அதன் அடிப்படையில் ஒரு நபருக்கு தலா 3 லட்சம் வீதம் பணங்களை வாங்கி கொண்டு மோசடி செய்துள்ளது. படிப்பினை முடித்ததாக போலி சான்றிதழ்களை தயார் செய்து, அதன் அடிப்படையில் ஆன்லைன் தேர்வு கட்டணம் செலுத்தி இந்த மோசடி அரங்கேற்றப்பட்டுள்ளது. பெரும்பாலானோர் பி.காம் மற்றும் பி.பி.ஏ ஆகிய பட்டங்களை குறிவைத்துள்ளனர்

ATM, கிரெடிட் கார்டு பயன்படுத்துவோர் கவனத்திற்கு – ஜன.1 முதல் அமலாகும் விதிமுறைகள்!

கடந்த ஆண்டு டிசம்பர் மாதத்தில் ஆன்லைன் தேர்வு எழுதிய சிலர் தங்கள் பட்டங்களை வழங்குமாறும் பல்கலைக்கழகத்தை அணுகிய போது அவர்கள் செய்த மோசடி வெளிச்சத்திற்கு வந்தது. தொலைதூர கல்வி நிறுவனத்தில் பயின்றதற்கான கல்விக்கட்டணம், சேர்க்கை விவரங்கள் பதிவேடுகளில் இல்லாததால் மோசடி செய்து ஆன்லைன் தேர்வு எழுதிய 117 பேர் சிக்கிக் கொண்டனர். அதிமுக ஆட்சி காலத்தில் இந்த மோசடியில் மேலும் பலர் சிக்கக்கூடும் என்று கூறப்படுகிறது. சென்னை பல்கலைக்கழகம் கண்டறியப்பட்ட மோசடியில் ஈடுபட்டவர்களின் (117 பேர்) தேர்வு முடிவுகளை ரத்து செய்துள்ளது. இந்த மோசடிக்கு துணை போன பல்கலைக்கழக அதிகாரிகள், தனியார் தொலைதூர கல்வி மையங்கள் குறித்து விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளது.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here